Monday, February 4, 2013

இந்தியாவின் தேசிய மொழி!? National Language of India?!






இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் மெல்ல மெல்ல அழித்து வரும் இந்தி மொழி , இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும். அறுபது ஆண்டுகளாக இந்திய அரசு எல்லா மாநிலங்களிலும் இந்தியை திணித்து வருகிறது. இதற்கு நாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் . இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை இந்தியர் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

இந்திய அரசு வெளியிட்ட அதிகாரப் பூர்வமான செய்தி இது. பகிரவும்.

India
Main article: Languages of India

Article 343 of the Constitution of India specifies that the Official language of India is Hindi in Devanagari script, with English as an additional language for official work. Article 345 states that a state of India may officially adopt one or more languages in use in the state or Hindi/English as the language or languages to be used for all or any of the official purposes of that state.India also grants official status to 22 other languages some of them having speakers more than 70 million.[8] However, as neither the Constitution nor any Indian law defines any national language, India has no national language. This was affirmed by the Gujarat High Court in 2009; while observing that a majority of North India accept Hindi as a national language, speak Hindi and write Hindi in Devanagariscript, the court opined that India officially does not have a national language .[9]


http://en.wikipedia.org/wiki/National_language#India





இந்தி தான் இந்திய நாட்டின் தேசிய மொழி என்று மார்தட்டிக் கொள்பவர்களுக்கு, இந்தி என்பது இந்திய நாட்டில் அதிகம் பேசப்படும் மொழியாகும். மேலும், இந்திய நாட்டு மக்கள் தொகை உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் சீன நாட்டு மக்கள் தொகை. எனவே, இந்தி மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

”இந்தி”யா என்று அழைப்பதற்காக அந்நாட்டின் தேசிய மொழி இந்தியாகி விடாது. இந்தியா எனும் சொல் சிந்து எனும் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரீகம் இந்தியாவில் பழமையான நாகரீகம் என்பதின் பொருட்டு, சிந்து > இந்து > இந்தியா என்று திரிந்து போனதாகக் கருத்துகள் இருக்கின்றன.

இந்தியாவில் மொத்தம் 30 மொழிகள் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது. அதில் 22 அதிகாரப்பூர்வ மொழிகள்.

2004-ஆம் ஆண்டு தமிழ்மொழி தான் முதன் முதலில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் 2005-ஆம் ஆண்டு சமஸ்கிருதம் செம்மொழியானது. தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு தெலுங்கும் கன்னடமும் செம்மொழியானது.

குறிப்பு ;- இந்திய செம்மொழிகள் பட்டியலில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் கன்னடம். உலகச் செம்மொழிகளின் பட்டியலில் தமிழ், சீனம், எபிரேயம் (ஹீப்ரு), கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், பாரசீகம்/அரபு.

மூலம் ;- தமிழ்/ஆங்கில விக்கிப்பீடியா. —

No comments: