Saturday, March 30, 2013

தெரிந்து கொள்வோமா-69 [மடி கணினியின் மின் கல பராமரிப்பு]


மடிக்கணனிகளில் பாவிக்கப்படும் மின்கலங்கள்(பேட்டரிகள்) விரைவில் பழுதடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இதற்கு தொடர்ச்சியாக மின்கலங்களை சார்ஜ் செய்தநிலையில் மடிக்கணனியைப் பயன்படுத்துதல் மற்றும் சரியான முறையில் சார்ஜ் செய்யாதிருத்தல் போன்றன காரணங்களாக அமைகின்றன.

எனவே இவற்றை தவிர்த்து நேரத்திற்கு நேரம் மின்கலம் தொடர்பான தகவல்களைத் தந்து அவற்றின் பாவனைக் காலத்தை நீடிக்க செய்யும் பொருட்டு Battery Optimizer எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது மடிக்கணனியின் மின்கலம் முழுமையாக சார்ச் அடைந்த பின்னரும், சார்ச் அற்ற நிலையிலும் அலாரம் மூலம் எடுத்துக்காட்டுவதுடன் மின்கலங்களில் காணப்படக்கூடிய ஏனைய கோளாறுகள் தொடர்பான தகவல்களையும் உடனுக்குடன் தரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கச்சுட்டி:
http://downloads.reviversoft.com/BatteryOptimizerSetup.exe

No comments: