Tuesday, February 12, 2013

தெரிந்து கொள்வோமா-13


பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Wi-Fi என்ற இணைப்பில்லா இணைய முறையானது, இன்று தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலானோர்களால் இந்த Wi-Fi வசதியானது பயன்படுத்துகிறது.
பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், தாங்கும் விடுதிகள், இவ்வளவு ஏன், மருத்துவமனைகள் கூட இந்த வசதியை இலவசமாகவும், வியாபார நோக்கங்களுக்காகவும் தருகின்றன.
இந்த Wi-Fi வசதியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? அப்படியே ஆபத்தென்றால் பாதுகாப்பது எப்படி? என்ற உங்களுடைய கேள்விகளின் விளக்கங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன.
பின்பற்றி பயனடையுங்கள்!


ஷேரிங்:

நீங்கள் பப்ளிக் நெட்வொர்க் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில்கொள்க! எனவே அதில் எதை ஷேரிங் செய்யவேண்டும் எவற்றையெல்லாம் மறைக்கவேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமானது.


VPN பயன்படுத்தவும்:

உங்கள் Wi-Fi வசதியானது VPN என்ற நெட்வொர்க் முறையில் செயல்பட்டால் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே இந்த வகையான நெட்வொர்க்கை கேட்டுவாங்குங்கள்!


ஆட்டோமாடிக் வேண்டாமே:

சிலர் Wi-Fi வசதியை பயன்படுத்தும்பொழுது ஒவ்வொருமுறை இணைப்பை ஏற்ப்படுத்தும்போழுது தானாகவே இணைத்துக்கொள் என்றதை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

இது உங்களுடைய வேலையை சுலபமாக்காது. மேலும் உங்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு முறையும் நீங்களே இணைப்பை ஏற்படுத்த மறக்காதீர்கள்!


பெயர் சரியா என சரிபாருங்கள்:

Wi-Fi முறையில் இணையும்பொழுது சரியான இணைப்புடன்தான் இணைப்பை ஏற்படுத்துகிரோமா என்பதை சரிபாருங்கள். தேவையில்லாத போலியான Wi-Fi பெயர்கள் வழியாக உங்களுடைய கடவுச்சொல்கள் திருடப்படும் அபாயமும் உள்ளதை நினைவில்கொள்க!


கடவுச்சொல்லை பாதுகாக்கவும்:

தனித்தனியான Wi-Fi கணக்குகளுக்கு தனித்தனியான கடவுச்சொல்லை பயன்படுத்தவும். Wi-Fi இணைப்புகளில் கடவுச்சொல்கள்தான் மிகவும் முக்கியமானது.


ஃபயர்வால்:

Wifi சேவைகளை பயன்படுத்துகையில் உங்களுடைய கணினி மற்றும் நெட்வொர்க் ஆகியவற்றின் ஃபயர்வால்களை 'ஆன்' செய்யவும். ஃபயர்வால் இயங்கிக்கொண்டிருந்தால் தான் தகவல்கள் திருட்டுக்களை தவிர்க்கமுடியும்.


ஆன்டிவைரஸ் முக்கியம்:

ஆன்டிவைரஸ் மென்பொருள்களை மறக்காமல் பயன்படுத்தவேண்டும். இல்லையேல் உங்களுடைய தகவல்களின் திருட்டை யாராலும் தடுக்க முடியாது.

(மூலம் http://tamil.gizbot.com)

No comments: