Thursday, January 31, 2013

கைவினை மட்டுமல்ல, கலைஞனையும் போற்றுவோம்...


நாட்டின் வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கு கைத்தொழில் ஒரு இன்றியமைதாத ஒன்று. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இல்லை உனக்கு ஒப்புக்கொள் வரிகள் மறக்கமுடியுமா , மறுக்க முடியுமா ? கற்றதையும் மறக்க கூடாது , கற்றவரையும் ஒதுக்கப்பட கூடாதே.

கோவையில் காந்திபுரம் மையப்பகுதி ஒரு சாக்கடை ஓரமாக மூங்கிலை கட்டுக்கட்டாக பையில் வைத்து கொண்டுவந்து சிறியது சிறியதாக ஒடித்து கொண்டு இருந்தார். திரு. ஜயசீலன் என்பவர் . அவர் எதற்க்காக அப்படி செய்கிறார் அடுத்து என்ன செய்வார் என்பதை கவனிக்கையில் நீண்டநேரம் சுமார் நன்குமநிநேரம் முயற்சிக் முயற்சிக்கு பிறகு அவர் அழகான ஒரு சின்ன மூங்கில் கப்பலை கட்டி முடித்தார் என்ன ஒரு கைவினை அதை வேடிக்கை பார்த்த ஒருவர் “என்ன விலை என்றார் இவர் 300 ரூபாய் என்று சொல்ல வாங்க வந்தவர் அந்த அழகிய மூங்கில் கப்பலை 100 ருபாயுக்கும் குறைவாக கேட்டார் எவ்வளவோ போராடியும் கொஞ்சம் சேர்த்து கொடுங்கள் என்று கேட்டும் வேறு வலி இல்லாமல் இறுதியில் வாங்க வந்தவர் சொன்ன விலைக்கே கொடுத்து அனுப்பினர்.

இதை கவனித நான் அவரை அணுகி அவரை பற்றி விசாரித்தேன் “அவர் பெயர் ஜயசீலன் கோவை சூலூர் பகுதியில் பிறந்து நான்காம் வகுப்பு வரை படித்ததாகவும் அதன் பிறகு பொருளாதாரம் நிலை காரணமாக படிப்பை தொடரமுடியவில்லை. கூலிவேலை செய்து பிழைப்பை ஒட்டி வந்ததாகவும் பெலிக்ஸ் என்பவர் இவருக்கு இந்த கலையை கற்றுக்கொடுத்தது தனக்கு ஒரு வரமாக கருதுகிறார் , இந்த கலையை கொண்டு சாலைகளில் அமர்ந்து வீடு , கப்பல் என செய்து விற்று வருமானத்தை தேடிக்கொள்கிறேன் என்றார் , இவருக்கு மனைவி தங்கமணி, மற்றும் விஜயகுமார் , பிரேம் குமார் என்னும் இரண்டு மகன்கள் அவர்கள் ஒரு தனியார் கம்பெனியில் கூலிவேலைக்கு போகிறார்கள், ஆனாலும் எதுவும் நிரந்தரமில்லாத பணியாக உள்ளது தற்போது கோவையில் நிலவும் மின் வெட்டால் இவர்கல்லால் சரிவர வேலைக்கு போகமுடியாத சூழல் . என்னுடைய இந்த கலையை கொண்டே குடும்பம் உள்ளது,

என்றார் . ஒரு கடையை போல வைக்கலாமே என்றதற்கு அதற்க்கு முதலீடாக குறைந்தது 20000 ஆகுமே என்றார் .அப்படி யாரேனும் வட்டிக்கு கொடுத்தால் கூட கடையில் வரும் வருமானத்தை கொண்டு சிறிது சிறிதாக கடனை அடைத்து விடுவேன் என்றார் .

மேலும் அவரிடம் இந்த கைவினையை கற்றுகொடுக்க குன்களால் முடியுமா என்பதற்கு ஒருமாத காலம் பயிற்சி கொடுக்கலாம் அதற்குள்ளாக இந்த பயிற்சியை கற்றுக்கொள்ளலாம் என்றார் திரு ஜயசீலன் அவருடைய அழகான படைப்புகளை பார்த்து நானும் ஒரு பொருளை வாங்கிவந்தேன் (பேரம் பேசாமல்)

மத்திய அரசு என்றாலும் சரி, மாநில அரசு என்றாலும் சரி, மக்களுக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை தீட்டுகின்றன. திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டங்கள்தான். ஆனால், அந்த திட்டங்கள் பல வெற்றி பெறுவதில்லை. இதற்கு காரணம், இந்த திட்டங்களால் பயனடையும் மக்களுக்கு அதுபற்றிய விவரங்கள் முழுமையாக போய் சென்றடைவதில்லை.

இது போன்று எத்தனையோ கைவினை பொருட்கள் தயாரிக்கும் கலையை கற்று வீதிக் உள்ளார்கள் , இவர்கல்ற்க்கேல்லாம் அரசாங்கம் என்ன திட்டங்கள் உள்ளது என்பது தெரிவது இல்லை . இப்படி பட்டவர்களை தேடிபிடித்து அவர்கள் மூலமாக கலைகளை கற்றுக்கொடுக்கலாமே ,

கலைவாணி வீதியில் விடாம காக்கலாமே

இவருக்கு நீங்கள் ஏதேனும் செய்ய விரும்புகிறீர்களா ஜயசீலன் 9698914658

கலைகளை போற்றுவோம் .

~மகேந்திரன்

அருமையாக வருவீங்கக் கண்ணு...


அறிவுக்கும் திறமைக்கும் வயது ஒரு பொருட்டல்ல. மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்று சொல்வார்கள். அதற்கு இணங்க கோவையை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் P. பிரதிப்பா என்னும் 10 வயது குழந்தை சிறுமி அசாத்திய திறமை பெற்று திகழ்கிறார்கள்.
 
ஏழாம் வயதில் தனது பள்ளியான சந்திர மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆரம்பித்த யோகாசனம், அடுத்தடுத்து P. பிரதிப்பா எடுத்துக்கொண்ட முயற்சியிலும் பயிற்சியிலும் 2010, 2011 சென்னையில் தமிழ்நாடு யோகா அமைப்பு நடத்திய மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றாள். அதனை தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் P. பிரதிப்பா பல பரிசுகளை வென்று இந்த ஆண்டு குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான யோகாசனம் போட்டியில் தமிழ்நாடு யோகா அமைப்பின் சார்பில் கலந்துக்கொண்டு மூன்றாம் இடம் பெற்றாள் . இதனால் மே மாதம் மலேசியாவில் நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டிக்கு P. பிரதிப்பா பரிந்துரை செய்யப்பட்டு உள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.
யோகா மட்டும் இல்லைங்க இந்த பத்து வயது P. பிரதிப்பா பல கட்டுரை போட்டிகளில் கலந்துக்கொண்டு முதல் பரிசும் தட்டி சென்று இருக்கிறாள் . பாரத நாட்டியத்தில் சலங்கை பூஜை முடித்து அரங்கேற்றமும் நடந்தி இருக்கிறாள்.

இப்படிப்பட்ட ஒரு அசாத்திய திறமை கொண்ட சிறுமியை கோவை விலாங்குருச்சியில் உள்ள அவளது வீடிற்கு சென்று P. பிரதிப்பா வின் தந்தை பூவராகவன் அவர்களை சந்தித்தோம் அவர் சாதாரண ஒரு கம்பெனியில் கூலித்தொழில் செய்துவருவதாகவும் பிரதிபாவின் இளம் வயதில் இந்த திறமையை தன் வறுமையும் பொருளாதாரம் எந்த வகையிலும் இடையூறாக இருக்க கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டு இவளை ஊக்குவித்து வருகிறேன் என்று கூறினார்.
மேலும் பிரதிப்பாவை சந்தித்து அவளது லட்சியம் பற்றி கேட்க்கையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதே தன்னுடைய லட்சியம் என்றும் அதற்காக தான் கடும் பயிற்சி எடுத்துவருகிறேன் மருதுவராகவேண்டும் என்று கூறினாள்.
திறமை எங்கிருந்தாலும் நாம் அதை ஊக்குவிக்க வேண்டும் அதுவும் இந்த இளம் வயதில் வறுமை கோட்டில் இருக்கும் இந்த சிறுமி பிரதிபாவின் திறமையை பாராட்டாமல் விடலாமா.
வாழ்த்துக்கள் பிரதிப்பா கண்டிப்பா உனது எண்ணம் போல இந்தியாவிற்கு பெருமை தேடித்தரும் பெண்ணாக நீ விளங்க எங்களுடைய வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் பிரதிப்பாவை ஊக்குவிக்க வேண்டும் , வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கா கண்டிப்பா இந்த அலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டு பேசுங்கள் பிரதிபாவின் தந்தை பூவராகவன் 9787835373
~மகேந்திரன்




பின் குறிப்பு:

20.01.2013 மாலை 6 மணிக்கு இந்த பிரதிபா பாப்பாவ அவங்க இருக்கும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டுவிழா நடத்தியிருக்காங்க...

ஒவ்வொரு கலையும் நம் உடல் உறுப்புகள் போன்றவை. அவற்றில் பயனற்றது என்று எவை ஒன்றும் இல்லை... நமது அவயங்களைப் பேணிக்காப்போம்...






தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் கல்லிலும் இருக்கிறார் கடவுள். இதனை நம் கண் முன்னே காட்டுகிறார் திருவண்ணாமலையை சேர்ந்த திரு . சரவணன் என்னும் 35 வயது சிற்பி.

திரு சரவணன் ஒரு BA (பொருளாதாரம்) படித்த பட்டதாரி படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காததால் இவரது தந்தை காசிலிங்கம் காலமான பிறகு அவரைப் போலவே சிற்பம் செதுக்கும் கலைஞனாக திருவண்ணாமலையில் இருபது வருடமாக இந்த கலைத்துறையில் உள்ளார். இவருக்கு தாயார் குணம்பாள் , மனைவி வசந்தி மற்றும் மீனாட்சி ,காயத்திரி என இரண்டு மகள்கள் உள்ளார்கள். இவரை திருவண்ணாமலையில் நேரில் சந்திக்கும்போது . ஒரு கல்லை உளியைகொண்டு சுத்தியலில் அடிக்க அந்த அடியை வாங்கிக்கொண்டிருந்த கல்லில் இருந்து கடவுள் சற்றுநேரத்திக் வெளிப்பட்டார். என்ன ஆச்சர்யம் அப்போதுதான் புரிந்தது பல அடிகள் வாங்கினால்தான் பக்குவம் அடையமுடியும் என்று .
அவரை அணுகி அவரிடம் இதை போல என்ன, என்ன சிற்பம் எல்லாம் செய்வீர்கள் செய்து உள்ளீர்கள் என்பதை கேட்க்க . “பஞ்சமுக விநாயகர் அருணாச்சலேஸ்வரர் , விநாயகர் , லிங்கம், அம்மன் சிலை . , மாறி அம்மன் என பலவகை கடவுள் சிற்ப்பங்கள் இந்தபகுதியிலேயே செய்து விற்பனையும் செய்து வருகிறேன் நான் செதுக்கிய பச்சை அம்மன் நான்கு அடி கொண்டது திருப்பத்தூரில் ஒரு இனத்தவரின் குலதெய்வமாக நிறுவப்பட்டு உள்ளது , மேலும் இந்த கலை தொழிலை பற்றி விவரிக்க , அவர் இந்த சிற்பம் செய்வதற்காக பயன் படுத்தும் மாவுகள் விழுப்புரம் அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் இருந்து கிடைக்கிறது ஒரு கிலோ கல் முப்பதிலிருந்து நாற்ப்பது ருபாய் வரைக்கும் கிடைக்கிறது , அதை வாங்கிக்கொண்டு வந்து கடையிலேயே வைத்து சிற்ப்பமாக்கி விற்கிறோம் என்றார் மேலும் ஒருநாளைக்கி 300 ரூபாயில் ரூபாயில் இருந்து 350 வரை வருமானம் கிடைக்கும் அதுவும் நாங்கள் உற்பத்தி செய்வதை பொறுத்தே அது அமையும் , இந்த சிற்ப்பங்களை வாங்க வருபவர்கள் எங்களது கலையை மதிக்காமல் அவர்கள் கேட்க்கும் விலைக்கே கொடுக்க வேண்டும் இல்லையேல் வாங்காமல் போய்விடுகிறார்கள் என்ன செய்யமுடியுமாக கேட்ட விலைக்கே கொடுத்துவிடுகிறோம். “ என்றார்
திருவண்ணாமலையை சுற்றி சுமார் 150 சிற்பி குடும்பங்கள் சிற்ப கலையை நம்பி உள்ளார்கள் இந்த சிலைகளுக்காங்க கற்கள் திருவண்ணாமலை கன்றான்பெட் பகுதியில் தாழநோடை கிராமத்தில் கிடைக்கும் ஆனால் இதனை எடுக்க கொஞ்சம் காலமாக வனத்துறையினர் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கிருந்து கிடைக்கும் மாவுகள் விலை குறைவாகவும் தரமானதாகவும் செதுக்குவதற்கு சுலபமாகவும் இருக்கும் , வனத்துறையினர் அனுமதிக்கப்படாததினால் விலை அதிகம் கொடுத்து விழுப்புரத்தில் கற்களை வாங்க வேண்டி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் இருபது வருடங்களுக்கு முன்பாக ஏகப்பட்ட சிர்ப்பிகள் திருவண்ணாமலை பேய் கோபுரம் பகுதியில் வாழ்ந்து வந்தனர் அதற்க்கு காரணம் மத்திய அரசு ஒரு திட்டம் செயல் படுத்தி இருந்தது அதில் இந்த சிற்ப கலையை மேம்படுத்தும் வகையில் கலைத்துறையில் விருப்பம் கொண்ட இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுத்து இந்த சிற்பக் கலையை கற்றுக்கொடுத்து வந்தது , ஆனால் காலப்போக்கில் அந்த திட்டம் என்னவானது என்று தெரியவில்லை , இதனால் இந்த சிற்ப கலை அழியும் அபாயம் உள்ளது , திரு சரவணனை போன்ற நல்ல கலைஞர்களை கொண்டு இந்த கலையை வளர்க்கும் பொருட்டு மத்திய அரசோ , அல்லது மாநில அரசோ இந்த கலையை இந்த கால இளைஞர்களுக்கு கல்வியாக கற்றுக்கொடுப்பதால் சிற்ப கலையில் நல்ல கலைஞர்களை உலகிற்கு பரிசாற்றலாமே.

~மகேந்திரன், கோவை...

இயற்கை எனும் விந்தை-1


Finger Monkey!

#Cutie Monkey... :)

The finger monkey is the tiniest living primate in the world. It’s so small that it can hold on to your finger. This cute little primate hugs and grips on to your finger so tight that it pulls your heartstrings and you wish you could take it home with you. Finger monkeys are, as a matter of fact, pygmy marmosets. They are also known by the names ‘pocket monkey’ and ‘tiny lion’. These primates belong to the family Callitrichidae, species Cebuella and genus C. pygmaea. They are native to rain-forests of Brazil, Peru, Bolivia, Ecuador and Colombia...

Saturday, January 26, 2013

சிரிக்கலாம் வாங்க-6

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம
“குப்புமி”
“குப்புமி”
“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்…

சாமியின் background voice .. "வரம் கேக்குற உனக்கே இத்தன அதப்புனா குடுக்குற எனக்கு எவ்வளவு இருக்கும்... "

அருமையான வாழ்வியல் கருத்து...

யாருக்காக யார் சாவது?

இராமன் என்பவர் இறந்துவிட்டார்.அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.

அவரது மனைவி,9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகேஅமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் ஒருவர் அப்போது அங்கு வந்தார்.

அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.

இராமனின் மனைவி சொன்னாள் ”குருஜி! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே?

நான் என்ன செய்வேன்?
அவர் உயிருடன் வருவாரென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்”.

குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.

ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை.

கடைசியில் அவர் கேட்டார்”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”.

தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

பின் சொன்னார் ”இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,இந்தத் தண்ணீரை அருந்தலாம்.

இராமன் திரும்பி வருவார்.ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்”.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.ஆனால் யாரும்முன் வரவில்லை.

அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்” ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”

தந்தை சொன்னார்”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு? அவளுக்காக நான் வாழ வேண்டும்”.

தாயைக் கேட்க அவள் சொன்னாள்”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.நான் இறந்துவிட்டால் அவளுக்கு யார் உதவுவது?”

மனைவி சொன்னாள்”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது?

அவனுக்காக நான் வாழ வேண்டும்”

குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்”குழந்தாய்,
உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?”

அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள்”குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமா ?
அவன் ஒரு குழந்தை. இனிமேல்தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?”

குருஜி சொன்னார்”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

அப்படியானால் இராம னுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது.
எனவேதான் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார் .

இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்”
சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.


ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.
எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு.
நாம் யார் அதைக் குறை சொல்ல? கேள்வி கேட்க?

“நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம்,அதில் பச்சை இலைகள் இருக்கும் வரை.

இலைகள் வாடிப்போய்,அது உயிரற்ற குச்சியானால் அதை நாம் கவனிக்கப் போவதில்லை.

அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை.”
”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”

“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே".

மாறும் நிமிடங்களும். பதில்களும்!

மாறும் நிமிடங்களும். பதில்களும்!
*********************************
ஒரு ஊரில் இரண்டு குருகளுக்கிடையே சில பரம்பரைகளாகவே கடும் பகை இருந்தது.

அந்த இருவரிடமும் இரு சிறுவர்கள் சந்தைக்குப் போவது போன்ற சில்லறை வேலைகள் பார்க்க பணியமர்த்தப் பட்டிருந்தனர். 

குருகள் அந்த சிறுவர்களிடம் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என்று ஆணை இட்டிருந்தனர்.ஆனாலும் சிறுவர்கள் விளையாட்டுத்தனம் மிகுந்தவர்கள் ஆதலால் வழியில் சந்தித்தால் பேசிக்கொள்வர்.

ஒரு நாள் ஒருவன் மற்றவனிடம்,”எங்கே போகிறாய்?”என்று கேட்டான்.அடுத்தவன் பதில் சொன்னான்,”காற்று எங்கே இழுத்து செல்கிறதோ,அங்கே,”என்றான்.

கேள்வி கேட்டவனுக்கு புரியவில்லை.எனவே தன குருவிடம் இதுபற்றி கேட்டான்.அவனிடம் பேசியதற்குக் கோபப்பட்ட குரு,”இருந்தாலும் இது மானப்பிரச்சினை.அவனை வெற்றி கொள்ள விடக்கூடாது.நாளை அவனிடம் இன்று போலவே பேசு. அவன் நேற்று சொன்ன பதிலையே சொல்வான்.உடனே நீ,காற்று வீசாத போதுஎன்ன செய்வாய் என்று கேள்,”என்றார்.

சிறுவனும் அடுத்தவனை வழியில் பார்த்தபோது,”நீ எங்கே செல்கிறாய்?”என்று கேட்க,அவன் சொன்னான்,”கால்கள் எங்கே அழைத்து செல்கிறதோ,அங்கே,”என்றான்.இவனுக்கு சிரமமாகி விட்டது.தன தயாரான பதிலை கூற முடியவில்லை.வாட்டத்துடன் திரும்பி வந்த சிறுவனைப் பார்த்த குரு,நடந்த விபரம் கேட்க அவனும் சொன்னான்.அவர் சொன்னார்,

”அந்தப் பையன் அந்தக் கூட்டத்தார்க்கே உள்ள வஞ்சகத்துடன் பேசியுள்ளான்.நாளை இதுபோல கால்கள் எங்கே போகிறதோ,அங்கே போகிறேன் என்று சொன்னால்,நீ நொண்டியாகி விட்டால் என்ன செய்வாய் என்று கேள்.அவனை நீ பேச முடியாமல் தோற்கடிக்க வேண்டும்,”

அடுத்த நாளும் இவன் அவனைப்பார்த்து எங்கே போகிறாய் என்று கேட்டவுடன் அவன் சொன்னான்,”காய்கறி வாங்க சந்தைக்கு செல்கிறேன்.” மனம் வருந்தியவனாகக் கோவிலுக்கு திரும்பிய இவன் நடந்ததைக்கூறி ”நான் ஒவ்வொரு முறையும் தயாரான பதிலுடன் செல்கிறேன்.

ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் மாறிப் பேசுகிறான்.அந்தப் பையனின் வாயை அடைப்பது சிரமமாக இருக்கிறது,”என்றான்.

வாழ்க்கையும் இவ்வாறே ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது.நீங்களோ தயாரான பதிலை ஏந்திக்கொண்டு அதனிடம் செல்கிறீர்கள்.நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தவற விடுவதெல்லாம் இத்தகைய தயாரான பதிலைக் கொண்டுதான்..

தெரிந்துக் கொள்வோமா-5 [ஹிட்லர்]

ஹிட்லரைக் கவர்ந்த நாடு:
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரிடம்
அவரது நண்பர்கள் சுவிஸ் நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்று கேட்டுக்
கொண்டார்கள்.

:-
அதற்கு ஹிட்லர்,

""வேண்டாம்.சுவிட்சர்லாந்துஓர் அழகான நாடு. நாம் ஆசைப்பட்டு இப்போதே அதை அழித்துவிட்டால் பிறகு எதிரிகளிடம் ஒன்றாக அமர்ந்து பேச நடுநிலை நாடு என்பது இல்லாமல் போய்விடும். 

மேலும் உங்களைப் போன்ற உயர் ராணுவ அதிகாரிகள் ஓய்வு கொள்ள விரும்பினால், போரில்லாத நாடு என்றுஒன்று வேண்டுமல்லவா? 

ஆகவே சுவிட்சர்லாந்தைத் தொடக்கூடாது'' என்று கூறினார்.

தெரிந்துக் கொள்வோமா-4 [நெப்போலியன்]

தோற்றமும் தகுதியும்: ஓவியர் ஒருவர்மாவீரன் நெப்போலியனைப் பேட்டி காணச் சென்றார். ஏழ்மையில் வாடி கந்தலும் கிழிசலுமான உடை அணிந்திருந்த அந்த ஓவியரிடம் சிறிது அருவருப்புடனேயே நெப்போலியன் பேட்டியளித்தார். 

ஆனால்ஓவியரின் அறிவும், பண்பும், கலைத்திறனும் உடைய சிறந்த கலைஞர் என்பதைப் பேசிக் கொண்டிருக்கையிலேயேபுரிந்து கொண்டார் நெப்போலியன். 

பேட்டி முடிந்ததும் ஓவியரும் எழுந்தார். முதலில் அருவருப்புக் காட்டிய நெப்போலியன் பின்பு பரிவுடன் பேசியதைக் கண்ட ஓவியர் வியப்போடு அதன் காரணத்தை நெப்போலியனிடமே கேட்டுவிட்டார். 

சிரித்துவிட்டு நெப்போலியன் சொன்னார்,""ஓவியக் கலைஞரே! முன்பின் தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய வெளித் தோற்றத்துக்கு ஏற்ப வரவேற்பு. ஆனால் பழகிப் பிரியும்போது அவரவர் தகுதிக்கேற்ப விடை கொடுக்கிறோம்'' என்றார்.
:-

தெரிந்துக்கொள்வோமா-3 [இந்திய சுதந்திரப் போராட்டம்]

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. 

அப்போது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து ஆவேசமாக,""நமக்கு அடிமையாக இருந்த எல்லா நாடுகளிலும் நடந்த கலவரங்களையும் சுதந்திரப் போராட்டங்களையும் அடக்கிவிட்டோம். 

ஆனால் இந்தியாவில் நடைபெறும் சுதந்திரப் போராட்டத்தை ஏன் அடக்க முடியவில்லை'' என்று கேட்டார்.
:-

அதற்கு பிரதமர் வின்சென்ட்சர்ச்சில் எழுந்து,

""எந்த நாடும் கத்தியைக் கொண்டு போராடினால் துப்பாக்கியைக்கொண்டு அடக்கிவிடலாம்.

துப்பாக்கியைக் கொண்டு போராடினால் பீரங்கிகளைக் கொண்டு அடக்கிவிடலாம்.

பீரங்கிகளைக்கொண்டு போராடினால் ஆகாய விமானத்திலிருந்து குண்டு வீசி அடக்கிவிடலாம்.

ஆனால் இந்தியா சத்தியத்தைக் கொண்டல்லவா போராடுகிறது?

சத்தியத்தை வெல்ல உலகத்தில் எந்த ஆயுதமும் இல்லையே'' என்று கூறினார்.
:-

(எவ்வளவு தான் திருடுவது என்று தெரியவில்லை... எனினும் திருடிக்கொண்டே இருக்கிறேன்...)

தெரிந்துக் கொள்வோமா-2 [பொ.அ.]


தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள். . .

• அண்டார்டிக் கண்டம் உலக நாடுகளுக்குத் தெரிய வந்தது 1820-ஆம் ஆண்டில்தான்.

• ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி, மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.
:-
• தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
:-
• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.
• சேரன் தீவு என்றழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.
:-
• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.
• அமெரிக்காவில் காணப்படும் லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது.இது ஓட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது.
:-
• மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.
• பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இதுபறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!
:-
• காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.
• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு.7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.
:-
• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.
• பிறந்த அன்றைக்கே நிற்கவும் நடக்கவும் முடிகிற விலங்குகள் வரிக்குதிரையும் ஆடுகளும்.
:-
• தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முகலாய மன்னர் பாபர்.
• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.
:-
• செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதைதான்.
• ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.
:-
• ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்
கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.
• எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப்
பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.
:-
• கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.
• ஆண்களுக்கான சட்டையைக் கண்டுபிடித்த நாடு எகிப்து.
:-
• இரண்டு செட் உடைகள் மட்டுமே பிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சூட்கேஸ்கள் முதன்முதலில் பிரேசில்நாட்டில் தயாரிக்கப்பட்டன.
• மாரடைப்பால் நின்றுபோன இதயத்தை மீண்டும் இயக்க உதவும் கருவியின் பெயர் மார்க்விட் ரெஸ்பாண்டர் 1200.
:-
• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றசர்.சி.வி.ராமன்,திருச்சிக்கு அருகிலுள்ள"திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.
• பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டமானது என்று கருதுபவர்கள் ஐஸ்லாந்து மக்கள்.
:-
• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.
• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.
:-
• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
• ஒரு கிலோவில் சுமார் 2000ரப்பர் பேண்டுகள் இருக்கும்.
:-
• ரோஜாக்களிலிருந்து பன்னீர் எடுத்து அதைப் பிரபலமாக்கிய பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான்.
• பெட்ரோலை "கேúஸôலின்' என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.
:-
• ஜப்பானியரும் பிலிப்பைன்ஸ் நாட்டவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.
• தொடக்கப் பள்ளியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.
:-
• இங்கே வீட்டுக்கு வீடு கிணறுகள் இருப்பது போல அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு நீச்சல் குளங்கள் இருக்கும்.
• தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.
:-
• முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா.
• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர் ஜப்பானைச்சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.
:-
• வானம்பாடிப் பறவைகளில் 75 வகைகள்உள்ளன.
• எல்லைப் பிரச்னை காரணமாக எறும்புகளும் சண்டை போட்டுக் கொள்கின்றனவாம்.
:-
• ஆசியா கண்டத்தில் முதன்முதலில் கார் தயாரித்த நாடு ஜப்பான்.
• நிலக்கடலையின் பிறப்பிடம் தென் அமெரிக்கா.
:-
• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.
• பூட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மிருகங்களின் நரம்பினால் செய்யப்பட்ட உறுதியான கயிறுகளைக் கொண்டு வீட்டுக் கதவுகளைக் கட்டி வைத்தார்கள்.
:-
• "கிராம் பெர்ரி' என்ற ரஷ்ய நாட்டுப் பழம் ஓராண்டுவரையிலும் கெட்டுப் போகாமல் இருக்குமாம்.
• தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரின்முந்தைய பெயர்"அக்பராபாத்'.
:-
• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.
• உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பூவைத் தரும் செடி குங்குமப் பூச்செடிதான்.
கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது.
• கால் விரல் நகங்களைவிட கை விரல் நகங்கள் சுமார் நாலு மடங்கு வேகமாக வளர்கின்றன
• சலிப்பு என்று பொருள்படும்"Boredom' என்ற வார்த்தையை உருவாக்கியவர் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்
• பல ஆண்டுகளாக சுருட்டு புகைத்து வரும் ஒருவரின் ரத்தத்தை அட்டை கடித்து உறிஞ்சினால் அந்த அட்டை இறந்துவிடும்.
• "ஆக்டினோ டைசீட்' என்ற உயிரினம் நிலத்தில் ஒருசிட்டிகை அளவுள்ள மண்ணில் நிறைய உள்ளது. இதன் மீது மழைபெய்யும்போது, இந்த உயிரினம் கிளர்ந்து எழுகிறது. அப்போது ஏற்படும்வாசனையைத்தான் மண் வாசனை என்கிறோம்.
• ஆக்டோபஸ் பிறக்கும்போது ஒரு ஈ அளவுதான் இருக்கும்.
• பறவை இனத்தில் ஆந்தையால் மட்டுமே நீல நிறத்தை காண முடியும்.

சிரிக்கலாம் வாங்க-5

நீங்களோ நானோ ஒரு ஆரஞ்சுப் பழத்தை இன்னொருத்தருக்குக் கொடுக்கணும்ன்னா சிரிச்சுக்கிட்டே கொடுப்போம்.. 

அவரும் சிரிச்சுக்கிட்டே வாங்கிப்பாரு.. 

ஆனா ஒரு வழக்கறிஞர் கொடுத்தா எப்படிக் கொடுப்பார்ன்னு ஒரு சின்னக் கற்பனை...

நாளது ##ம் வருடம் ##ம்
நாள் சென்னை வியாசர்பாடி, கொள்ளைக்காரன் பேட்டை,
அரிவாள் தூக்கித் தெரு,

13ம் எண் விலாசத்தில் வசிக்கும்

தமுக்கடிச்சான் மகன் டமாரம் கொட்டி ஆகிய நான்,

மேற்படி ஊரில் அதே தெருவில் 14 ம் எண் வீட்டில்வாடகை கொடுக்காமல் குடியிருந்து வரும் ஈயடிச்சான் மகன்

கொசு கடிச்சான் அவர்களுக்கு, என்னால் கோயம்பேட்டில் அழு'கிய
மணவாளன் கடையில் கடனுக்கு வாங்கப்பட்டிருக்கும் சிட்ரஸ் ஆரண்டியம் என்ற உயிரியல் பெயரும் கொடை

ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு என்ற சாதாரணப் பெயர்களையும் கொண்ட இப்பழத்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாது,

இதன் பேரில் எனக்கிருக்கும் உரிமை, சொந்தம், பாத்தியம்,ஆதாயம் ஆகியவற்றையும் உங்கள் அனைவர் முன்னிலையில், என் சுய புத்தியோடும், முழு மனதோடும், எவ்வித நெருக்குதலுக்கு ஆளாகாமலும்,

மனமுவந்து அளிக்கிறேன்.

இதை இவர், உடனடியாகவோ அல்லது தான் விரும்பும் போதோ, தனக்காகவோ அல்லது பிறர்க்காகவோ பயன்படுத்தலாம்.

இதைக் கடித்துத் தின்னவோ, உறித்துத் தின்னவோ, கொட்டையுடனோ அல்லது அவற்றை அகற்றிவிட்டோ தின்னவோ எவ்வித தடையுமில்லை.

இந்தப் பழத்தை நம்மில் இரண்டாவது நபரானவர், அப்படியே ஒரே தடவையிலோ அன்றிப் பகுதியாகவோ,

சுளையாகவோ, அல்லது

சாறு பிழிந்தோ சுவைக்க உரிமை பெற்றவர் ஆகிறார்.

இதன் தோலைத் தின்னவோ தூக்கி எறியவோ அல்லது

கண்ணில் பீய்ச்சிக்கொண்டு கத்தவோ பாத்தியப் பட்டவராகிறார்.

இதன் விதைகளைப் பயிராக்க இவருக்கு நான் உரிமையளித்திருப்பதால் இதைப் பயிராக்கி அந்த மரத்திலிருந்து கிடைக்கும் பழங்களை

இவரோ இவரது வம்சாவளியினரோ சர்வ சுதந்திரமாக விற்பனை செய்யவோ,

இலவசமாக வழங்கவோ, தோக்கி எறியவோ யாதொரு இடர்ப்பாடும் இல்லை.
அந்த ஆரஞ்சு மரத்தை வெட்டி விறகாகவோ அல்லது

என்னங்க..நில்லுங்க.. ஏன் இப்படி ஓடறீங்க.. சொன்னாக் கேளுங்க நில்லுங்க..!

சிரிக்கலாம் வாங்க-4

சர்தார் ஒருநாள் நண்பன்கிட்ட சொன்னாரு..

நான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா கடவுள் ஆகிக்கிட்டு வர்றேன்..

அப்படியா.. சொல்லவே இல்ல..

ஆமாம்..நான் எங்கே போனாலும் மக்கள் இப்போ 

" அடக் கடவுளே... நீ இங்கேயும் வந்துட்டியா..? " ன்னுகேட்கறாங்க..!

சிரிக்கலாம் வாங்க-3

வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...

அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?

அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..
நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..

இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! 

டிவோர்ஸ் வரைக்கும் கொண்டு போய் விட்டுடும்..!

பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. 

விலையைச் சொல்லு..!
சொன்ன கேளுங்க்.. 

இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..

ரிஸ்க் எடுக்கறீங்க..சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..

விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!

வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..

புது வீடு.. 

புது எஜமானியம்மா.. 

ப்ரமாதம்..!

எஜமானிக்கு ஆச்சர்யம்..! 

பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..
கிளி..

" புது வீடு.. புது எஜமானியம்மா.. 

புது குழந்தைங்க.. ப்ரமாதம்..

கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...

புது வீடு..
புது எஜமானியம்மா..
புது குழந்தைங்க..
புது காரு...

அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???

சிரிக்கலாம் வாங்க-2


(ஏற்கனவே இதைப்படித்திருந்தாலும், சிரிப்பு வரவில்லையென்றாலும், மன்னு நிக்கனும், sorry மன்னிக்கனும்..)








ஒரு இந்திய அரசியல்வாதி ( எம்.பி.) அமெரிக்கா சென்ற போது அங்குள்ள அரசியல்வாதியின் (செனட்டர்) வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்..

செனட்டரின் மாளிகையில் ஒவ்வொரு இடத்திலும் பொருட்செலவு மிக்க ஆடம்பரப் பொருட்கள் அணிவகுத்திருப்பதைக்க் கண்டார்..

ஆச்சர்ய மிகுதியில் செனட்டரைக் கேட்டார்..

"எப்படி இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்..?

செனட்டர், எம்.பி.யை அழைத்து ஜன்னலுக்கு வெளியே ஒன்றைக் காட்டினார்..

அது ஒரு பிரம்மாண்டமான தொங்கு பாலம்..

செனட்டர் சொன்னார்..

" 10 சதவீதம்...!"

எம்.பி. புரிந்துகொண்டார்.

பின்னர் ஒரு ஆண்டு கழித்து அதே செனட்டர் இந்தியா வந்தார்.. எம்.பி. விருந்துக்கழைக்க அவரது அரண்மனைக்கும் வந்தார்..

ஏராளமான நகைகள்.. வாகனங்கள்.. செருப்புகள்..

பிரமித்துப் போன செனட்டர் கேட்டார்..

"எப்படி இவ்வளவு பணம் செர்த்தீர்கள்..?"

எம்.பி. அவரை ஜன்னலுக்கு வெளியில் கைகாட்டிச் சொன்னார்..

"அதோ.. அந்தப் பாலத்தைப் பாருங்க.."

" ஆனால்... அங்கு பாலம் எதுவும் இல்லையே..?"

எம்.பி. பெருமையுடன் சொன்னார்..

"100 சதவீதம்...!".

பின்னர் செனட்டருக்கு முதலுதவி செய்து மயக்கத்தை தெளிய வைக்க வேண்டியதாயிற்று...!
 

Friday, January 25, 2013

இதைச் செய்தால் நான் காங்கிரசுக்கு ஆதரவாய்ப் பிரச்சாரம் செய்வென்...


தாய்...

தாயை சிறந்தக் கோவிலுமில்லை...

பேயானாலும் தாய்...

மண்ணில் வந்த தெய்வம் தாய்........

உழவது நிற்க, விழுவது உறுதி....


சிந்திக்க வேண்டிய விடயம்...

1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்

நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்...
அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான்.

நேற்று விவசாயிகள் தினமாம். அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.

சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.

டாலருக்காக அடகு வைக்கப் படும் என் படிப்பும் அறிவும், என்றுமே இவன் வியர்வைக்கு முன் மண்டி இடும்.

சிந்திக்க வைத்தது....

புகைப்படம்: சிந்திக்க வேண்டிய விடயம்...

1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்

நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு  பட்டா (patta) போடுவோம்...
அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான்.

நேற்று விவசாயிகள் தினமாம்.  அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.  

சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.

டாலருக்காக அடகு வைக்கப் படும் என் படிப்பும் அறிவும், என்றுமே இவன் வியர்வைக்கு முன் மண்டி இடும்.

சிந்திக்க வைத்தது...Ravi Nag பகிர்வு.
Ravi Nag பகிர்வு

மதிப்பு...


Meaning of Value ...- a must read story

A well known speaker started off his seminar by holding up a Rs.1000 note. In the room of 200, he asked, "Who would like this Rs.1000 note?"

Hands started going up.

He said, "I am going to give this Rs.1000 to one of you but first, let me do this." He proceeded to crumple the dollar bill up.

He then asked, "Who still wants it?"

Still the hands were up in the air.

"Well," he replied, "What if I do this?" And he dropped it on the ground and started to grind it into the floor with his shoe.

He picked it up, now all crumpled and dirty. "Now who still wants it?" Still the hands went into the air.

"My friends, you have all learned a very valuable lesson. No matter what I did to the money, you still wanted it because it did not decrease in value. It was still worth Rs.1000.

Many times in our lives, we are dropped, crumpled, and ground into the dirt by the decisions we make and the circumstances that come our way.

We feel as though we are worthless. But no matter what has happened or what will happen, you will never lose your value. You are special - Don't ever forget it!


Meaning of Value ...
- a must read story





A well known speaker started off his seminar by holding up a Rs.1000 note. In the room of 200, he asked, "Who would like this Rs.1000 note?"

Hands started going up.

He said, "I am going to give this Rs.1000 to one of you but first, let me do this." He proceeded to crumple the dollar bill up.

He then asked, "Who still wants it?"

Still the hands were up in the air.

"Well," he replied, "What if I do this?" And he dropped it on the ground and started to grind it into the floor with his shoe.

He picked it up, now all crumpled and dirty. "Now who still wants it?" Still the hands went into the air.

"My friends, you have all learned a very valuable lesson. No matter what I did to the money, you still wanted it because it did not decrease in value. It was still worth Rs.1000.

Many times in our lives, we are dropped, crumpled, and ground into the dirt by the decisions we make and the circumstances that come our way.

We feel as though we are worthless. But no matter what has happened or what will happen, you will never lose your value. You are special - Don't ever forget it!

தங்கம் விலை

Tuesday, January 22, 2013

விரைவில் மிகுதியாய் கௌரவிக்கப் படவேண்டும். மேலும், மிகவும் பிரபலப்படுத்த வேண்டும். இவையே, மேலும் பலரை ஊக்குவிக்கும்/உருவாக்கும்...



சாதனைத் தமிழனைப் பாராட்டுவோம்..!
தண்ணீரில் ஓடும் இரு சக்கரவண்டி..!
பெட்ரோலுக்கு, "டாட்டா'..!

காரைக்கால்: பெட்ரோலுக்கு, "டாட்டா' காட்டும் வகையில், தண்ணீரில் பைக் இயக்கிய, காரைக்காலை சே ர்ந்தவரை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்தவர், அமீது மரைக்காயர் 42, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த இவர், பிரான்சில் டெக்னிக்கல் கோர்ஸ் படித்துள்ளார். பெட்ரோல் விலை அதிகரிப்பதால், தண்ணீரில் வாகனம் ஓடும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தார். ஐந்து ஆண்டுகளாக, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

"எலக்ட்ரோலைசிஸ்': இதில், "எலக்ட்ரோலைசிஸ்' தொழில் நுட்பத்தின் அடிப்படையில், "கரன்ட்' மூலம் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைத் பிரித்து, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் ஓடும் மோட்டார் வாகனங்களை தண்ணீரில் இயக்க முடியும் என கண்டுபிடித்தார். அமீது மரைக்காயர், நேற்று முன்தினம் மாலை, சட்டசபையில் முதல்வரைச் சந்தித்து, தன் தயாரிப்பு குறித்து, செயல் விளக்கம் அளித்தார். முதல்வர் ரங்கசாமி ஆவலுடன் கேட்டு மரைக்காயரைப் பாராட்டினார். முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

அமீது மரைக்காயர் கூறியதாவது:"எலக்ட்ரோலைசிஸ்' தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தண்ணீரில் வாகனங்களை இயக்குவது குறித்து, ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தேன். இதில் இரு வகை உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருளுடன் தண்ணீர் கலந்து இயக்குவது ஒரு வகை. பெட்ரோல் டீசல் எதுவுமின்றி, முழுவதும் தண்ணீரில் இயக்குவது, மற்றொரு வகை.எரிபொருளுடன் தண்ணீரால் இயக்க, பைக்கிற்கு, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய்வரை தனியாக செலவாகும். முழுவதும் தண்ணீரால் இயங்க, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய்தனியாக செலவாகும்.எந்த வாகனத்திலும், என் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஓட்டும் போது, எந்த பிரச்னையும் இருக்காது. பெட்ரோல், டீசல், எரிவாயு உதவியோடு வாகனம் ஓட்டும் போது, சில, கி.மீ.,க்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். ஆனால் தண்ணீரில் இந்தப் பிரச்னை இருக்காது. குறைந்தது, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஓட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
சாதனைத் தமிழனைப் பாராட்டுவோம்..!
தண்ணீரில் ஓடும் இரு சக்கரவண்டி..!
பெட்ரோலுக்கு, "டாட்டா'..!

காரைக்கால்: பெட்ரோலுக்கு, "டாட்டா' காட்டும் வகையில், தண்ணீரில் பைக் இயக்கிய, காரைக்காலை சே ர்ந்தவரை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்தவர், அமீது மரைக்காயர் 42, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த இவர், பிரான்சில் டெக்னிக்கல் கோர்ஸ் படித்துள்ளார். பெட்ரோல் விலை அதிகரிப்பதால், தண்ணீரில் வாகனம் ஓடும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தார். ஐந்து ஆண்டுகளாக, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

"எலக்ட்ரோலைசிஸ்': இதில், "எலக்ட்ரோலைசிஸ்' தொழில் நுட்பத்தின் அடிப்படையில், "கரன்ட்' மூலம் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைத் பிரித்து, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் ஓடும் மோட்டார் வாகனங்களை தண்ணீரில் இயக்க முடியும் என கண்டுபிடித்தார். அமீது மரைக்காயர், நேற்று முன்தினம் மாலை, சட்டசபையில் முதல்வரைச் சந்தித்து, தன் தயாரிப்பு குறித்து, செயல் விளக்கம் அளித்தார். முதல்வர் ரங்கசாமி ஆவலுடன் கேட்டு மரைக்காயரைப் பாராட்டினார். முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

அமீது மரைக்காயர் கூறியதாவது:"எலக்ட்ரோலைசிஸ்' தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தண்ணீரில் வாகனங்களை இயக்குவது குறித்து, ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தேன். இதில் இரு வகை உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருளுடன் தண்ணீர் கலந்து இயக்குவது ஒரு வகை. பெட்ரோல் டீசல் எதுவுமின்றி, முழுவதும் தண்ணீரில் இயக்குவது, மற்றொரு வகை.எரிபொருளுடன் தண்ணீரால் இயக்க, பைக்கிற்கு, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய்வரை தனியாக செலவாகும். முழுவதும் தண்ணீரால் இயங்க, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய்தனியாக செலவாகும்.எந்த வாகனத்திலும், என் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஓட்டும் போது, எந்த பிரச்னையும் இருக்காது. பெட்ரோல், டீசல், எரிவாயு உதவியோடு வாகனம் ஓட்டும் போது, சில, கி.மீ.,க்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். ஆனால் தண்ணீரில் இந்தப் பிரச்னை இருக்காது. குறைந்தது, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஓட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

யார், யாருக்கெல்லாம் இரத்தத் தானம் செய்யலாம்???


Sunday, January 20, 2013

தமிழுக்கு பெருமை.. Thamizhukku perumai...


தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண். 

இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார். 

சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் . 

இவரது முதல் புத்தகமான 'சீனாவில் இன்ப உலா ' என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 

இப்புத்தகத்தில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய் நகரம் மற்றும் திபெத்தின் வரலாறு மட்டும் கலாச்சாரங்கள் குறித்து கலைமகள் எழுதி உள்ளார். தமிழக மக்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு தான் இப்புத்தகம் எழுதப்பட்டது என்று கூறுகிறார் கலைமகள் . 

இப்புத்தகத்தை எழுத தூண்டியவர்கள் இவரது வானொலி நேயர்களே. இவர்களே கலைமகளுக்கு ஆயிரக்கணக்கில் தரைவழி அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பி சீனா பற்றி தாங்கள் அறிந்து கொள்ள தமிழில் நூல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் . 

சீன வானொலி ஆண்டொன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் அஞ்சல்களை தனது வாசகர்களிடம் இருந்து பெறுகிறது . சீனாவில் உள்ள 60 பன்னாட்டு வானொலி சேவைகளில் தமிழ் மொழிப் பிரிவுக்கு தான் இத்தனை கடிதங்கள் அனுப்பப் படுகிறது . காரணம் தமிழ் நேயர்கள் இந்தியா , இலங்கை, மலேசியா , சிங்கை மற்றும் ஐரோப்பாவில் இருந்து சீன வானொலியை ஆர்வமுடன் கேட்கின்றனர் . 

சீனாவில் உள்ள தகவல் தொடர்பு பல்கலையில் கலைமகள் தமிழ் மொழியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சீனாவில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் ஒரே பல்கலைகழகம் இதுவே ஆகும். பட்டப் படிப்பு முடித்தவுடன் இவர் சீன வானொலியில் அறிவிப்பாளராக வேலைக்கு சேர்ந்தார் . தமிழ் படிக்கும் சீனர்களை அதிக அளவில் சீன வானொலி வேலைக்கு அமர்த்துகிறது . தமிழ் படித்தால் தமிழ் நாட்டில் வேலை இல்லை என்ற நிலை இங்கிருக்க , தமிழ் படித்தால் சீனாவில் வேலை உள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது . 

கலைமகள், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணித்துள்ளார். பட்டி தொட்டி எங்கும் சென்று வந்துள்ளார். இவரின் தமிழ் வாசகர்களை சந்திக்கும் நிமித்தமாகவே இவர் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றலா மேற்கொண்டார் . தற்போது தமிழ் நாட்டில் ஓராண்டு தங்கி தமிழ் படிக்கச் வேண்டும் என விரும்புகிறார் . பொதுவாக சீன மக்களுக்கு இந்திய என்றாலே புது டெல்லி தான், வடஇந்தியா தான் என்ற எண்ணத்தை மாற்றி தென் இந்தியா , தமிழகம் குறித்த விழிப்புணர்வை சீன மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என இவர் புத்தகம் எழுத உள்ளார் . இதன் மூலம் சீன பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள், தென் இந்தியாவின் பண்பாடுகளை அறிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கலைமகள். 

லைப் ஒப் பை என்ற ஆங்கில திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து சீன மக்களுக்கு தென்னிந்தியா குறித்து ஆர்வம் அதிகமாகி உள்ளது என்று கலைமகள் கூறுகிறார் . இப்படம் புதுவையில் எடுப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது . 

கலை மகள் போன்ற சீனர்கள் தமிழ் மொழி , பண்பாட்டின் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகையில் தமிழக மக்களோ தமிழில் பேசுவதை, தமிழில் பெயர் வைப்பதை கேவலமாக எண்ணுகின்றனர் என்பது கசப்பான உண்மை தான். இவரை பார்த்தாவது தமிழர்கள் இனி திருந்த வேண்டும் . தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து தமிழர்கள் தங்கள் மொழியை போற்ற வேண்டும் . கலைமகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது


தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.




இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.

சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .

இவரது முதல் புத்தகமான 'சீனாவில் இன்ப உலா ' என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இப்புத்தகத்தில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய் நகரம் மற்றும் திபெத்தின் வரலாறு மட்டும் கலாச்சாரங்கள் குறித்து கலைமகள் எழுதி உள்ளார். தமிழக மக்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு தான் இப்புத்தகம் எழுதப்பட்டது என்று கூறுகிறார் கலைமகள் .

இப்புத்தகத்தை எழுத தூண்டியவர்கள் இவரது வானொலி நேயர்களே. இவர்களே கலைமகளுக்கு ஆயிரக்கணக்கில் தரைவழி அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பி சீனா பற்றி தாங்கள் அறிந்து கொள்ள தமிழில் நூல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் .

சீன வானொலி ஆண்டொன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் அஞ்சல்களை தனது வாசகர்களிடம் இருந்து பெறுகிறது . சீனாவில் உள்ள 60 பன்னாட்டு வானொலி சேவைகளில் தமிழ் மொழிப் பிரிவுக்கு தான் இத்தனை கடிதங்கள் அனுப்பப் படுகிறது . காரணம் தமிழ் நேயர்கள் இந்தியா , இலங்கை, மலேசியா , சிங்கை மற்றும் ஐரோப்பாவில் இருந்து சீன வானொலியை ஆர்வமுடன் கேட்கின்றனர் .

சீனாவில் உள்ள தகவல் தொடர்பு பல்கலையில் கலைமகள் தமிழ் மொழியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சீனாவில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் ஒரே பல்கலைகழகம் இதுவே ஆகும். பட்டப் படிப்பு முடித்தவுடன் இவர் சீன வானொலியில் அறிவிப்பாளராக வேலைக்கு சேர்ந்தார் . தமிழ் படிக்கும் சீனர்களை அதிக அளவில் சீன வானொலி வேலைக்கு அமர்த்துகிறது . தமிழ் படித்தால் தமிழ் நாட்டில் வேலை இல்லை என்ற நிலை இங்கிருக்க , தமிழ் படித்தால் சீனாவில் வேலை உள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது .

கலைமகள், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணித்துள்ளார். பட்டி தொட்டி எங்கும் சென்று வந்துள்ளார். இவரின் தமிழ் வாசகர்களை சந்திக்கும் நிமித்தமாகவே இவர் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றலா மேற்கொண்டார் . தற்போது தமிழ் நாட்டில் ஓராண்டு தங்கி தமிழ் படிக்கச் வேண்டும் என விரும்புகிறார் . பொதுவாக சீன மக்களுக்கு இந்திய என்றாலே புது டெல்லி தான், வடஇந்தியா தான் என்ற எண்ணத்தை மாற்றி தென் இந்தியா , தமிழகம் குறித்த விழிப்புணர்வை சீன மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என இவர் புத்தகம் எழுத உள்ளார் . இதன் மூலம் சீன பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள், தென் இந்தியாவின் பண்பாடுகளை அறிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கலைமகள்.

லைப் ஒப் பை என்ற ஆங்கில திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து சீன மக்களுக்கு தென்னிந்தியா குறித்து ஆர்வம் அதிகமாகி உள்ளது என்று கலைமகள் கூறுகிறார் . இப்படம் புதுவையில் எடுப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது .

கலை மகள் போன்ற சீனர்கள் தமிழ் மொழி , பண்பாட்டின் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகையில் தமிழக மக்களோ தமிழில் பேசுவதை, தமிழில் பெயர் வைப்பதை கேவலமாக எண்ணுகின்றனர் என்பது கசப்பான உண்மை தான். இவரை பார்த்தாவது தமிழர்கள் இனி திருந்த வேண்டும் . தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து தமிழர்கள் தங்கள் மொழியை போற்ற வேண்டும் . கலைமகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது

ஏழை விவசாயிகளிடம் பேரம் பேசாதீர்கள்.. please don't bargain at local farmers.....தயவுசெய்து


please don't bargain at local farmers.....தயவுசெய்து ஏழை   விவசாயிகளிடம் பேரம் பேசாதீர்கள்..

35%, 40% னு லாபம் வச்சி விற்கும் பெரிய பெரிய shopping centers ல பொருள் வாங்கும் போது விலையா பற்றி எதுவும் சொல்லுரதில்ல, கேட்கிர காசு கொடுத்திடுவோம்...

நம்ம வியாபர திறமையெல்லாம் (ரூ.5 .ரூ.10 பேரம் பேசுரது) இவங்கள மாதிரி வயித்துக்காக பொலப்பு நடத்துரவங்ககிட்டதான்...

யோசிச்சு பாருங்க நாம கொடுக்குர 5, 10 வைத்து அவங்க அடுத்த ஊருல branch'a ஆரம்பிக்க போராங்க, ஏதோ ரெண்டு வேலை நிம்மதியா சாப்டுட்டு போராங்க...!
















35%, 40% னு லாபம் வச்சி விற்கும் பெரிய பெரிய shopping centers ல பொருள் வாங்கும் போது விலையைப் பற்றி எதுவும் சொல்லுரதில்ல, கேட்கிர காசு கொடுத்திடுவோம்...

நம்ம வியாபர திறமையெல்லாம் (ரூ.5 .ரூ.10 பேரம் பேசுரது) இவங்கள மாதிரி வயித்துக்காக பிழைப்பு நடத்துரவங்ககிட்டதான்...

யோசிச்சு பாருங்க நாம கொடுக்குர 5, 10 வைத்து அவங்க அடுத்த ஊருல branch'a ஆரம்பிக்க போராங்க, ஏதோ ரெண்டு வேலை நிம்மதியா சாப்டுட்டு போராங்க...!


அவ்வளவு தானே...

பாட்டி வைத்தியம் - 1


1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கலுக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்

நிகழ்வு-1

இந்த நிகழ்ச்சி 2011-ஆம் ஆண்டின் நிறைவுக் காலாண்டில் நிகழ்ந்தது.

*******


           நான் பணிப்புரியும் அலுவலகத்தில் வேலையிலிருந்த போது மாலை சுமார் 07.00 மணியளவில், கருவுற்றிருக்கும் என் மனைவியிடமிருந்து, அவருக்கு மிகுந்த வயிற்றுவலி என்று அழைப்பு வந்தது. சூல் கொண்ட பின்பு, வலி என்று எனது மனைவி முதல்முறையாக கூறியதனால் நான் பதறிப்போனேன்.

            அவசர அவசரமாய் அலுவலகத்தினின்று கிளம்பி, பழக்கடைச் சென்று (கருவுற்றதிலிருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பழம் வாங்கித் தருவது வழக்கமாகி இருந்தது.) ரூ.80ற்கு பழம் வாங்கினேன். ரூ. 500/- கொடுத்து விட்டு மீதமும் பெற்று பழத்தையும் பெற்றுக்கொண்டு அவசர அவசரமாய் வீடு வந்து சேர்ந்தேன்.

    இதற்கிடையில் எனக்கு, ஒரே எண்ணிலிருந்து 4 அழைப்புகள் தவறவிட்டதாய் உலாப்பேசியில் பதிவாகியிருந்தது. எனினும் சுமார் 08.30 மணிக்கு அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள நினைத்தப்போது, அந்த எண்ணிலிருந்தே அழைப்பு வந்தது. அழைத்தவர் எனது விவரங்களை சரிவரக்கூறி என்னை வியப்பிலாழ்த்தியப் பின்பு, நான் எனது பர்ஸை அந்தப் பழக்கடையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாகவும் வந்து பெற்றுக் கொள்ளுமாறும அழைத்தார். மேலும் அவரே, எனது தகவல்கள் மற்றும் எனது உலாப்பேசி எண்ணையும், பர்ஸில் வைத்திருந்த பணி அடையாள அட்டையிலிருந்து பெற்றதாகவும் கூறினார்.

               பின்பு நேரில் சென்று, அதனைப் பெற்றுக் கொண்ட போது, பர்ஸில் உள்ள அனைத்தும் உள்ளனவா என சரிப்பார்த்துக் கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டார். வேறொரு வாடிக்கையாளர் எடுத்துக்கொடுத்ததாகவும் அவரேக் கூறினார். பார்த்ததில் நான் வைத்திருந்த ரூ.1,420/-உம் பத்திரமாயிருந்தது.

பி.கு.:-

1. அவர் அந்தப் பர்ஸினை மறைத்திருந்தால் நான் தொலைத்துவிட்டதாக எண்ணியிருந்திருப்பேன்.
2. எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரியெல்லாம் நடக்குது என்று புலம்புபவர்கள் இருக்க, எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நன்மை நடந்துக்கொண்டேயிருக்கிறது என்றெண்ணி மகிழ்ந்துக்கொண்டேயிருக்கின்றேன்.

3. இன்னும் நிறைய எழுதலாம் என்றிருக்கிறேன்.

4. கடையின் முகவரி: பெயர் நினைவில்லை, காமராஜ் சாலை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினை ஒட்டினார்ப்போல் அமைந்துள்ளது

Saturday, January 19, 2013


தமிழர் கணிதத் திறனுக்கு ஒரு சான்று !

தமிழில் கணிதம் என்று ஒன்று இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆங்கில கல்வியும், ஆரியமும் நம்மை பார்த்து இன்று ஏளனமாக சிரிக்கிறது .

ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்றதோடு நுணுக்கமாக நேர்கோட்டில் வீதிகளையும், வீடுகளையும், கோவில்களையும், சிற்பங்களையும் கட்டி அமைத்தனர். அவை எல்லாம் நுண் கணிதம் இல்லாமல் சாத்தியமாகாது . யானைப் படையை ஏற்றிக் கொண்டு கடல் வழியே கடாரம் வரை சென்றது சோழர் படை . அக்கப்பல்கள் எண் கணிதம் இல்லாமல் வடிமைக்கப்படுமா ? எண்ணியல்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற நிலையில் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு இந்தப் படமே சான்று .

பண்டைய தமிழர்கள் பத்தின் பெருக்கம் அனைத்திற்கும் ஒவ்வொரு பெயர் வைத்தனர். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீட்டை உருவாக்கினர். நூறு, ஆயிரம், பத்தாயிரம் , இலக்கம் , கோடி என விரியும் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பெயர் வைத்து வழங்கிய தமிழர்கள் எந்த அளவிற்கு தமிழ் கணித முறையில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும் . தமிழை அறிந்தவர் கணிதத்தையும் அறிந்தவரே ஆவார். மீட்டெடுப்போம் தமிழர் கணித முறைகளை . நம் குழந்தைகளுக்கு தமிழ்க் கணித முறையை சொல்லிக் கொடுப்போம் .

கீழே வள்ளலார் பாடலில் குறிப்பிட்டுள்ளது பத்தின் பெருக்கம் கோடியில் அளவில்லாமல் பெருகும் என்பதற்கு சான்று !


(பி.கு.:- இது ஃபேஸ் புக்கில் இருந்து திருடியது...)