Monday, April 8, 2013

தாயைச் சிறந்த கோவிலுமில்லை... தாய் மொழியைச் சிறந்த ஆசிரியரும் இல்லை....




தமிழக பெற்றோர்கள் கவனத்திற்கு. சீனத்து சிறுமியின் மழலைத் தமிழ் ! 
மெத்த படித்த தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழில் பேசுவதையே விரும்புவதில்லை . இந்த சீனத்து குழந்தையை பாருங்கள் . எவ்வளவு அழகாக தமிழ் மொழியை புரிந்து வரிக்கு வரி அதற்கான பாவனை செய்தும் காட்டுகிறாள். இதை பார்த்த பின்பாவது அன்னைத் தமிழை நம் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித் தருவோம் தமிழர்களே .


பி(எ)ன் குறிப்பு:நிறைய மொழிகள் கற்பது அனுகூலமான, அவசியமான விடயமே...

அத்தனை மொழி கற்றாலும், எம்மொழியினனானாலும், தாய் மொழிதனை ஏற்றி போற்றுவதுடன் தாய் மொழியினை பின்பற்றுவதே சரியானதாகும்...

ஆனால், நமது இரத்தங்களின் தற்போதைய செயலானது, பெருமைக்காக ஆட்டை அடித்து ஊருக்கு விருந்து வைத்து, தம் பிள்ளைக்கு ஆட்டின் புழுக்கையினை அளித்ததுபோல் உள்ளது...

No comments: