Saturday, January 26, 2013

சிரிக்கலாம் வாங்க-2


(ஏற்கனவே இதைப்படித்திருந்தாலும், சிரிப்பு வரவில்லையென்றாலும், மன்னு நிக்கனும், sorry மன்னிக்கனும்..)








ஒரு இந்திய அரசியல்வாதி ( எம்.பி.) அமெரிக்கா சென்ற போது அங்குள்ள அரசியல்வாதியின் (செனட்டர்) வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்..

செனட்டரின் மாளிகையில் ஒவ்வொரு இடத்திலும் பொருட்செலவு மிக்க ஆடம்பரப் பொருட்கள் அணிவகுத்திருப்பதைக்க் கண்டார்..

ஆச்சர்ய மிகுதியில் செனட்டரைக் கேட்டார்..

"எப்படி இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்..?

செனட்டர், எம்.பி.யை அழைத்து ஜன்னலுக்கு வெளியே ஒன்றைக் காட்டினார்..

அது ஒரு பிரம்மாண்டமான தொங்கு பாலம்..

செனட்டர் சொன்னார்..

" 10 சதவீதம்...!"

எம்.பி. புரிந்துகொண்டார்.

பின்னர் ஒரு ஆண்டு கழித்து அதே செனட்டர் இந்தியா வந்தார்.. எம்.பி. விருந்துக்கழைக்க அவரது அரண்மனைக்கும் வந்தார்..

ஏராளமான நகைகள்.. வாகனங்கள்.. செருப்புகள்..

பிரமித்துப் போன செனட்டர் கேட்டார்..

"எப்படி இவ்வளவு பணம் செர்த்தீர்கள்..?"

எம்.பி. அவரை ஜன்னலுக்கு வெளியில் கைகாட்டிச் சொன்னார்..

"அதோ.. அந்தப் பாலத்தைப் பாருங்க.."

" ஆனால்... அங்கு பாலம் எதுவும் இல்லையே..?"

எம்.பி. பெருமையுடன் சொன்னார்..

"100 சதவீதம்...!".

பின்னர் செனட்டருக்கு முதலுதவி செய்து மயக்கத்தை தெளிய வைக்க வேண்டியதாயிற்று...!
 

No comments: