நல்லதோர் திட்டம்... அரசியல் கலக்காமல் கலந்திடாமல் வேண்டும் இது போன்று நிறைய திட்டங்கள்...
உங்கள் குழந்தைக்கான தகவல்!
********************************
மாணவர்கள் படிக்கும் காலத்தில் சம்பாதிக்கவும், வியாபார நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் ஆவின் நிறுவனமும், தொழில் முனைவோர் கூட்டமைப்பும் இணைந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின்படி பள்ளி, கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ சேர்ந்து ஆவின் பாலகம் நடத்தலாம். பள்ளி, கல்லூரி வளாகங்களில் 100 சதுர அடி இடம் மின்சார வசதியுடன் வழங்கினால்போதும். குளிர் பதன பெட்டி உள்ளிட்ட வசதிகளை ஆவின் நிறுவனம் வழங்கும்.
மேலும் பால் மற்றும் பால் பொருட்களையும் ஆவின் நிறுவனம் நேரடியாக வழங்கும். தற்போது சென்னையில் ராஜலெட்சுமி என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் தொடங்கி லாபகரமாக நடத்தி வருகிறார்கள். 15 கல்லூரிகளில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள்.
இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருமா னம் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஊக்கத் தொகையும் ஆவின் நிறுவனம் வழங்கும். கிராமப்புறங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு உதவும் மன நிலையை மாணவர்களிடையே உருவாக்கவும் விற்பனை திறமையை உருவாக்கவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.
No comments:
Post a Comment