Friday, March 8, 2013

தெரிந்து கொள்வோமா-54 [இந்தியாவின் பிரபலமான பெண்கள்...]

இந்தியாவில் பிரபலமான பெண்கள் பட்டியலில் சோனியாகாந்திக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

பிரபலமான பெண்கள்

அசோசெம் மற்றும் ஜீ பிஸினஸ் ஆகியவை இணைந்து இந்தியாவில் 2012–ம் ஆண்டுக்கான பிரபலமான பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி, பெங்களூர், ஐதராபாத், இந்தூர், பாட்னா, புனா, சண்டிகார் உள்பட இந்தியாவில் உள்ள பெரிய மாநகரங்களில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

32 பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நேற்று மாலை இந்திய பிரபல பெண்கள் பட்டியலை வெளியிட்டது.

சோனியாவுக்கு முதலிடம்

இதில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அவரைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் 2–வது இடத்தையும், பெப்ஸி நிறுவன தலைவர் இந்திரா நூயி 3–வது இடத்தையும், பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா 4–வது இடத்தையும் பெற்றனர்.

ஐஸ்வர்யா ராய்–மேரிகோம்

முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் 5–வது இடத்தையும், இந்தி நடிகை வித்யா பாலன் 7–வது இடத்தையும் பெற்றுள்ளனர். 6–வது இடத்தை ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குநர் ஷிகா சர்மா பெற்றார்.

ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு 8–வது இடமும், பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 9–வது இடமும் கிடைத்தது. இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடிக்கு 10–வது இடம் கிடைத்தது.

எச்.எஸ்.பி.சி. வங்கி தலைவர் நைனா லால் கித்வாய்க்கு 11–வது இடமும், பிரமால் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவன துணைத்தலைவர் பிரமால்க்கு 12–வது இடமும், இந்தி நடிகை ஷபனா ஆஸ்மிக்கு 13–வது இடமும், இந்தி டி.வி. சீரியல் இயக்குநர் ஏக்தா கபூருக்கு 14–வது இடமும், இந்திப்பட இயக்குநர் சோயா அக்தருக்கு 15–வது இடமும் கிடைத்தது.

மம்தா பானர்ஜி

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜுக்கு 16–வது இடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 17–வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

அவரைத்தொடர்ந்து மேற்குவங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜிக்கு 18–வது இடமும், பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாருக்கு 19–வது இடமும், உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி.க்கு 20–வது இடமும் கிடைத்துள்ளது.

இவ்வாறு அந்த கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளது.

(நன்றி: தினத்தந்தி)

No comments: