தங்கள் பணிகளைச் செய்ய தாமதப் படுத்தும் ஊழியர்களுக்கு அபராதம்: புதிய மசோதாவுக்கு ஒப்புதல்!
பாஸ்போர்ட்,பென்ஷன், ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை வழங்குவதில் காலம் தாமதம் ஏற்படுத்தும் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.250 வீதம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
காலம் காலமாக அரசு அலுவலகங்களில் தங்களது பணிகளை நிறைவேற்றிக் கொள்வதில் சாதாரண மக்கள் இன்றும் பெரிதும் அவஸ்தைதான் படுகிறார்கள்.
குறிப்பாக சாதி சான்றிதழ், ரேசன் கார்டு, பென்சன் உள்பட பல்வேறு சேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அதிகாரிகளும், ஊழியர்களும் மிகுந்த காலதாமதம் செய்கிறார்கள். இதனால் மக்கள் வெறுத்து போய் விடுகிறார்கள். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதுதான் ஒரு அரசின் தலையாய கடமையாக இருக்கிறது.
இந்த நிலையில் மக்களின் சேவை பணிகளில் காலதாமதம் செய்யும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பாஸ்போர்ட், பென்சன், சாதி சான்றிதழ், ரேசன் கார்டு மற்றும் வரி பிடித்தத்தை திரும்ப கொடுத்தல் போன்ற குடிமக்களின் சேவைகளை காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த சேவைகளை தாமதப்படுத்தும் ஊழியருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் மூலம் சாதாரண மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
இந்த நடவடிக்கை மூலம் பணிகளில் தாமதம் செய்யும் ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதை தடுக்க முடியும் என்று அரசு கருதுகிறது. இங்கிலாந்தில் இந்த மாதிரியான சட்டம் 1991-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Cabinet approves Bill for time-bound services to citizens!
*************************************************************
he government today gave its nod to a Bill aimed at providing time-bound delivery of services like passports, pensions and birth and death certificates, among others, to the citizens. The Right of Citizens for Time-Bound Delivery of Goods and Services and Redressal of their Grievances Bill, 2011, was approved by Union Cabinet at a meeting chaired by Prime Minister Manmohan Singh here. The Bill envisages penalty of upto Rs 50,000 against a government official failing to provide his or her duties, official sources said.
No comments:
Post a Comment