Friday, February 15, 2013

தெரிந்து கொள்வோமா-17



முதல் விளையாட்டு கூகுள் பக்கத்திற்கு சென்று தேடல் பெட்டியில் "do a barrel roll" என்று டைப் செய்lது பேக்ஸ்பேஸ் பட்டனை அழுத்தினால் அந்த பக்கம் வலப்புறமாக ஒரு சுற்றுசுற்றி வந்து நிற்கும்.



2வது விளையாட்டு கூகுள் பக்கத்திற்கு சென்று அட்ரஸ் பாரில் elgoog.im என்று எழுதிப் பாருங்கள். திடீர் என்று எல்லாமே உல்டாவாகத் தெரியும்.



3வது விளையாட்டு கூகுள் தேடல் பெட்டியில் Zerg Rush என்று டைப் செய்யுங்கள். உடனே நிறைய 'O' என்ற எழுத்துக்கள் வரும். அவற்றை நீங்கள் கிளிக் செய்து அழிக்காவிட்டால் அவை அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையுமே அழித்துவிடும்.



5வது விளையாட்டு ஏதாவது வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் அதை கண்டுபிடிக்க பேர் உதவியாக உள்ளது கூகுகள் டிரான்ஸ்லேட். அதிலும் ஒரு விளையாட்டு உண்டு என்று தெரியுமா. உடனே கூகுள் டிரான்ஸ்லேட்டிற்கு http://www.translate.google.com/ சென்று அங்குள்ள ஃபிரம்(from) பட்டனை ஆங்கிலத்தில் மாற்றி தேடல் பெட்டியில் pv zk bschk zk kkkkkkk என்று பல முறை டைப் அல்லது காப்பி பேஸ்ட் செய்து ஆடியோ ஐகனை கிளிக் செய்து பாருங்கள் இசை கேட்கலாம்.



6வது விளையாட்டு கூகுள் பக்கத்திற்கு சென்றால் கூகுள் என்ற வார்தைக்கு பதில் உங்கள் பெயர் வர வேண்டுமா? கூகுள் பக்கத்தில் funnygoogle என்று டைப் செய்து கிளிக் செய்யவும். அதன் பிறகு வரும் முதல் லிங்கை கிளிக் செய்க. அதில் உங்கள் பெயரைக் கேட்டு ஒரு பெட்டி இருக்கும். அதில் உங்கள் பெயரை டைப் செய்து சப்மிட் பட்டனை அழுத்தவும். அதன் பிறகு வித்தையைப் பாருங்கள்.


7வது விளையாட்டு கூகுள் இமேஜஸ் பக்கத்தில் completely wrong என்று டைப் செய்தால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற மிட் ரோம்னியின் படங்கள் வருகின்றன.

8வது விளையாட்டு கூகுள் தேடல் பெட்டியில் Pig-Latin என்று டைப் செய்யுங்கள் தேடல் பக்கத்தில் 2வதாக உள்ள லிங்கை https://www.google.com/intl/xx-piglatin கிளிக் செய்து பார்த்தால் கூகுள் பக்கம் வேறு மொழியில் இருக்கும். இதே போன்று அந்த அட்ரஸ் பாரில் xx-klingon, xx-elmer ஆகிய வார்க்தைகளையும் முயற்சிக்கலாம்
.

9வது விளையாட்டு கூகுள் பக்கத்தில் anagram என்று டைப் செய்தால் do you mean nag a ram? என்று வரும். Recursion என்று டைப் செய்தால் do you mean recursion? என்று நம்மையே கூகுள் கலாய்க்கும்.

10வது விளையாட்டு Fluffiest Kitten in the Whole Wide World என்று கூகுள் பக்கத்தில் டைப் செய்தால் மொஸு மொஸு என்று இருக்கும் வெள்ளைப் பூனையின் உருவம் வரும்.

(மூலம்-oneindia.in)

(கொசுரு: 4வது இல்லை என்பதைக் கவனிக்காதவர்கள் இப்போது கவனித்துக்கொள்ளவும்.)

No comments: