Sunday, February 24, 2013

இயற்கையை ரசி....


‎****இறைவனாலும் ரசிக்க முடியவில்லை****

இயற்கையை ரசி இயற்கையை ரசி என்று ஒரு உழைப்பாளியை பார்த்து காட்டுக்கத்து கத்தினார் இறைவன் ...

உழைப்பாளிக்கு கோபம் வந்தது....

கடவுளின் சட்டையை பிடித்தான் உழைப்பாளி, சட்டை கிளியா கத்தினான் ...

அடக்க முடியாத சிறுநீரை அடிக்கி கொண்டு தலையாட்டிக்கொண்டு முதலாளிமுன் நின்று இருக்கியா...
என்றான் கடவுளிடம் உழைப்பாளி..,

கையில் குமட்டும் டீசல் நாத்ததுடன் ஒரு நாலாவது சாப்புட்டு இருக்கியா ?,

பிஞ்சு போன செருப்புக்காக வச்சுருந்த காசில் குழந்தைக்கி மிட்டாய் வாங்கி தந்து இருக்கியா ?
அடுத்தசம்பலம் வரும் வரைக்கும் அறுந்து போன செருப்பையே இழுத்து இழுத்து நடந்து இருக்கியா ?,

ஸ்கூல் போற என் பையன் டாட்டா சொல்லி போகும் போது கிழிஞ்ச டிரௌசரை பார்க்கும் போது ஏற்படும் வலியை என்னைக்காவது நீ உணர்ந்து இருக்கியா ?

ஒரு கரும்பு சக்கை போல பிழிந்து கொண்டு இருக்கும் அலுவலக நேரத்தில் களைப்பு தீர்க்க கழிவறையில் ஒதுங்கி இருக்கியா ?

தான் மகன் வயதுள்ள முதலாளிக்கு சோத்து மூட்டை தூக்கி கொண்டும், டம்ளர் தட்டும் கழிவி இருக்கியா ?

கொதிக்கும் தார் சாலையில் தன மகன் நடந்துவர , எஜமானின் மகனை சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு, அந்த பிஞ்ச செருப்பையும் , இழுத்துக்கொண்டு நடந்து இருக்கியா..?

முதலாளி வீட்டுக்காக கறிக்கடையில் கறிவாங்கும் போது , தன் வீட்டுக்கு சமைக்க அரிசி கடன் வாங்க வந்த மனைவியின் முகம் காணாமல் ஒளிந்து கொண்டு இருந்து இருக்கியா ?

இறைவன் படைத்த மழையின் வானவில் வந்தது,
இறைவை பார்த்தான்
அவமானத்தில் ரசிக்க முடியாமல் தலை கவிழ்ந்து போனான் ...!

(நன்றி- ஈரம் மகி (எ) மகேந்திரன், சமூக சேவகர், கோவை)

No comments: