Thursday, February 14, 2013

தெரிந்து கொள்வோமா-14

மனித இனத்தைத் தலைமுறை தலைமுறையாக உருவாக்கி வளர்த்துச் செல்வது பெண்கள்தான்! ‘தாய்மையடைதல்’ என்பது பெண்களின்  பெருமைக்குரிய பொறுப்பு. எந்தப் பெண்ணுக்குமே  அது சுகமான சுமை. ஆனால், அந்தச் சுமையைச் சுமந்து இறக்கி வைப்பதற்குள் அவர்கள் சந்திக்கும்  கஷ்டங்கள் ஏராளம். பெண் தாய்மைக்குத் தகுதி பெற்றதை அறிவிக்கும்  பருவமடைதலிலிருந்து வரிசை கட்டுகின்றன பிரச்னைகள்.

பெண்களின் உடல்நிலையைப் பிரதிபலிப்பது அவர்களின் மாதவிலக்கு சுழற்சிதான். மாதவிலக்கு சீராக இத்தனை நாளுக்கொரு  முறை நிகழ வேண்டும் என்கிற வரையறையை, மாறிவரும்  நமது வாழ்க்கை முறை உடைக்கிறது. 


விளைவு... மாதவிலக்கு முறையற்று நிகழ, அதனால் பின்னர் தாய்மையடைதலிலும் சிக்கல்கள். திருமணம் குறித்த பயம், அதனால் ஏற்படும்   படபடப்பால் நரம்புத் தளர்ச்சி, உறவில் நாட்டமின்மை போன்ற காரணங்களும் உடன் சேர்ந்துகொள்கின்றன. மாதவிலக்கு சீக்கிரம் வருதல், சீரற்ற  அல்லது வலியுடன் கூடிய மாதவிலக்கு, குறைவான அல்லது அதிக ரத்தப்போக்கு, மாதவிலக்கு நாட்களுக்கு முன்போ, பிறகோ முதுகுவலி வருதல்   போன்ற எல்லா சிக்கல்களுக்கும் அக்குபிரஷரில் எளிமையான தீர்வு உண்டு. 



கை மணிக்கட்டில், வளையல் அணியும் இடத்திலுள்ள ஹார்மோன் புள்ளிகளில் சிகிச்சை அளிப்பதின் மூலம்  இந்த விஷயத்தில் வியக்கத்தக்க  பலனைப் பெறலாம். இரண்டு கைகளிலும் இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், மூன்று மாதங்களுக்குள் மாதவிலக்கு சுழற்சி   சீராகிவிடுகிறது. அதிக ரத்தப் போக்கு இருந்தால், கால் பெருவிரல்களை ஐந்து நிமிடங்களுக்கு ரப்பர் பேண்ட் கொண்டு பிணைக்க வேண்டும். இருபது  நிமிடத்துக்கொரு முறை திரும்பத் திரும்ப இதைச்  செய்து வந்தால், ரத்தப் போக்கு கட்டுக்குள் வரும். 



சமீபமாக பெண் பிள்ளைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே மார்பில் அசையும் கட்டிகள் காணப்படுகின்றன. மார்பகக் கட்டியானது  புற்றுநோயின்  அறிகுறியா அல்லது வெறும் கொழுப்புக் கட்டியா என்பதை அக்குபிரஷரில் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இதற்கு புறங்கையின்  நடுப்பகுதியிலும், உள்ளங்கையின் கீழ்ப்  பகுதியிலும் உள்ள அக்கு புள்ளிகளை அழுத்தம் தருவதன் மூலம் தூண்ட வேண்டும். அப்போது அந்தப்  பகுதிகளில் வலி இருந்தால், மார்புக் கட்டி கேன்சராக மாறும் ஆபத்து இருப்பதை  உணர்ந்துகொள்ளலாம்.



வலி இல்லையெனில், அது வெறும் கொழுப்புக் கட்டியே என்கிற தீர்மானத்துக்கு வந்து விடலாம். தொடர்ந்து அதே இடத்தில் அழுத்தியே கட்டியைக்  கரைத்து  விடுவதும் சாத்தியம். அக்குபிரஷர் பயிற்சிகள் மரபு நோய்களைத் தடுக்கும் வல்லமை பெற்றவை. பிரசவ காலத்தில் பெண்கள் எல்லா  வகையான அக்குபிரஷர் பயிற்சிகளையும் செய்துவந்தால் இந்தப் பலனைப்  பெறலாம். 



அதே நேரம், கர்ப்பப் பை மற்றும் சினைப் பைகளை வலுப்படுத்தும் அக்கு புள்ளிகளையும் தொடர்ந்து தூண்டி வந்தால், அது பிரசவத்தின்போது  கைகொடுக்கும். தொப்புளுக்கு  மூன்று இன்ச் கீழே விரவியுள்ளது அந்த அக்கு புள்ளி. அதேபோல் கால்களின் உள்பக்கப் புள்ளிகள் பெண்ணின் இடுப்புப்  பகுதியின் அனைத்து உறுப்புகளுக்கும் சக்தியூட்டுகின்றன. எனவே  கர்ப்பம், மற்றும் பிரசவ கால பிரச்னைகளுக்கு இந்தப் பகுதிகளில் தொடர்ந்து  அழுத்தம் தந்து நிவாரணம் பெறலாம்.



தூக்கம் வருவது, பசிப்பது போல் பெண்களுக்கு பிரசவமும் ஒரு இயற்கை நிகழ்வே. நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பிருந்தாலும் இன்று கத்தரி  எடுக்கிறார்கள். மேலே சொன்ன அக்குபிரஷர்  பயிற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வந்தவர்கள், பிரசவ அறைக்குச் செல்லும்போது தைரியமாகச்  செல்லலாம். கடினமான பிரசவத்தையும் சுகப்பிரசவம் ஆக்கித்தரும் சூட்சுமம் இந்தப்  பயிற்சிகளில் உண்டு. ஆனாலும் பதற்றம், படபடப்பு இருந்தால்,  அக்கு மருத்துவத்தில் அவசரகாலப் பயிற்சிகள் உள்ளன. சம்பந்தப்பட்ட உடலுறுப்புகளை அவை தூண்டி, பிரசவத்தை  நல்லபடியாக முடித்து  வைக்கின்றன.


இந்தப் பயிற்சிக்கான உபகரணங்கள் எவை என்றால் ஆச்சரியப்படுவீர்கள். இரண்டு சீப்புகள் மற்றும் ஒரு மெட்டல் ஸ்பூன். அக்குபிரஷரில்  உள்ளங்கைதான் டோட்டல் பவர். எனவே இரு உள்ளங்கைக்குள்ளும் இரண்டு சீப்புகளை வைத்து மிதமான அழுத்தம்  தர வேண்டும். கூடவே, தாயின் நாக்கை முடிந்த அளவு வெளியே நீட்டி  அதன் நுனியில் ஸ்பூனைக் கவிழ்த்து, மூன்று நிமிடத்துக்கொரு முறை  விட்டுவிட்டு அழுத்தி வந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தை நல்லபடியாக பூமியைத் தொட்டு விடும்.



பெண்களின் தனிப்பட்ட பிரச்னைகளுக்கான தீர்வாகவே முற்காலத்தில் சில விஷயங்களைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். மருத்துவ காரணத்துக்காக  என்றால் அவர்கள் கடைப்பிடிக்கத்  தயங்குவார்கள் என்றெண்ணியே அவர்கள் விரும்பும் ‘அழகு’ என்கிற வகைப்பாட்டில் அவற்றைக் கொண்டு  வந்திருக்கிறார்கள். ஆம்; கம்மல், மூக்குத்தி, தட்டையான கொலுசு, மெட்டி, வங்கி,  வளையல், இடுப்பில் ஒட்டியாணம், ஆரம் என அணிகலன்கள்  அணிவகுப்பதெல்லாம் அக்கு புள்ளிகளைத் தூண்டத்தான். 



எனவே 24 மணி நேரமும் ஒரு பெண் உடல் முழுக்க நகை  நட்டுகளை அணிந்திருந்தாலும் அது அவர்களுக்கு பாதுகாப்பானதே. ‘அதெப்படி? தங்கம்  விலை போகிற போக்கில் யாராவது அவற்றை அபகரித்து விட்டால்?’ என்பீர்கள். அணிகலன்கள்  என்றால் தங்கம்தான் அணிய வேண்டும்  என்றில்லை. எந்த உலோகமானாலும் சரி... அவை சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள அக்கு புள்ளிகளைத் தூண்டிக் கொண்டிருக்க வேண்டும்.   அவ்வளவுதான்!
(மூலம்-தினகரன்...)

No comments: