Thursday, January 31, 2013

ஒவ்வொரு கலையும் நம் உடல் உறுப்புகள் போன்றவை. அவற்றில் பயனற்றது என்று எவை ஒன்றும் இல்லை... நமது அவயங்களைப் பேணிக்காப்போம்...






தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் கல்லிலும் இருக்கிறார் கடவுள். இதனை நம் கண் முன்னே காட்டுகிறார் திருவண்ணாமலையை சேர்ந்த திரு . சரவணன் என்னும் 35 வயது சிற்பி.

திரு சரவணன் ஒரு BA (பொருளாதாரம்) படித்த பட்டதாரி படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காததால் இவரது தந்தை காசிலிங்கம் காலமான பிறகு அவரைப் போலவே சிற்பம் செதுக்கும் கலைஞனாக திருவண்ணாமலையில் இருபது வருடமாக இந்த கலைத்துறையில் உள்ளார். இவருக்கு தாயார் குணம்பாள் , மனைவி வசந்தி மற்றும் மீனாட்சி ,காயத்திரி என இரண்டு மகள்கள் உள்ளார்கள். இவரை திருவண்ணாமலையில் நேரில் சந்திக்கும்போது . ஒரு கல்லை உளியைகொண்டு சுத்தியலில் அடிக்க அந்த அடியை வாங்கிக்கொண்டிருந்த கல்லில் இருந்து கடவுள் சற்றுநேரத்திக் வெளிப்பட்டார். என்ன ஆச்சர்யம் அப்போதுதான் புரிந்தது பல அடிகள் வாங்கினால்தான் பக்குவம் அடையமுடியும் என்று .
அவரை அணுகி அவரிடம் இதை போல என்ன, என்ன சிற்பம் எல்லாம் செய்வீர்கள் செய்து உள்ளீர்கள் என்பதை கேட்க்க . “பஞ்சமுக விநாயகர் அருணாச்சலேஸ்வரர் , விநாயகர் , லிங்கம், அம்மன் சிலை . , மாறி அம்மன் என பலவகை கடவுள் சிற்ப்பங்கள் இந்தபகுதியிலேயே செய்து விற்பனையும் செய்து வருகிறேன் நான் செதுக்கிய பச்சை அம்மன் நான்கு அடி கொண்டது திருப்பத்தூரில் ஒரு இனத்தவரின் குலதெய்வமாக நிறுவப்பட்டு உள்ளது , மேலும் இந்த கலை தொழிலை பற்றி விவரிக்க , அவர் இந்த சிற்பம் செய்வதற்காக பயன் படுத்தும் மாவுகள் விழுப்புரம் அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருந்து கிடைக்கிறது ஒரு கிலோ கல் முப்பதிலிருந்து நாற்ப்பது ருபாய் வரைக்கும் கிடைக்கிறது , அதை வாங்கிக்கொண்டு வந்து கடையிலேயே வைத்து சிற்ப்பமாக்கி விற்கிறோம் என்றார் மேலும் ஒருநாளைக்கி 300 ரூபாயில் ரூபாயில் இருந்து 350 வரை வருமானம் கிடைக்கும் அதுவும் நாங்கள் உற்பத்தி செய்வதை பொறுத்தே அது அமையும் , இந்த சிற்ப்பங்களை வாங்க வருபவர்கள் எங்களது கலையை மதிக்காமல் அவர்கள் கேட்க்கும் விலைக்கே கொடுக்க வேண்டும் இல்லையேல் வாங்காமல் போய்விடுகிறார்கள் என்ன செய்யமுடியுமாக கேட்ட விலைக்கே கொடுத்துவிடுகிறோம். “ என்றார்
திருவண்ணாமலையை சுற்றி சுமார் 150 சிற்பி குடும்பங்கள் சிற்ப கலையை நம்பி உள்ளார்கள் இந்த சிலைகளுக்காங்க கற்கள் திருவண்ணாமலை கன்றான்பெட் பகுதியில் தாழநோடை கிராமத்தில் கிடைக்கும் ஆனால் இதனை எடுக்க கொஞ்சம் காலமாக வனத்துறையினர் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கிருந்து கிடைக்கும் மாவுகள் விலை குறைவாகவும் தரமானதாகவும் செதுக்குவதற்கு சுலபமாகவும் இருக்கும் , வனத்துறையினர் அனுமதிக்கப்படாததினால் விலை அதிகம் கொடுத்து விழுப்புரத்தில் கற்களை வாங்க வேண்டி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் இருபது வருடங்களுக்கு முன்பாக ஏகப்பட்ட சிர்ப்பிகள் திருவண்ணாமலை பேய் கோபுரம் பகுதியில் வாழ்ந்து வந்தனர் அதற்க்கு காரணம் மத்திய அரசு ஒரு திட்டம் செயல் படுத்தி இருந்தது அதில் இந்த சிற்ப கலையை மேம்படுத்தும் வகையில் கலைத்துறையில் விருப்பம் கொண்ட இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுத்து இந்த சிற்பக் கலையை கற்றுக்கொடுத்து வந்தது , ஆனால் காலப்போக்கில் அந்த திட்டம் என்னவானது என்று தெரியவில்லை , இதனால் இந்த சிற்ப கலை அழியும் அபாயம் உள்ளது , திரு சரவணனை போன்ற நல்ல கலைஞர்களை கொண்டு இந்த கலையை வளர்க்கும் பொருட்டு மத்திய அரசோ , அல்லது மாநில அரசோ இந்த கலையை இந்த கால இளைஞர்களுக்கு கல்வியாக கற்றுக்கொடுப்பதால் சிற்ப கலையில் நல்ல கலைஞர்களை உலகிற்கு பரிசாற்றலாமே.

~மகேந்திரன், கோவை...

No comments: