Saturday, February 28, 2015

தமிழின் தொன்மை...

Monday, February 23, 2015

வருகிறது 'கில் சுவிட்ச்' சாப்ட்வேர் : இனி ஸ்மார்ட் போனை திருட முடியாது

வருகிறது 'கில் சுவிட்ச்' சாப்ட்வேர் : இனி ஸ்மார்ட் போனை திருட முடியாது

கில் சுவிட்ச் என்ற ஸ்மார்ட் போனுக்கான சாப்ட்வேர் பூட்டு கூடிய விரைவில் வரவுள்ளது. போன் திருடப்படும் நிலையில் அல்லது தொலைந்து விடும் நேரத்தில் இந்த சாப்ட்வேரை இயக்குவதன் மூலம் போனில் உள்ள தனிப்பட்ட விவரங்களை எல்லாம் அழித்துவிடலாம். அப்படியே அந்த போனைச் செயலற்றதாகவும் ஆக்கலாம் எனவே போன் திடுடப்பட்டாலும் சிம் கார்டைத் தூக்கி வீசிவிட்டு சொந்த போன் போல் பயன்படுத்துவது இனி நடக்காது இதுதான் கில் சுவிட்ச் சாப்ட்வேரின் மகிமை. 2013ல் ஐபோனில் இது அறிமுகமானது. அதன் பிறகு சாம்சங் கேலக்ஸி எஸ் 5ல் அறிமுகமானது. ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் இந்த அம்சம் இருக்கிறது. இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அமெரிக்க நகரங்களில் ஸ்மார்ட் போன் திருட்டு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-நன்றி தினகரன்

Sunday, February 22, 2015

இரும்பைப் பொன்னாக்கும் வித்தை

கத்தியை எடு என்பதுபோல் பெரியவர் சைகை காட்டினார். மாணிக்கம் சற்றே கத்தியை விலக்கிக்கொண்டான். “இங்க என்ன கிடைக்கும்னு நீ வந்த? நானே ஒரு பிச்சைக்காரன்” என்றார்.

மாணிக்கம் சுற்றுமுற்றும் பார்த்தான். பெரியவர் சொன்னது சரிதான். இங்கே வந்ததில் எந்தப் பலனும் இல்லை. வெறுப்போடு அவரைப் பார்த்தான். அவன் தொழில் திருட்டு.

அதற்குப் பிரச்சினை வந்தால்தான் கத்தியைப் பயன்படுத்துவானே தவிர மற்றபடி யாரையும் கொல்வதில்லை. தொழிலுக்குக் குறுக்கே வந்தால் குழந்தை, பெரியவர், பெண்கள் என்று பார்க்க மாட்டான்.

வெறுப்புடன் திரும்பியவனைப் பெரியவர் கூப்பிட்டார். மாணிக்கம் திரும்பினான். “நீ ஏம்பா இவ்வளவு கஷ்டப்படற? இரும்பைப் பொன்னாக மாற்றும் மந்திரத்தை நீ கற்றுக்கொண்டால் திருட வேண்டிய அவசியமே இருக்காதே” என்றார்.

மாணிக்கத்தின் கண்கள் விரிந்தன. அவரிடம் விவரம் கேட்டான். அது ரசவாதம் என்னும் வித்தை என்றார் பெரியவர். அந்த வித்தை உங்களுக்குத் தெரியுமா என்றான் மாணிக்கம்.

பெரியவர் சிரித்தார். “எனக்குத் தெரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன்?” என்றவர், பக்கத்து ஊரில் இருக்கும் சாமியாருக்குத் தெரியும் என்று பேசிக்கொள்கிறார்கள் என்றார். உற்சாகத்துடன் வேகமாகக் கிளம்பியவனை மீண்டும் தடுத்தார்.

“அவரை மிரட்டிப் பணியவைக்க முடியாது. அவர் உயிருக்குப் பயப்படுபவர் இல்லை. அவரிடம் பணிவாக நடந்துகொண்டால் கற்றுத் தருவார்” என்றார்.

ஒரு முடிவோடு மாணிக்கம் கிளம்பினான்.

பணிவாகத் தன் முன் வந்து நின்ற மாணிக்கத்தைச் சீடனாக ஏற்றுக்கொண்டார் சாமியார். மாணிக்கம் அவர் சொன்ன வேலையெல்லாம் செய்தான். சொல்லாத வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான்.

அவர் தூங்குவதற்கு முன் காலை அமுக்கிவிட்டான். தூங்கும்போது விசிறிக்கொண்டே நின்றான்.

ஒரு மாதம் கழிந்தது. “நீயாகக் கேட்காதே, உன் மீது நல்ல அபிப்ராயம் வந்தால் அவராகவே சொல்லித்தருவார்” என்று பெரியவர் சொல்லியிருந்தார். மாணிக்கம் பொறுமையாகப் பணிகளையும் பணிவிடைகளையும் செய்துவந்தான்.

ஆசிரமத்து வேலைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்தான். தோட்டம் பூத்துக் குலுங்கியது. ஆசிரமம் பளிச்சென்று மாறியது. சமையலறை, உணவுக் கூடம் ஆகியவை இதற்கு முன் இவ்வளவு சுத்தமாக இருந்ததில்லை.

வருடங்கள் ஓடின. மாணிக்கம் பொறுமையாகக் காத்திருந்தான். இரும்பைப் பொன்னாக்கும் வித்தை தெரிந்துவிட்டால் வாழ்நள் முழுவதும் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை அல்லவா? எனவே பொறுமை காத்தான்.

வேளைக்குச் சாப்பாடு, தங்க இடம், அன்பான சூழல் ஆகியவையும் அவனுக்குப் பிடித்திருந்தன. சாமியார் காட்டும் அன்பும் அவனை நெகிழவைத்திருந்தது. விரைவில் அந்த வித்தை வசப்பட்டுவிடும் என்று நம்பினான்.

சாமியார் நோய்வாய்ப்பட்டார். மாணிக்கம் பதறிப்போனான். அவரைக் கண்போலப் பார்த்துக்கொண்டான். அவர் செய்துவந்த வேலைகளையும் சேர்த்துத் தானே செய்தான். எதுவாக இருந்தாலும் மாணிக்கத்திடம் கேட்டுச் செய்யுங்கள் என்று சாமியார் சொல்லிவிட்டார்.

மாணிக்கத்தால் இந்தப் புதிய அந்தஸ்தை நம்ப முடியவில்லை. அனைவரும் தன்னிடம் பணிவாகவும் அன்பாகவும் பழகுவதைக் கண்டு அவன் மனம் கசிந்தது. தனிமையில் அழுதான்.

இதற்கெல்லாம் எனக்குத் தகுதி இருக்கிறதா என்று நொந்துகொண்டான். எத்தனை நாளுக்கு இந்த நடிப்பு என்று நினைத்து வருந்தினான்.

சாமியாரின் உடல் நிலை மிகவும் மோசமானது. ஒரு நாள் அவருக்குக் கடுமையான காய்ச்சல். எழுந்திருக்கவே முடியவில்லை.

குளிர்ந்த நீரைத் துணியில் நனைத்து மாணிக்கம் ஒத்தடம் கொடுத்தான். சூடு அடங்கவே இல்லை. அவரைத் தன் மடியில் வைத்தபடி நெற்றியில் பற்றுப் போட்டான்.

அவர் உடல் தளர்வதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தான். இன்னும் சிறிது நேரம்தான் என்று உணர்ந்தான். சாமியார் தன் கையை மெதுவாக உயர்த்தி அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். மாணிக்கத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அதே சமயம் வந்த வேலையும் நினைவுக்கு வந்தது. இப்போது கேட்காவிட்டால் எப்போதும் கேட்க முடியாது என்று தோன்றியது. அவர் காதுக்கு அருகில் குனிந்தான். தயக்கத்துடன் மெல்லிய குரலில் கேட்டுவிட்டான்.

“ஸ்வாமிஜி, உங்களுக்கு இரும்பைப் பொன்னாக்கும் ரசவாதம் தெரியுமாமே? அதை எனக்குச் சொல்லித் தருவீர்களா?”

சாமியாரின் முகத்தில் புன்னகை. “அது உனக்கு ஏற்கனவே தெரியும் அப்பா” என்றார்.

மாணிக்கம் பார்வையில் கேள்விக்குறி.

“இரும்பாக இருந்த மாணிக்கம் இப்போது தங்கமாக மாறியிருக்கிறானே, இதுதானப்பா அந்த ரசவாதம். அது உனக்கு இப்போது நன்றாகவே தெரியும். நீயும் ரசவாதிதான்.”

சாமியாரின் உயிர் பிரிந்தது. மாணிக்கத்தின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.

மூலம் :- http://m.tamil.thehindu.com/society/spirituality/இரும்பைப்-பொன்னாக்கும்-வித்தை/article6912240.ece

Saturday, February 21, 2015

ஞானத்தைப் பெறும் முதல் வழி

மூன்று தலைகள்!

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.
அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.
புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்…  இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார். அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

அவசியம் படிக்க வேண்டிய ஒன்று...

A VERY GOOD ARTICLE:

Arun Bokil, one of the key member of Arthakranti Sansthan was given time to share to PM Modi before recent election. He was given 9min for sharing but Mr Modi heard him for 2 hours...

👇👍👇👌👇👍👇👌👇👍

Arthakranti Proposal

What is Arthakranti Proposal and who has given the proposal?

“Arthakranti Proposal” has been given by a Pune (Maharashtra) based “Arthakranti Sansthan” which is an Economic Advisory body constituted by a group of Chartered Accountants and Engineers. This funda has been patented by the Sansthan.

Arthakranti Proposal is an effective and guaranteed solution of Black Money Generation, Price rise and Inflation, Corruption, Fiscal Deficit, Unemployment, Ransom, GDP and industrial growth, terrorism and good governance.

What is in the Proposal ?

“Arthakranti Proposal has FIVE point of actions simultaneously.

(1) Scrap all 56 Taxes including income tax excluding import duty.

(2) Recall and scrap high denomination currencies of 1000, 500 and 100 rupees.

(3) All high value transaction to be made only through banking system like cheque, DD, online and electronic.

(4) Fix limit of cash transaction and no taxing on cash transaction.

(5) For Govt. revenue collection introduce single point tax system through banking system – Banking Transaction Tax (2% to 0.7%) on only Credit Amount

Important Points to note:

(1) As on today total banking transaction is more than 2.7 lakh crores per day say more than 800 lakh crores annually.

(2) Less than 20% transaction is made through banking system as on today and more than 80% transaction made in cash only, which is not traceable.

(3) 78% of Indian population spend less than 20/- rupees daily why they need 1000/- rupee note.

What will happen if All FIFTY SIX Taxes including income tax scrapped :

(1) Salaried people will bring home more money which will increase purchasing power of the family.

(2) All commodities including Petrol, Diesel, FMCG will become cheaper by 35% to 52% .

(3) No question of Tax evasion so no black money generation.

(4) Business sector will get boosted. So self employment.

What will happen if 1000/ 500/ 100 Rupees currency notes recalled and scrapped :

(1) Corruption through cash will stopped 100%.

(2) Black money will be either converted to white or will vanish as billions of 1000/500/100 currency notes hidden in bags without use will become simple pieces of papers.

(3) Unaccounted hidden huge cash is skyrocketing the prices of properties, land, houses, jewellery etc and hard earned money is loosing its value; this trend will stop immediately.

(4) Kidnapping and ransom, “Supari killing” will stop.

(5) Terrorism supported by cash transaction will stop.

(6) Cannot buy high value property in cash showing very less registry prices.

(7) Circulation of “Fake Currency” will stop because fake currency printing for less value notes will not be viable.

What will happen when Banking Transaction Tax (2% to 0.7%) is implemented :

(1) As on today if BTT is implemented govt can fetch 800 x 2% = 16 lakh crore where as current taxing system is generating less than 14 lakh crore revenue.

(2) When 50% of total transaction will be covered by BTT sizing 2000 to 2500 lakh crores, Govt will need to fix BTT as low as 1% to 0.7% and this will boost again banking transaction many fold.

(3) No separate machinery like income tax department will be needed and tax amount will directly deposited in State/Central/District administration account immediately.

(4) As transaction tax amount will be very less, public will prefer it instead paying huge amount against directly/indirectly FIFTY SIX taxes.

(5) There will be no tax evasion and govt will get huge revenue for development and employment generation.

(6) For any special revenue for special projects, govt can slightly raise BTT say from 1% to 1.2% and this 0.2% increase will generate 4,00,000 crores additional fund.

Effect of if implemented today :

(01) Prices of all things will come down.

(02) Salaried people will get more cash in hand.

(03) Purchasing power of Society will increase.

(04) Demand will boost, so will production and industrialisation and ultimately more employment opportunity for youth.

(05) Surplus revenue to the govt for effective health/ education/ infrastructure/ security/ social works.

(06) Cheaper and easy loans from banks, interest rate will come down.

(07) Tendency of society will changes from scarcity to quantity.

(08) Spare money for political system for clean politics,

(09) Prices of land/ property will come down,

(10) No need to export beef to cover up trade deficit

(11) Sufficient fund for research and development.

(12) Society will be free from “Bad elements”.

One of the fantastic article I have come across. Read it though it's long.
Excellent approach...

Kindly forward.

பூமியில் பெண்கள் அனைவரும் சுமங்கலி பூஜை செய்கின்றனர்.

பூமியில் பெண்கள் அனைவரும் சுமங்கலி பூஜை செய்கின்றனர். அப்படியே, ‘ஏழேழு ஜென்மத்துக்கும் இவரே மீண்டும் கணவராக வர வேண்டும்’ என்று வரம் கேட்கின்றனர்.

வானுலகத்துக்கு இந்த கோரிக்கை கேட்கிறது. உடனே, பிரம்மனை நோக்கி சித்திர குப்தன் ஓடுகிறார்.

‘சுவாமி. பூமியில் உள்ள பெண்களுக்காக நீங்கள் அறிவித்த சுமங்கலி பூஜை திட்டத்தை உடனே நிறுத்துங்கள். அதனால், பெரிய பிரச்சினை உருவாகிறது’

‘சித்திரகுப்தா. என்ன சொல்கிறாய்...?’

’சுவாமி. எல்லா பெண்களுமே அவரவர் கணவர்களையே அடுத்த 7 ஜென்மத்துக்கும் கணவராக வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், அவர்களுடைய கணவர்களோ... ஒவ்வொரு ஜென்மத்திலும் வேறு வேறு பெண், மனைவியாக வேண்டும் என்று வரம் கேட்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது.’

‘சித்திர குப்தா... நீ கூறுவது சிறிது சிக்கலான விஷயம் தான். ஆனால், இது காலம் காலமாக இருந்து வரும் திட்டமாயிற்றே. திடீரென எப்படி நிறுத்துவது...?

இருவரும் மூளையை கசச்கிக் கொண்டு இருக்கின்றனர். விடை தெரியவில்லை. அப்போது, நாரதர் அங்கு வருகிறார்.

‘நாராயண... நாராயண... என்ன பிரச்சினை? இருவரும் ஒரு மாதிரியாக அமர்ந்திருக்கிறீர்கள்’

நாரதரிடம் பிரம்மனும், சித்திர குப்தனும் பிரச்சினையை விளக்கமாக எடுத்துக் கூறுகின்றனர்.

‘ஹாஹா... வெரி சிம்பிள். அதே கணவர் தான் மீண்டும் வேண்டும் என்று கேட்கும் பெண்களுக்கு கேட்ட வரத்தை கொடுத்து விடுங்கள். அப்படியே, கணவர் மட்டுமல்ல தற்போதைய மாமியாரே அடுத்த 7 ஜென்மத்துக்கும் உங்களுக்கு கிடைப்பார் என்ற நிபந்தனையையும் விதித்து விடு
ங்கள். பிறகு பாருங்கள் நடப்பதை.... நாராயண... நாராயண...’

ஏழரை சனி வந்தால் துன்பம் நேருமா...

கேள்வி:
சத்குரு, ஏழரை சனி வந்தால் துன்பம் நேரும் என்று கூறுகிறார்களே, அந்தப் பரிகாரம் செய்யுங்கள், இந்தப் பாடலை ஒன்பது தடவை உச்சரியுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்களே? இதற்கு உங்கள் பதில் என்ன? சத்குரு: இங்கு எவ்வளவு பேருக்கு ஏழரை சனி இருக்கிறது? (பலர் கை உயர்த்துகிறார்கள்) இவர்கள் எல்லாம் ஆனந்தமாக நன்றாகவே இருக்கிறார்களே! வாராவாரம் சனி வந்தால் நல்லதுதானே? ஏனென்றால்… அடுத்த நாள் ஞாயிறு! நமக்கு மற்ற கிரகங்கள் பற்றி அதிக கவனம் வந்துவிட்டது. நீங்கள் வாழும் இந்த கிரகத்தைப் பற்றி கவனமே இல்லை. நமது உயிருக்கு அடிப்படையாக இருப்பது இந்த கிரகம். நமது உடல் இந்த கிரகத்திலிருந்து தானே வந்திருக்கிறது? இந்த பூமியிலிருந்துதானே இந்த உடல் வந்திருக்கின்றது? மண்தானே இது? ஆனால் இது பற்றி நமது கவனமில்லை. எங்கேயோ இருக்கும் சனி கிரகம் பற்றி கவனம் வந்துவிட்டது. ஏமாற்றிய ஜோசியர்… கிரகங்கள் போவது மாதிரி போக வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? இல்லை நீங்கள் விரும்புகிற மாதிரி போகவேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? ஒரு முறை பீஜப்பூர் சுல்தான், கிருஷ்ணதேவராயர் மீது போர் செய்ய நினைத்து பெரிய படையுடன் வந்தார். ஆற்றில் மிகவும் அதிகமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எனவே அக்கரையில் கூடாரம் போட்டு அங்கேயே உட்கார்ந்தார்கள். கிருஷ்ணதேவராயர் ஆற்றின் இந்தப்பக்கத்திலிருந்து அந்த பெரிய சேனையைப் பார்த்தார். உடனே கிருஷ்ணதேவராயரின் ஆட்கள், “நாம் ஆற்றை சில இடங்களில் தாண்ட முடியும். நாம் உள்ளூர் மனிதராக இருப்பதால், நாமே இந்த ஆற்றைக் கடந்து அவர்களை முதலில் முடித்துவிடலாம். ஆற்றில் வெள்ளம் வடிந்துவிட்டால், அவர்கள் இங்கே வந்து நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்” என்றார்கள். இவருக்கும் ஒரு போர் வீரனாக இது தான் சரி என்று தோன்றியது. அவருடைய ஆஸ்தானத்தில் ஒரு ஜோசியர் இருந்தார். “நேரம் எல்லாம் நன்றாக இருக்கிறதா? இப்போது போகலாமா?” என்று அவரைக் கேட்டார்கள். அதற்கு அந்த ஜோசியர் “இப்போது நீங்கள் சென்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து, நீங்கள் இப்போது போகவே கூடாது” என்று சொல்லிவிட்டார். அரசருக்கு ஒரே கவலை வந்துவிட்டது. இது தெனாலிராமன் காதில் விழுந்தது. அவர் அந்த ஜோசியரை வரவழைத்து, “உங்கள் ஜாதகப்படி நீங்கள் எத்தனை வருடம் இருப்பீர்கள்?” என்று கேட்டார். “80 வருடம்” என்று ஜோசியர் பதில் சொன்னார். “சரி, நான் உன் உயிரை இப்போது எடுக்கப்போகிறேன். நீதான் எப்படியிருந்தாலும் சாக மாட்டாயே” என்று தெனாலிராமன் மிரட்ட, ஜோசியர் பயந்து தனது தப்பை ஏற்றுக்கொண்டார். “பீஜப்பூர் சுல்தானிடம் பணம் வாங்கிக்கொண்டு இப்படிச் செய்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்” என்று சொன்னார். எப்படியும் அவர் தலையை துண்டித்துவிட்டார்கள். வாழ்க்கை யார் கையில்? அந்த கிரகம் எங்கே போகிறது? இந்த கிரகம் எங்கே போகிறது? அவையெல்லாம் எங்கோ போகட்டும். அந்த கிரகங்கள் போவது மாதிரி போக வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? இல்லை நீங்கள் விரும்புகிற மாதிரி போகவேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? படைத்தலுக்கு மூலமானது உங்களுக்குள்ளேயே இருக்கும்போது ஜடப்பொருளைப் பார்த்து எதற்கு அதன் பின்னால் போகிறீர்கள்? ஏழரை வருடம் சனி இருக்கட்டுமே, அல்லது பதிமூன்று வருடம் இருக்கட்டுமே, நமக்கென்ன? இப்பொழுது உங்களுக்கெல்லாம் விசா கொடுத்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பினால், சனி இருந்தாலும் கவலைப்படாமல் போய்விடுவீர்கள்தானே? மனதில் பயம் வந்துவிட்டால், உங்களை எதை வேண்டுமானாலும் நம்ப வைக்கலாம். எல்லாவற்றையும் தாண்டிப் போகவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? இதிலேயே சிக்கிவிடவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? படைத்தலுக்கு மூலமானது நமக்குள்ளே இருக்கிறபொழுது, இந்த கிரகமோ, நட்சத்திரமோ நம்மைத் தடுக்க முடியுமா? நாம் உள்ளே இருக்கிற படைத்தவன் கூட தொடர்பு வைத்துக்கொண்டால், எந்த கிரகம் எங்கே போனாலும், நாம் எங்கு போக வேண்டுமோ, அங்குதான் போவோம். எப்பொழுது நீங்கள் ஆன்மீக வழியில் இருக்கிறீர்களோ பின்னர் அவையெல்லாம் பொருட்டல்ல. ஆன்மீகம் என்றால் என்னவென்றால் நம்முடைய விதியை நம் கையில் எடுத்துக் கொள்வது. “என்னுடைய கர்மா என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். என் அப்பா கர்மா என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் முக்தி நோக்கத்தில் போகிறேன்!” அப்படியென்றால் என்ன அர்த்தம்? என்னுடைய விதியை என் கையில் எடுத்துக்கொண்டுவிட்டேன் என்றுதானே அர்த்தம். எப்பொழுது படைத்தலுக்கு மூலமாக இருக்கிற தன்மையுடன் உங்களுக்கு தொடர்பு வந்துவிட்டதோ, அதற்குப் பிறகு கிரகங்களோ, நட்சத்திரங்களோ, சுற்றியிருக்கிற சூழ்நிலையோ உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாது.

Friday, February 20, 2015

மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்

ஆண்கள் கவனத்திற்கு:
===============
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள்.  5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி  லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின்  அவள் இவனது கன்னத்தில்  ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.  இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம்.  லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி  வாயடைத்தான்.  வீட்டிற்கு நடக்கிறார்கள்.
®
மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.

கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...

மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன்.  நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)

மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை - !!!




மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை - !!!

எல்லோரையும் போல் தானும் அழகாக வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று,
எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார். உடனே
"தொப்பையை குறை" என்று மருத்துவர் ஆலோசனை செய்தார்.

அன்று முதல் தன் Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார், கரைத்தார். உடம்பு அழகானது, முகம் மட்டும் அழகாக வில்லை.
மீண்டும் வருத்தது டன் அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்று, மருத்துவரிடம் சொன்னது போன்றே
"எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார்". உடனே அந்த ஞானி

"குப்பையை குறை" என்றார்.

ஐயா "குப்பையை குறைப்பதா" என்று சந்தேகத்துடன் கேட்டார்.
ஆம் அடுத்தவன் அழகாக இருக்கிறான் என்று உன் உள்ளம் நினைக்கிறதே அந்த குப்பையை அகற்று அழகாகி விடுவாய் என்றார்.
ஆம், மனிதர்களாகிய நமக்கு உள்ள ஒரே பிரச்சினை நாம் ஏழை என்பதல்ல, அடுத்தவன் பணக்கரனாக இருப்பது தான். அதுவே நாளடைவில் மன நோயாக மாறிவிடும்.

உடல் நோயிக்குத்தான் Medication மன நோய் போக்க Meditation.
காந்தி அழகான ஆடை உடுத்தி இருக்கும் சிறு வயசு புகைப்படத்தை விட, அவர் கோவணத்தோடும், பொக்கைவாயுடனும் இருக்கும் வயதான புகைப்படம் அழகாக இருக்கும். அந்த அழகு மனக்குப்பைகளை Meditation மூலம்அகற்றியதால் வந்தது. பணத்தாசை இல்லாத அவரின் புகைப்படம்,இன்று இந்திய ரூபாய் நோட்டை அலங்கரிகிறது.

அகவே
அடுத்தவரை பார்த்து ஏங்கும் எண்ணத்தை தவிர்த்து
அடுத்தவரை தாங்கும் எண்ணத்தை உருவாக்குவோம்
அதுவும் முடியவில்லையா
அடுத்தவரை தாக்காமல் இருக்கவாவது கற்று கொள்வோம்.
பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கச்
சிறந்த வழி மெளனம்;
பல பிரச்சனைகளைத் தவிர்க்க
மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை.

Vaazhkkai vaazhvatharkae....


இரவு தூங்கும் முன் ஒரு தந்தை – மகள் உரையாடல் …



இரவு தூங்கும் முன் ஒரு தந்தை – மகள் உரையாடல் …

“ஏன் அப்பா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது…. அது எப்ப அப்பா தூங்கும்?”

“அது தூக்கம் வரும்போது தூங்கும்…”

“கொசுக்கு வீடு எங்கேப்பா?”

“அதுக்கு வீடே இல்லை…”

“ஏம்பா வீடே இல்லை?”

“அது ரொம்பச் சின்னதா இருக்கே… அதான் வீடு இல்ல…”

நான் ரொம்ப சின்னப் பிள்ளைதானே… எனக்கு வீடு இருக்கே.”

“இது அப்பா உனக்கு கட்டித் தந்தது.”

“அப்போ கொசுவுக்கு அப்பா, அம்மா இல்லையா அப்பா?”

“அந்த அப்பா, அம்மா கொசுவும் ரொம்பச் சின்னதா இருக்கும்ல. அதான் அதுக்கு வீடு இல்ல..”

“கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வெச்சது?”

“கடவுள்.”

“கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா?”

“கடிக்காது.”

“ஏம்பா கடிக்காது?”

“கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்.”

“கடவுள் நல்லவராப்பா?”

“ரொம்ப நல்லவர்.”

“அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?”

“அது அப்படித்தான். நீ தூங்கு.”

“கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?”

“அதுக்குப் பசிக்குது. வாயை மூடிட்டுத் தூங்குடா செல்லம்.”

“ஒரே ஒரு கேள்விப்பா? “

“கேட்டுத் தொலை…”

“கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?”

“அதுக்குப் பல்லே இல்லை…”

“பிறகு எப்படிக் கடிக்கும்?”

“அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாயை மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்.”

“பேயைக் கொசு கடிக்குமாப்பா?”

‘இப்ப நீ வாயை மூடிட்டுத் தூங்கப்போறியா இல்லையா?”

“நாம தூங்கும்போது வாயும் தூங்குமாப்பா..?”

In Heaven - Joke



A Priest dies & is waiting in line at heavens gate.

Ahead of him is a guy, fashionably dressed, in dark sun glasses, a loud shirt, leather jacket & jeans.

God to the guy : Who r u ?

Guy : I am Udupi-Mangalore Express Bus driver.

God : Take this gold robe & enter kingdom of heaven.

God to the Priest : Who r u ?

Priest : I am a priest & spent 40yrs preaching good to people.

God : Take this cotton robe and enter heaven.

Priest : God, how come that foul mouthed, rash driver gets a gold & I spent all my life preaching good get cotton.

God : Results, my son, results.

While you preached, people slept, when he drove, people really prayed...

“Its Performance, not Position that Counts !!”
Awarded Joke

கைக்குத்தல் அரிசியின் பலன்கள்...



கைக்குத்தல் அரிசியின் பலன்கள்...

''இந்த அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின்-பி குடும்பத்தைச் சார்ந்த சத்துக்கள் நிறைய உள்ளன. இதுதான் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான வைட்டமின். ஆனால், தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீட்டப்பட்ட அரிசியில் ஒரு சத்தும் கிடையாது, கிட்டதட்ட சக்கைதான்.

இன்னொரு நுட்பமான விஷயம், அரிசியாக இருந்தாலும் சரி, வேறு எந்த தானியமாக இருந்தாலும் சரி, அது தீட்டப்பட்டதென்றால் அதைச் சாப்பிடுபவர்களின் உடலில் அதிக கால்சியம் சேராது. இதனால் நாளடைவில் எலும்புகள் பலவீனம் அடைவதோடு, இதயத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது. தீட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நோய்களுக்கு பெரிய பட்டியலே உள்ளது. சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன், எலும்பு தொடர்பான நோய்கள் என பலவும் வரும்.

கைக்குத்தல் அரிசியில் நார்சத்து அதிகம் இருப்பதால், நன்கு மென்று சாப்பிட வேண்டும். இந்த அரிசி சாதத்தைப் பொறுத்தவரை குறைந்த அளவே சாப்பிட முடியும். அதாவது, இப்போது நாம் எடுத்துக் கொள்ளும் தீட்டப்பட்ட அரிசி சாதத்தில் பாதி அளவுக்கும் குறைவான அளவே போதுமானது. வயிறு நிறைந்துவிடும். இதனால்தான் அந்தக் காலத்து கிராமத்து ஆட்கள் நோய், நொடியில்லாமல் நலமோடு வாழ்ந்தனர்.