Saturday, January 26, 2013

சிரிக்கலாம் வாங்க-3

வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...

அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?

அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..
நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..

இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! 

டிவோர்ஸ் வரைக்கும் கொண்டு போய் விட்டுடும்..!

பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. 

விலையைச் சொல்லு..!
சொன்ன கேளுங்க்.. 

இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..

ரிஸ்க் எடுக்கறீங்க..சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..

விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!

வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..

புது வீடு.. 

புது எஜமானியம்மா.. 

ப்ரமாதம்..!

எஜமானிக்கு ஆச்சர்யம்..! 

பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..
கிளி..

" புது வீடு.. புது எஜமானியம்மா.. 

புது குழந்தைங்க.. ப்ரமாதம்..

கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...

புது வீடு..
புது எஜமானியம்மா..
புது குழந்தைங்க..
புது காரு...

அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???

No comments: