Tuesday, February 5, 2013

வாழ்க்கைக்கு அர்த்தமளித்து வாழ்வோம்...




ஒரு மாமனிதரின் உண்மைக் கதை இது...!

ஜேம்ஸ் ஹாரிசன் (James Harrison) என்ற 13 வயது சிறுவன் ஒரு பாரிய அறுவை சிகிச்சைக்கு உள்ளானான். அவனது உயிரைக் காப்பாற்ற 13 லிட்டர் இரத்தம் தேவைப்பட்டது. உயிரின் பெறுமதியை உணர்ந்த அச்சிறுவன் , தனக்குள்ளே "தனக்கு 18 வயது தாண்டும் போது ஒரு முறையாவது இரத்ததானம் செய்ய வேண்டும்" உறுதி பூண்டு கொண்டான். அவனது விருப்பத்திற்கு ஏற்ப இரத்த தானமும் செய்தான். அப்போது தான் அவனது உடலில் ரீசஸ் (Rhesus Disease) நோயை குணப்படுத்துக் கூடிய அறிய எதிராக்கி (Antigen) ஐ அவனது இரத்தம் கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ் ஹாரிசன் 1,000 இற்கும் அதிகமான தடவை இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளார். அதிலிருந்து 20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ளார்.
அந்த மதிப்பிற்குரிய மாமனிதரின் Photo தான் இது.

நாம் உலகில் பிறந்து பல வருடங்களைக் வீணே கழித்து விட்டோம். இந்த மனித இனத்துக்கு செய்த பங்களிப்பு தான் என்ன? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம், மறந்து வாழ்கிறோம்.

வாழ்கையின் அர்த்தத்தை உணர முயலுங்கள். நல்லவைகளை நண்பர்களுடனும் பகிந்து கொள்ளுங்கள்.

Credits:·٠•பேனாவில் இருந்து காகிதத்தில் சொட்டிய மைத்துளிகள்•٠·

No comments: