நாள்தோறும் ஹைடெக்கான செல் போன்கள் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. அவைகள் விலையிலும் நேற்று ரிலீஸான செல்போனை விட அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் உலகின் மிக மலிவான விலையில் கையடக்கமான செல்லிட பேசியை அல்கெடெல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரிட்டானியாவில் மட்டும்தான் இது தற்போது வெளியாகியுள்ளது. அல்கெடெல் ஒன் டச் 232 என பெயரிடப்பட்டுள்ள இதன் விலை வெறும் 1 பவுண்ட்ஸ் மட்டுமே ஆகும்.அதாவது இந்திய மதிப்புக்கு வெறும் 81 ரூபாய்தான்! இந்த சீப்பஸ்ட் போன் மூலம் அழைப்புகளை ரீஸிவ் செய்து கொள்ள, குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.
இது தவிர ரேடியோ, கேம்ஸ்,அலாரம், டார்ச், கால்குலேட்டர் போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது. அத்துடன் இதில் 1.5 அங்குல திரையும் இருக்கிறது.ஆக இது இருந்தால் நேரம் காலம் பார்க்காமல் ஆங்க்ரி பேர்ட் ஆடலாம், ஃபேஸ் புக் ஸ்டேட்டஸ் பார்க்கலாம்.

இவ்வளவு குறைந்த விலைக்கு செல்லிடபேசியா என்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது அல்கெடெல் ஒன் டச் 232. ஆனாலும் இதை வாங்கி முழுமையாக உபயோகிக்கும் பொருட்டு அதனுடன் மேலும் 10 பவுண்ட்ஸ்கள் (சுமார் 810 ரூபாய்) மதிப்பிலான சில சமாச்சரங்களையும் நீங்கள் வாங்க வேண்டியிருக்கும்.ஆனாலும் ஆயிரம் ரூபாய் கூட மதிப்பு பெறாத இந்த போனுக்கு ஏக டிமாண்டாம்!
(நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்)
(நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்)
No comments:
Post a Comment