Monday, March 4, 2013

சுற்றித் திரியும் மனிதரிடம் பிரவாகமெடுக்கிறது கலைத்திறன்


சுற்றித் திரியும் மனிதரிடம் பிரவாகமெடுக்கிறது கலைத்திறன்




உலகின் கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ ஓர் மூலையில் சுற்றித் திரியும் மனிதரிடம் பொங்கும் புது வெள்ளமாய் பிரவாகமெடுக்கிறது கலைத்திறன். அது என்ன?

பத்து நிமிடத்தில் ஒரு சித்திரம்:

அழுக்கேறிய உடையில் உள்ள இந்த எளிய மனிதரை ஏன் இத்தனைபேரும் கட்டி அணைத்தும், முத்தம் கொடுத்தும் தங்களது அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்கள்? இந்த மனிதரின் கரிபடிந்த கையில் அவரவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பணத்தை திணித்துப் பாராட்டுவது எதற்காக? பச்சை இலை, அடுப்புக்கரி, சாக்பீஸ் போன்ற சாதாரண பொருட்களைக் கொண்டு வெறும் பத்தே நிமிடத்தில் இந்த கலைஞன் வரைந்த ஓவியங்களுக்காக கிடைத்த பாராட்டு மழைதான் இது.

வாய்ப்பைத் தேடும் கலைஞன்:

கலைநயமிக்க இந்த ஓவியங்களைக் கண்டு ரசிக்கும் யாரேனும் தனக்கு வேலைவாய்ப்பை காட்டுவார்களா என்ற எதிர்பார்ப்பில்தான், தனது திறமைகளை இப்படி வெளிப்படுத்துவதாக கூறுகிறார் தஞ்சையைச் சேர்ந்த ஓவியர் சுதானந்தம் .

காண்போரைக் கவரும் ஓவியம்:

சாலையோர சுவர்களை, தனது வண்ணமயமான ஓவியங்களால் அலங்கரிக்கும் இவரது வாழ்க்கையோ, இன்னும் வெற்றுச் சுவராகவே இருக்கிறது.

(நன்றி: புதிய தலைமுறை...)

No comments: