Monday, April 8, 2013

தெரிந்து கொள்வோமா-86 [எடைக்கேற்ப விமான பயணக்கட்டணம்...]


ஆள் எடை அதிகமானால் பயணக் கட்டணம் அதிகமாகும்: ஆஸ்திரேலிய விமானம் அதிரடி!


இதுவரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் விமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பயணிகளின் எடைக்கு தகுந்தாற்போல் புதிய விமான கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள சமோவா விமான நிறுவனம் இந்த திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்தால் பயணிகளின் எடைக்கு தகுந்தபடியே விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயண தூரத்தை பொறுத்து 1 கிலோ எடைக்கு 1 டாலர் முதல் 4.16 டாலர் வரை விமான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 fat-airline_
ஆன்லைன் மூலம் இந்த நிறுவனத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதில் பயணிகள் எடை கேட்கப் பட்டிருக்கும் அதை பூர்த்தி செய்தால் அந்த எடைக்கு ஏற்ப விமான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும்.விமானத்தில் ஏறும் முன்பு பயணிகளின் எடை சரிதானா என்று சரிபார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நிறுவன செயல்பாட்டு நிர்வாக அதிகாரி கிரிஷ்லாங்டன் கூறுகையில், ”நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறை சிறுவர்களுடன் குடும்பமாக வந்து பயணம் செய்பவர்களுக்கு மிகவும் வசதியானது.ஏற்கனவே சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி சிறுவர்களுக்கு எடையின் அடிப்படையில் தானாகவே கட்டணம் குறைந்து விடும். இதனால் அவர்களின் பணமும் மிச்சப்படுத்தப்படும்.
எனவே பயணத்துக்கு இதுதான் சரியான வழி. இந்த எடைமுறை எதிர்காலத்தில் அனைத்து நிறுவனங்களிலும் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்த நடைமுறை மூலம் குண்டாக இருப்பவர்கள் கூடுதல் கட்டணமும், ஒல்லியமாக இருப்பவர்கள் குறைந்த கட்டணமும் செலுத்த வேண்டியதிருக்கும்” என்றார்.
Samoa Air To Price Tickets By Passenger Weight!
***************************************************
A tiny Samoa airline is offering a new reason to drop extra weight before your next trip: Tickets sold not by the seat, but by kilogram.Samoa Air planned on Wednesday to start pricing its first international flights based on the weight of its passengers and their bags. Depending on the flight, each kilogram (2.2 pounds) costs 93 cents to $1.06.
That means the average American man weighing 195 pounds with a 35 pound bag would pay $97 to go one-way between Apia, Samoa, and Pago Pago, American Samoa. Competitors typically charge $130 to $140 roundtrip for similar routes.
நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்...

No comments: