Saturday, March 16, 2013

தெரிந்து கொள்வோமா-46 [தமிழின் தொன்மை...]


வள்ளுவம் தோன்றியது குமரி மலையில் தான் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை. திருவள்ளுவரின் காலம் கி.மு 3 - ம் நூற்றாண்டாக இருக்கக் கூடும். மேலும் இதனை மெய்ப்பிக்கும் விதமாக தற்பொழுது ஆராய்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதில் என்னை ஆச்சரியப்படுத்திய சில உண்மைகள் :
1. இந்தியாவிலேயே படிப்பறிவு சதவீதம் அதிகம் பெற்றது தென் இந்தியாவில் உள்ள கேரளா.
2. தமிழகத்திலேயே படிப்பறிவு சதவீதம் அதிகம் பெற்றது குமரி மாவட்டம்.
3. இந்தியாவின் ISRO -வில் உள்ள 80 % பேர் தென் தமிழகத்தையும், கேரளத்தையும் சார்ந்தவர்கள்.
4. புகழ் பெற்ற விஞ்ஞானியான சார்லஸ் டார்வின் தனது மனிதத்தோன்றல் பற்றிய ஆராய்ச்சியின்
முடிவாக குரங்கிலிருந்து சிந்திக்கும் திறன் பெற்ற மனிதக்குரங்குகள் முதன் முதலில் தோன்றிய இடமாக
குமரி மாவட்டத்துக்கு அருகில் தற்பொழுது கடலில் மூழ்கியுள்ள (குமரிக் கண்டம்) லெமூரியா கண்டத்தையே
குறிப்பிடுகிறார். பிரடெரிக் ஏஞ்சல்ஸ் மற்றும் பிலிப் சிலேட்டர் போன்ற விஞ்ஞாணிகளும் இதையே கூறினார்.

(இந்த உண்மை தற்பொழுதுதான் வெளிவந்துள்ளது)
5. அமெரிக்காவின் NASA விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் 60 % இந்தியர்களில் ஏறத்தாழ 80 % பேர் தென்
இந்தியாவை குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சார்ந்தவர்கள்.
--------உலகின் வேறெந்த பகுதியைக் காட்டிலும் இந்தப் பகுதியிலே சூரியனின் ஒளி ஆற்றல் மிகுதியாக கிடைக்கிறது. சூரிய ஒளியே மனிதனின் சிந்திக்கும் ஆற்றலின் மூலம் என்பதை நாம் அறிவோம். இதை விட ஒரு மிக முக்கியமான உண்மை என்னவெனில்? பூமிப் பந்து தன் அச்சைப் பற்றிச் சுழலும் போது புவி நடுவரைக் கோட்டுப் பகுதியே மீப்பெரும் திசை வேகத்தைப் பெறுகிறது. இதற்கும் மனித சிந்தனைக்கும் தொடர்பு உள்ளதாக தற்பொழுது விஞ்ஞானிகளின் கருத்து. இப்பகுதியில் தான் வள்ளுவன் நாடு, நாஞ்சில் நாடு மற்றும் அகத்தியர் வாழ்ந்த பொதிகை மலை உள்ளது. மேலும் ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன் பாலை நாடு, ஏழ்பின் பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குண காரை நாடு, ஏழ்குறும்பனை நாடு, குமரிக் கொல்லம், பன்மலை நாடு போன்ற 49 நாடுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ளன. ஆனால் தற்பொழுது இவை அனைத்தும் கடலில் மூழ்கி விட்டன. இப்பொழுது கன்னியாகுமரியில் உள்ளதாக நாம் நினைத்துக் கொண்டிருப்பது அவற்றின் எச்சமே ஆகும். இந்த எச்சப்பகுதியிலேயே இவளவு அறிவு சார் மக்கள் இருந்தால், மூழ்கிய பகுதியில் எப்படி இருந்திருப்பார்கள் என எண்ணிப் பார்கிறேன். ஆனால் திருவள்ளுவர் வாழ்ந்தது இப்பொழுது இருக்கும் குமரி மாவட்டத்திலுள்ள வள்ளுவ நாடு என்ற மலை கிராமமே ஆகும். இப்படி ஆராய்சிகள் போய்க் கொண்டு இருக்கின்றன. தாங்கள் இது போன்று ஆராய்ச்சியிலும் நமது குலத்தைச் சார்ந்த பலரும் வர வேண்டும் என்பது எனது விருப்பம்.

No comments: