சூரியனைவிட மிகப்பெரிய கிரகம் ஐரோப்பிய ஆராய்ச்சி கழகத்தினால் கண்டுபிடிப்பு
ஜெனீவா,
சூரியனைவிட இந்தக் கிரகம் பன்மடங்கு பெரிதாகவும் மிகுந்த ஒளி பொருந்தியதாகவும் காணப்படுகிறது என்று ஏற்கெனவே ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்த புதிய கிரகத்தை ஜெனீவா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி மாணவர்கள் தொடர்ந்து ஆராய்ந்து, இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். பூமியில் இடம்பெற்றுள்ள நட்சத்திரக் கூட்டம் பற்றி மேலும் அறிய காமா கதிர்வீச்சுகளை ஆராய வேண்டும் என்று 2002&ம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் முடிவெடுத்து செயல்பட்டு வந்தனர். தற்போது என்.ஜி.சி.4845 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் சூரியனைவிட மூன்று லட்சம் மடங்கு அதிக அடர்த்தியுள்ள ஒரு கிரகம், கறுப்புத் துளையினுள் ஒளிர்ந்து கொண்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த முப்பதாண்டுகளாகச் செயலற்றுக் கிடந்த இந்த ஒளி கிரகம், தற்போது விழித்தெழுந்துள்ள கறுப்புத் துளை, வியாழன் கிரகத்தைப் போல 15 மடங்கு பெரிய ஒரு பொருளை அத்துளையின் உள்ளே ஈர்த்துக் கொண்டிருக்கிறது. 47 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படும் இந்த ஒளி கிரகம் ராட்சத கிரகம் என்று ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இன்டிகிரில் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நன்றி- தினத்தந்தி
No comments:
Post a Comment