Friday, December 4, 2015

ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு உருளைக்கிழங்கு

ஒரு ஊர்ல...
ஒரு வெங்காயம், ஒரு தக்காளி,
ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.
ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.

அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு.
அதை கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க.
சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்கு கிளம்பினாங்க.

போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில ஆக்ஸிடண்ட் ஆகி தக்காளி நசுங்கி செத்துப் போச்சு.
அதை பார்த்து வெக்ஸ் ஆன வெங்காயம், கதறி கதறி அழுதது.

தனியாகி போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி, "உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம்.
இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா...?" ன்னு கேட்டு,
"ஓ..." ன்னு அழுதுச்சு.

அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், "சரி..., இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க" ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதான படுத்தினாராம்.

(ஸோ..., இனிமே யாராச்சும், "வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது" ன்னு கேட்டா, 'திருதிரு'ன்னு முழிக்காம, சோகமான இந்த திக் ஃப்ரெண்ட்ஸ் கதைய தெரியப்படுத்துங்க)

Marriage

Thursday, December 3, 2015

தலைக்கு ஷாம்பு வந்தப்புறம் தான் முடிய இழந்துகிட்டு இருக்கோம்.

தலைக்கு ஷாம்பு வந்தப்புறம் தான் முடிய இழந்துகிட்டு இருக்கோம்.

பல்லுக்கு பேஸ்ட் வந்தப்புறம் தான் பல்ல இழந்துகிட்டு இருக்கோம்.

ஒடம்புக்கு சோப்பு வந்தப்புறம் அழகான தோல இழந்துகிட்டு இருக்கோம்.

ஹைஜீனிக்ன்னு வந்தப்புறம் தான் நோயெதிர்ப்பு சக்தியையும் இழந்துகிட்டு இருக்கோம்.

நாப்கின் வந்தப்புறம் தான் கர்பப்பையை இழந்துகிட்டு இருக்கோம்.

மருத்துவமனைகள் வந்தப்புறம் தான் ஆரோக்கியத்த இழந்துகிட்டு இருக்கோம்.

ஆங்கிலப்பள்ளிகள் வந்தப்புறம் தான் சிந்தனை திறனை இழந்துகிட்டு இருக்கோம்.

சுதந்திரம் வந்தப்புறம் தான் சுதந்திரத்தையும் இழந்துகிட்டு இருக்கோம்.

எதுனா புரியுதா?
இதுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு தெரியுதா?

வியாபாரம்! வியாபாரம்!

இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்கிறது.

இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்கிறது.

அதன் போக்கில் குறுக்கிடாமல் இருந்தால், இப்படி கடுமையான சேதம் இருக்காது.

ஏரிகளையும், குளங்களையும் ப்ளாட் போட்டு விற்று விடுவோம். வாய்க்கால் களையும் வடிகால்களையும் விற்று ஏப்பம் விடுவோம். ஆற்றின் குறுக்கே வீடுகட்டுவோம். ஆற்றங் கரைகளையும் ஏரிகளையும் ஆக்கிரமிப்போம். சுறுங்காத ஆறுகளும் ஏரிகளும் தமிழ்நாட்டில் உண்டா?

முன்பு ஊருக்கு பத்து குட்டைகளாவது இருந்திருக்கும்; அவைகள் எங்கே? ஒன்று விடாமல் எல்லாவற்றையும் தூர்த்து விட்டோம்.

பின் மழைநீர் எங்குதான் செல்லும்?

மனிதனின் பேராசைக்கு அளவே இல்லாமற் போய்விட்டது. அக்காலத்தில் ஊர் மராமத்து என்று நடக்கும். இப்போது? 100 நாள் வேலைத்திட்டத்தின் நிலைமை பற்றி யாவர்க்கும் தெரியும்தானே!!

ஒவ்வொரு மழை சீசனிலும் நடக்கும் அரசியல் டிராமாக்கள் சகிக்க வில்லை.

ஆஹா.. நன்றாக பொழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. விவசாயம் பெருகட்டும். குடிநீரப் பஞ்சம் போகட்டும் என்று வாழ்த்த ஒரு ஆள் இல்லை.

சகல டி.வி ஷோவிலும் "ஐயோ.. பெய்யுதே ... ஐயய்யோ.. பெய்யுதே  என்று புலம்பல்.." இது என்ன பார்வை?  நமக்கு என்ன நேர்ந்து விட்டது? விடாது கொட்டித்தீர்க்கும் (கேரளம் போன்று) எந்த மாநிலத்திலும் இந்த புலம்பல் இல்லை..  இது எங்கே போய் நிற்கப் போகிறதோ? 

தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி? ! இனியாவது நிற்குமா இந்த புலம்பல்? !

Wednesday, December 2, 2015

UBUNTU - A very nice story...!

UBUNTU - A very nice story...!

The motivation behind name given to Ubuntu Operating System in Computer.

An Anthropologist proposed one game to the African tribal children.

He placed a basket of sweets and Candy's near a tree.

And made them stand 100 metres away.

And announced that who ever reaches first would get all the sweets in the basket.

When he said ready steady go...

Do you know what these small children did?

They all held each other's hands and ran towards the tree together, divided the sweets among them and ate the sweets and enjoyed it.

When the Anthropologist asked them why you did so?
 
They said 'Ubuntu'.

Which meant -
'How can one be happy when all the others are sad?'

Ubuntu in their language means -
'I am because, we are!'

A msg for all generations.
Let all of us always carry this attitude within us and spread happiness, wherever we go...

Let's hv a Ubuntu Life

👼👼👼💎😊
I am because we are 
👭👫👬

நல்ல மனிதன்...

ஒரு பெரிய மருத்துவமனை...
அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை.

இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர்.

ஒருவரின் படுக்கை சன்னல் அருகில்.

இன்னொருவருக்கு சன்னல் கிடையாது.

எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர

தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய்.

இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி.

நாளடைவில் இருவரும் நட்பாகிவிட்டனர்.

ஒருமுறை,
எலும்பு முறிவு நோயாளி சன்னல் ஓர நோயாளியிடம் சொன்னார்..
உனக்காவது பொழுது போக்காக, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!”

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன்.
இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

நண்பா..

சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி..
நடுவில் சிறு தீவு..
ஏரியில் படகுகள் மிதக்கின்றன..
ஏரிக்கரையில் அழகான பூங்கா..!
காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை..
அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது..
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன.
மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்..
மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை, தனிமை...

ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க...

அங்கே பெரிய சுவர்..!
வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..

செவிலி,
எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார் என்று....

அன்பு நண்பர்களே ..

தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களின் நன்மைக்காக
செயல்படுபவனே நல்ல மனிதன்....

படித்தேன் பிடித்துப்போய்விட்டது..
அதனால் பகிர்கிறேன் உங்களுக்காக..

😊😊😊😊😊😊😊😊😊

யார் முட்டாள்...!!!

யார் முட்டாள்...!!!

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.

அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.

உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.

அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான்.

“பிச்சைக்காரன்“அப்படியானால் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.

வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.

ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்.