மாறும் நிமிடங்களும். பதில்களும்!
*********************************
ஒரு ஊரில் இரண்டு குருகளுக்கிடையே சில பரம்பரைகளாகவே கடும் பகை இருந்தது.
அந்த இருவரிடமும் இரு சிறுவர்கள் சந்தைக்குப் போவது போன்ற சில்லறை வேலைகள் பார்க்க பணியமர்த்தப் பட்டிருந்தனர்.
குருகள் அந்த சிறுவர்களிடம் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என்று ஆணை இட்டிருந்தனர்.ஆனாலும் சிறுவர்கள் விளையாட்டுத்தனம் மிகுந்தவர்கள் ஆதலால் வழியில் சந்தித்தால் பேசிக்கொள்வர்.
ஒரு நாள் ஒருவன் மற்றவனிடம்,”எங்கே போகிறாய்?”என்று கேட்டான்.அடுத்தவன் பதில் சொன்னான்,”காற்று எங்கே இழுத்து செல்கிறதோ,அங்கே,”என்றான்.
கேள்வி கேட்டவனுக்கு புரியவில்லை.எனவே தன குருவிடம் இதுபற்றி கேட்டான்.அவனிடம் பேசியதற்குக் கோபப்பட்ட குரு,”இருந்தாலும் இது மானப்பிரச்சினை.அவனை வெற்றி கொள்ள விடக்கூடாது.நாளை அவனிடம் இன்று போலவே பேசு. அவன் நேற்று சொன்ன பதிலையே சொல்வான்.உடனே நீ,காற்று வீசாத போதுஎன்ன செய்வாய் என்று கேள்,”என்றார்.
சிறுவனும் அடுத்தவனை வழியில் பார்த்தபோது,”நீ எங்கே செல்கிறாய்?”என்று கேட்க,அவன் சொன்னான்,”கால்கள் எங்கே அழைத்து செல்கிறதோ,அங்கே,”என்றான்.இவனுக்கு சிரமமாகி விட்டது.தன தயாரான பதிலை கூற முடியவில்லை.வாட்டத்துடன் திரும்பி வந்த சிறுவனைப் பார்த்த குரு,நடந்த விபரம் கேட்க அவனும் சொன்னான்.அவர் சொன்னார்,
”அந்தப் பையன் அந்தக் கூட்டத்தார்க்கே உள்ள வஞ்சகத்துடன் பேசியுள்ளான்.நாளை இதுபோல கால்கள் எங்கே போகிறதோ,அங்கே போகிறேன் என்று சொன்னால்,நீ நொண்டியாகி விட்டால் என்ன செய்வாய் என்று கேள்.அவனை நீ பேச முடியாமல் தோற்கடிக்க வேண்டும்,”
அடுத்த நாளும் இவன் அவனைப்பார்த்து எங்கே போகிறாய் என்று கேட்டவுடன் அவன் சொன்னான்,”காய்கறி வாங்க சந்தைக்கு செல்கிறேன்.” மனம் வருந்தியவனாகக் கோவிலுக்கு திரும்பிய இவன் நடந்ததைக்கூறி ”நான் ஒவ்வொரு முறையும் தயாரான பதிலுடன் செல்கிறேன்.
ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் மாறிப் பேசுகிறான்.அந்தப் பையனின் வாயை அடைப்பது சிரமமாக இருக்கிறது,”என்றான்.
வாழ்க்கையும் இவ்வாறே ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது.நீங்களோ தயாரான பதிலை ஏந்திக்கொண்டு அதனிடம் செல்கிறீர்கள்.நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தவற விடுவதெல்லாம் இத்தகைய தயாரான பதிலைக் கொண்டுதான்..

No comments:
Post a Comment