Thursday, January 31, 2013

அருமையாக வருவீங்கக் கண்ணு...


அறிவுக்கும் திறமைக்கும் வயது ஒரு பொருட்டல்ல. மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்று சொல்வார்கள். அதற்கு இணங்க கோவையை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் P. பிரதிப்பா என்னும் 10 வயது குழந்தை சிறுமி அசாத்திய திறமை பெற்று திகழ்கிறார்கள்.
 
ஏழாம் வயதில் தனது பள்ளியான சந்திர மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆரம்பித்த யோகாசனம், அடுத்தடுத்து P. பிரதிப்பா எடுத்துக்கொண்ட முயற்சியிலும் பயிற்சியிலும் 2010, 2011 சென்னையில் தமிழ்நாடு யோகா அமைப்பு நடத்திய மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றாள். அதனை தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் P. பிரதிப்பா பல பரிசுகளை வென்று இந்த ஆண்டு குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான யோகாசனம் போட்டியில் தமிழ்நாடு யோகா அமைப்பின் சார்பில் கலந்துக்கொண்டு மூன்றாம் இடம் பெற்றாள் . இதனால் மே மாதம் மலேசியாவில் நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டிக்கு P. பிரதிப்பா பரிந்துரை செய்யப்பட்டு உள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.
யோகா மட்டும் இல்லைங்க இந்த பத்து வயது P. பிரதிப்பா பல கட்டுரை போட்டிகளில் கலந்துக்கொண்டு முதல் பரிசும் தட்டி சென்று இருக்கிறாள் . பாரத நாட்டியத்தில் சலங்கை பூஜை முடித்து அரங்கேற்றமும் நடந்தி இருக்கிறாள்.

இப்படிப்பட்ட ஒரு அசாத்திய திறமை கொண்ட சிறுமியை கோவை விலாங்குருச்சியில் உள்ள அவளது வீடிற்கு சென்று P. பிரதிப்பா வின் தந்தை பூவராகவன் அவர்களை சந்தித்தோம் அவர் சாதாரண ஒரு கம்பெனியில் கூலித்தொழில் செய்துவருவதாகவும் பிரதிபாவின் இளம் வயதில் இந்த திறமையை தன் வறுமையும் பொருளாதாரம் எந்த வகையிலும் இடையூறாக இருக்க கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டு இவளை ஊக்குவித்து வருகிறேன் என்று கூறினார்.
மேலும் பிரதிப்பாவை சந்தித்து அவளது லட்சியம் பற்றி கேட்க்கையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதே தன்னுடைய லட்சியம் என்றும் அதற்காக தான் கடும் பயிற்சி எடுத்துவருகிறேன் மருதுவராகவேண்டும் என்று கூறினாள்.
திறமை எங்கிருந்தாலும் நாம் அதை ஊக்குவிக்க வேண்டும் அதுவும் இந்த இளம் வயதில் வறுமை கோட்டில் இருக்கும் இந்த சிறுமி பிரதிபாவின் திறமையை பாராட்டாமல் விடலாமா.
வாழ்த்துக்கள் பிரதிப்பா கண்டிப்பா உனது எண்ணம் போல இந்தியாவிற்கு பெருமை தேடித்தரும் பெண்ணாக நீ விளங்க எங்களுடைய வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் பிரதிப்பாவை ஊக்குவிக்க வேண்டும் , வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கா கண்டிப்பா இந்த அலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டு பேசுங்கள் பிரதிபாவின் தந்தை பூவராகவன் 9787835373
~மகேந்திரன்




பின் குறிப்பு:

20.01.2013 மாலை 6 மணிக்கு இந்த பிரதிபா பாப்பாவ அவங்க இருக்கும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டுவிழா நடத்தியிருக்காங்க...

No comments: