Thursday, February 28, 2013

தெரிந்து கொள்வோமா-35 [இலங்கை]


(மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்)
கட்டாயம் படிக்கவும், பகிரவும்.

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு (தனி ஈழம்) கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும் போராடி வந்தார்கள். உண்மையிலேயே இலங்கை யாருக்குச் சொந்தமானது..?!

சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள். சிங்களவர்களின் கோவம் நியாந்தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேட்கலாமா? இது சரியா? தவறா என்பது தான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரச்சனையாக இருக்கின்றது.

கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டிப் பார்த்தால்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார்

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது .

இந்த செய்தியை பகிருங்கள்

புகைப்படம்: (மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்)
கட்டாயம் படிக்கவும், பகிரவும். 

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு (தனி ஈழம்) கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும் போராடி வந்தார்கள். உண்மையிலேயே இலங்கை யாருக்குச் சொந்தமானது..?!

சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள். சிங்களவர்களின் கோவம் நியாந்தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேட்கலாமா? இது சரியா? தவறா என்பது தான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல்  பிரச்சனையாக இருக்கின்றது.

கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டிப் பார்த்தால்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது. 

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார் 

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது . 

இந்த செய்தியை பகிருங்கள்(Share) செய்யுங்கள்

தெரிந்து கொள்வோமா-34 [இலங்கை]

1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.

தெரிந்து கொள்வோமா-33 [தமிழின் தொண்மைக்குச் சான்று]


மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். 

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. 

படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது. "சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும் 

நன்றி: சசிதரன்

தெரிந்து கொள்வோமா-32 [பெட்ரோல் விலை எழுச்சி]


Wednesday, February 27, 2013

தெரிந்து கொள்வோமா-31 [நூடுல்ஸ்]

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?

அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. ‘இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா.
இதையடுத்து இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்:

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது.

கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.

இதுகுறித்து ப்ரீத்தி ஷாவிடம் பேசினோம்.

”ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.

ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம்குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது” என்றார் அக்கறையுடன்.
உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!-

(நன்றி: http://www.aanthaireporter.com/)

தெரிந்து கொள்வோமா-30 (தமிழ் எண்களே...)

இப்போது உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண்களே என்பதைத் தமிழ் மக்களும், சில தமிழ் அமைப்புகளும் அறியாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இதையறிந்த தமிழறிஞர்கள் மக்களிடம் பரப்பவில்லை; அதனால்தான் இதனை ஆங்கில எண்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறியாமையைப் போக்காதது அறிந்தவர்களின் குற்றம்தானே!

மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று இந்திய வாகனச் சட்டம் 1989 கூறுகிறது. அதுபோலவே 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களை எழுதிப் பொருத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக அரசு தமது ஆணையில் எண்களைப் பொறுத்தவரை உலக எண்களையே (அரபிக் நம்பர்ஸ்) பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் இந்த உலக எண்கள் அராபிய எண்கள் என்றே அரசும் கருதுகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

"எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்' என்றும் "எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு' என்றும் தமிழிலக்கியம் கூறுகிறது. ""உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா...? '' என்று சட்டப்பேரவையிலேயே கேட்கப்பட்டது; கேட்டவர் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குமரி அனந்தன். "தமிழ் எண்கள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படுமா?' என்று அப்போது தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம் கேட்கப்பட்டது.

"இதுகுறித்து முதல்வர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என்று இருக்கிறோம்...'' என்று அவர் ஒரு நேர்முகத்தில் விடை கூறியுள்ளார் (ராணி: 4-8-1996).

மறுக்க வேண்டிய சில தமிழ் அமைப்புகளும், "இப்போது வழக்கில் இருக்கும் எண்கள் தமிழ் எண்கள் இல்லை' என்ற எண்ணத்தில், "தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றே தீர்மானங்கள் இயற்றின. இதனை மறுக்காமல் தமிழறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்றே தெரியவில்லை.

இந்த எண்களைப் பற்றிய குழப்பம் இப்போதுதான் இப்படி எழுந்துள்ளது என்று எண்ண வேண்டாம். 1960-ம் ஆண்டு "மத்திய கல்வி ஆலோசனைக் குழு'க் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் எண்களையே பயன்படுத்துவது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று "கல்விக்கு அராபிய எண்களே - ஆலோசனைக் குழு முடிவு' என்ற தலைப்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இதுபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ""அவை அரபிய எண்கள் அல்ல தமிழ் எண்களே'' என்று தம் இதழாகிய "குயில்' ஏட்டில் 24-1-1960 அன்று எழுதினார். "அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அந்தக் குழுவில் இந்த எண்கள் தமிழ் எண்களே என ஏன் சொல்லவில்லை?' என கண்டனம் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படியிருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக்கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்; அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்துக்கு உள்ளாயிற்று...!'' என்று பாரதிதாசன் எழுதினார்.

டாக்டர் மு. வரதராசனார் தம் "மொழி வரலாறு' என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற எண்கள் தமிழ் எண்களே என்பதை கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார். அந்தக் கல்வெட்டுச் சான்று (படம்). அவர் எழுதுகிறார்: "1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை.

தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் இந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது முன்பக்கத்தில் உள்ள பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்.

இவற்றை நோக்கி எண்ண வல்லார்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகத்துக்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்...''- இவ்வாறு எழுதிய டாக்டர் மு.வ., கல்வெட்டு ஆதாரத்தையும் படமாக்கி வெளியிட்டுள்ளார் (ஆதாரம்: "மொழி வரலாறு' - பக்கம் 358).

இந்த எண்களைத் "தமிழ் எண்கள்' என்று உலகம் ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஏதேனும் நல்லவை தென்பட்டால் அவை பிறமொழியிலிருந்து வந்ததென்று கூறுவதும், ஆங்கிலத்திலிருந்து கிடைத்ததென்று கருதுவதும் நம்முடைய மரபாகிப் போனது. இந்தத் தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும்.

இவை தமிழ் என அறிந்த பிறகும், இதன் மாற்று வடிவங்களையே தமிழ் எனக்கூறி புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வது சரியன்று; உலகம் ஏற்றுக் கொண்டதை நாமும் உவப்புடன் ஏற்போம்.

செம்மொழித் தமிழின் சிறப்புகளுள் தலையாய மணிமகுடம் இதுவென ஓங்கி ஒலிப்போம். தன் பிள்ளையை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை எந்தத் தாயும் கண்ணீர் மல்க வரவேற்கவே செய்வாள்.

தமிழகம் உலகத்துக்கு அளித்திருக்கும் மாபெரும் கொடை இது. இதற்கு உலகமே தமிழ்மொழிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்மக்கள் பெருமைப்பட வேண்டும்; பெருமைப்படுவதற்கு அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வேண்டுமே!

இனிமேலும் ஐயம் வேண்டாம்; உலக எண்கள் தமிழ் எண்களே!

Tuesday, February 26, 2013

அடுத்த போப் தான் இறுதி போப்?! பயத்தில் படபடக்கும் உலகம்!

அடுத்த போப் தான் இறுதி போப்?! பயத்தில் படபடக்கும் உலகம்! எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட் By மோகன ரூபன்

அழகிய சிங்கர் யார் தெரியுமா?’’

இந்த கேள்விக்கு ‘‘பாப் மடோனா!’’ என்று பதிலளித்து தசாவதாரம் படத்தில் கமல் பட்டையைக் கிளப்புவார். அதுபோல ‘‘பாப்பரசர் யார் தெரியுமா?’’ என்று கேட்டால் அவசரப்பட்டு பாப் இசைக்கே அரசர் என்ற நினைப்பில் பாப் மார்லி அல்லது மைக்கேல் ஜாக்சனின் பெயரை நாம் கூறிவிடக்கூடாது.

‘பாப்பரசர்’ என்ற பெயர் போப்பாண்டவரைக் குறிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள 110 கோடி ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவர் அவர். இத்தாலியின் தலைநகரமான ரோமில் உள்ள வாடிகன் என்ற 0.17 சதுர மைல் பரப்பளவுள்ள சின்னஞ்சிறிய நாட்டுக்கு அவர் அதிபரும் கூட.

இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான இராயப்பர் என்ற பீட்டர்தான் உலகின் முதல் போப்பாகக் கருதப்படுகிறார். அன்று தொடங்கி இன்று வரை இரண்டாயிரம் ஆண்டுகாலமாக போப்களின் பரம்பரை மற்றும் பாரம்பரியம் தொடர்கிறது. வாடிகனில் உள்ள அரண்மனையில் வழி வழியாக இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்றுள்ள 264&வது போப்பான 85 வயது பதினாறாம் பெனடிக்ட் வரும் பிப்ரவரி 28&ம் தேதி போப் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். போப்களின் வரலாற்றில் இதுவரை 4 போப்கள் மட்டுமே தன்னிச்சையாக பதவி விலகியிருக்கிறார்கள். கடந்த 600 ஆண்டு வரலாற்றில் இப்படி தானாக முன்வந்து பதவியைத் துறக்கும் முதல் போப், பதினாறாம் பெனடிக்ட்தான். ‘‘முதுமை காரணமாக பதவி விலகுகிறேன்!’’ என்று அவர் அறிவித்து அகில உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

போப்பின் இந்த திடீர் முடிவால் திகைத்து திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள் ‘விஷயம்’ தெரிந்த கிறிஸ்துவர்கள் பலர். என்ன காரணம்? தொடர்ந்து படியுங்கள்…

போப் ஒருவர் இறந்து போனாலோ அல்லது பெனடிக்டைப் போல அபூர்வமாக பதவி விலகினாலோ புதிய போப்பை வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வார்கள். கர்தினால்கள் (கார்டினல்கள்) எனப்படும் உயர்குருக்களில் ஒருவர்தான் போப்பாக முடியும். புதிய போப் தேர்வின் போது தற்போது 118 கர்தினால்கள் வாக்களிக்கப் போகிறார்கள். அதில் 4 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

புதிய போப் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது வாக்கெடுப்புக்குப் பிறகுதான் தெரியும் என்றாலும் அடுத்தடுத்து வரப்போகும் போப்கள் யார் யார் என்பதைப் பற்றி புனித மலாக்கி என்பவர் பல நு£ற்றாண்டுகளுக்கு முன் ஏற்கனவே தீர்க்கதரிசனமாக எழுதி வைத்துவிட்டார்.

இந்த மலாக்கி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பேராயர். கி.பி. 1139&ம் ஆண்டு அப்போதிருந்த போப்பை சந்திக்க வாடிகனுக்கு வந்த இடத்தில் புனித மலாக்கிக்கு ஒரு ‘தெய்வீகக் காட்சி’ தென்பட, அதை வைத்து அடுத்தடுத்த போப்கள் யார் யார் என்பதை ஒரு புத்தகமாக அவர் எழுதி வைத்து விட்டார். அதற்காக புனிதர் பட்டத்தையும் அவர் பெற்று விட்டார்.
தன் காலத்துக்குப் பிறகு வரப்போகும் ஒவ்வொரு புதிய போப்பைப் பற்றியும் ஒரே வரியில் எழுதிவைத்திருப்பது மலாக்கியின் ஸ்டைல்.

உதாரணமாக 109&வது போப்பை ‘பாதி நிலா’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் 109&வது போப்பாக வந்தார் முதலாம் ஜான்பால். போப்பாகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே அவர் இறந்து போக, பாதி நிலா என்ற வார்த்தைக்-கு அர்த்தம் அப்போதுதான் பலருக்குப் புரிந்தது.

110&வது போப்பை ‘சூரியனின் தொழிலாளி’ என்று வர்ணித்திருந்தார் மலாக்கி. 110&வது போப்பாக வந்த இரண்டாம் ஜான்பால் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். போலந்து ‘கிழக்கில்’ உள்ள கம்யூனிச (தொழிலாளர்) நாடாக அப்போது இருந்தது. சூரியன் உதிப்பது கிழக்கில்தான் என்பதால் 2&ம் ஜான்பாலுக்கு சூரியனின் தொழிலாளி என்ற பெயர் அட்டகாசமாகப் பொருந்திப் போனது. (போப் 2&ம் ஜான்பால் பிறந்த போதும், இறந்த போதும் சூரிய கிரகணம் ஏற்பட்டது தனிக்கதை!)

அதன்பின் 111&வது போப்பை நாம் ‘மஞ்சள் மகிமை’ என்று குறிப்பிடுவதைப் போல ‘ஆலிவ் மகிமை’ என்று குறிப்பிட்டிருந்தார் மலாக்கி. அதை வைத்து வரப்போகும் புதிய போப் ஆலிவ் நிறத்தில் இருப்பார் என்று சிலர் கணித்தார்கள். ஆலிவ் இலைக் கொத்து யூதர்களின் பாரம்பரிய சின்னம் என்பதால் புதிய போப் ஒரு யூதராக இருப்பார் என்று இத்தாலி நாட்டின் ‘லா ஸ்டாம்பா’ நாளிதழ் ஊகித்திருந்தது.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சபைகளில் ஒன்றான பெனடிக்கன் சபையை ‘ஒலிவேத்தியன் சபை’ என்பார்கள். ஆகவே பெனடிக்கன் சபையைச் சேர்ந்த ஒருவர்தான் புதிய போப்பாகப் போகிறார் என்றும் சிலர் கணித்தார்கள். ஆனால் பெனடிக்கன் சபையில் அப்போது எஞ்சியிருந்தவர் ஒரே ஒரு கர்தினால்தான். அவரும் 93 வயதைக் கடந்திருந்தார். 80 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் போப்பாக முடியும் என்பதால் அவருக்கு வாய்ப்பில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டது.

இந்த நிலையில்தான் 111&வது போப்பாக ஆனார் ஜெர்மனியைச் சேர்ந்த பதினாறாம் பெனடிக்ட். பெனடிக்கன் சபையைச் சேர்ந்த ஒருவர் போப் ஆகாமல் பெனடிக்ட் பெயருள்ள ஒருவர் போப்பானதால் புனித மலாக்கியின் தீர்க்கதரிசனத்தை நினைத்து பலர் வாய் பிளந்து நின்றார்கள்.

இந்த நிலையில்தான் இப்போது அதிர்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. புனித மலாக்கியின் தீர்க்க தரிசனப்படி 112&வது போப்பாக வருபவர்தான் கடைசி போப்(!). உலகின் முதல் போப்பின் பெயர் பீட்டர் என்பது போல கடைசிப் போப்பின் பெயரும் பீட்டராகவே இருக்கும் என்பது மலாக்கியின் கணிப்பு. ‘ரோமைச் சேர்ந்த பீட்டர்’ (பெட்ரஸ் ரோமனஸ்) என்று அந்த கடைசி போப்பை மலாக்கி வர்ணித்திருக்கிறார்.

‘‘இந்த 112&வது போப்பின் வருகை யுக முடிவைக் குறிக்கிறது. இந்த போப் ஏழு மலைகள் கொண்ட ரோம் நகரை விட்டு நீங்குவார். உலகப் போர் மூளும். உலகம் அழியும்’’ என்பது மலாக்கியின் கணிப்பு!

கத்தோலிக்க கர்தினால்கள் எனப்படும் உயர்துறவிகளில் ஒருவர்தான் போப்பாக முடியும் என்றநிலையில் ஐரோப்பா கண்டத்தில் மட்டும் தற்போது 115 கர்தினால்கள் உள்ளனர். இதற்குமுன் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே போப்பாகும் யோகம் கிடைத்திருக்கிறது. நம் காலத்தில் கடைசி 2 போப்கள்தான் முறையே போலந்து, ஜெர்மனி நாடுகளில் இருந்து போப்பாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கறுப்பரான ஒபாமா அதிபரானது போல, புதிய போப்பாக கறுப்பர் ஒருவரை நியமிக்கலாம் என்ற கருத்து வலுத்து வருகிறது. ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த ‘பீட்டர்’ கோட்வோ துர்க்சன் என்பவர்தான் புதிய போப் என்ற எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது. இவரது பெயரில் பீட்டர் இருப்பது பலரை வியப்பு கலந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையே கடைசி இரு போப்களும் வெளிநாட்டவர்கள் என்பதால் ரோமைச் சேர்ந்த ஒருவரைத்தான் போப்பாக்க வேண்டும் என்ற கருத்து இத்தாலி நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது. 2013&ல் உலகம் அழியும் என்ற மாயன்களின் ஆரூடம் பற்றிய பயம் இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், போப் பதினாறாம் பெனடிக்டின் திடீர் ராஜினாமாவும், புதிய போப் (இறுதி போப்?) வரப்போவதும் உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவர்களின் நெஞ்சத்தில் பயத்தை விதைத்துள்ளது.

புதிய போப் யார்? ரோமைச் சேர்ந்த பீட்டர்தானா? அவருக்குப் பின் உலகம் அழியுமா? காத்திருப்போம் நாம்!

நன்றி : தமிழக அரசியல்

நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர்...

Sunday, February 24, 2013

தெரிந்து கொள்வோமா-29 [சீரான மாதவிடாய் சுழற்சிக்கு...]


சீரான மாதவிடாய் சுழற்சி இல்லையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...


பொதுவாக இறுதி மாதவிடாயானது 45-55 வயதுள்ள பெண்களுக்குத் தான் ஏற்படும். இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம், பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன்களின் உற்பத்தியானது குறைந்து, இனப்பெருக்க மண்டலமானது மாதவிடாய் சுழற்சியை குறைத்துவிடும். இவ்வாறு ஹார்மோன்களில் மாற்றம் உண்டாவதால், மனதில் அழுத்தம், உறவில் ஈடுபாடின்மை, சோர்வு, தூக்கமின்மை, தலைவலி போன்றவை ஏற்படும். ஆனால் அத்தகைய மாதவிடாய் சுழற்சியானது இளம் வயதிலயே சரியாகவும், சீராகவும் நடைபெறாவிட்டால், பின் அது பிற்காலத்தில் கருத்தரிக்கும் போது பிரச்சனையை உண்டாக்கும். எனவே இத்தகைய பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட வேண்டும். இதற்காக மருந்து மாத்திரைகள் போன்றவற்றை மேற்கொள்வதை விட, இயற்கை முறைகளைப் பின்பற்றி சரிசெய்து விடலாம். பொதுவாக இந்த பிரச்சனை இளம் வயதில் ஏற்படுவதற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால், மாதவிடாய் சுழற்சியை சீராக்கலாம். அதுமட்டுமின்றி வேறு சில போதிய சத்துக்கள் உடலில் இல்லாததும் மற்றொரு காரணம். இப்போது அந்த மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதற்கு எந்த மாதிரியான உணவுகளை உண்டால், சீராக்கலாம் என்பதைப் பார்ப்போமா!!!


மீன்கள்: மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இதனை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், இதய நோய் ஏற்படுவதை தடுப்பதோடு, மார்பக புற்றுநோய் உண்டாவதையும் தடுக்கலாம். மேலும் இந்த மீனை பெண்கள் உணவில் அதிகம் சேர்த்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம். குறிப்பாக சால்மன், ஹெர்ரிங் மற்றும் சூரை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.


பால்: பாலில் அதிகப்படியான கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. ஆகவே பெண்கள் தினமும் பால் குடிப்பது நல்லது.


 
தானியங்களில் நார்ச்சத்து மட்டுமின்றி, செரிமானத்தை மெதுவாக நடைபெற வைக்கவும், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும் தன்மை உடையது. மேலும் செரிமானம் மெதுவாக நடைபெறுவதாலும், குறைவான கலோரிகள் இருப்பதாலும், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.


பீன்ஸ்: பீன்ஸில் ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி6 மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. இத்தகைய சத்துக்கள் மாதவிடாய் சுழற்சியை மட்டும் அதிகரிப்பதோடு, இனப்பெருக்க மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும்.


தயிர்: எலும்புகளில் நோய்கள் எதுவும் தாக்காமல் ஆரோக்கியமாகவும் வலுவோடும் இருப்பதற்கு, பால் பொருட்களில் ஒன்றான தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறும்.

ஆளி விதை: ஆளி விதையிலும் கால்சியம் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதில் முக்கியமானது.

பழங்கள்: பழங்கள் சுவையுடன் மட்டும் இருப்பதில்லை, அவற்றில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு பழங்களையும் அதிகம் சாப்பிட வேண்டும்.

பிரேசில் நட்ஸ்: நட்ஸில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். ஆனால் அந்த நட்ஸ் வகைகளில் பிரேசில் நட்ஸ் மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்கும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.


ஆரோக்கியமான கொழுப்புக்கள்: ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யலாம்.


குருதிநெல்லி (Cranberries) பெர்ரிப் பழங்களின் சத்துக்களை சொன்னால் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதிலும் இவற்றை சாப்பிடுவதால் உடல் எடையை குறைவதோடு, புற்றுநோய், மாரடைப்பு மற்றும் மாதவிடாய் சுழற்சி பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யும்.

இயற்கையை ரசி....


‎****இறைவனாலும் ரசிக்க முடியவில்லை****

இயற்கையை ரசி இயற்கையை ரசி என்று ஒரு உழைப்பாளியை பார்த்து காட்டுக்கத்து கத்தினார் இறைவன் ...

உழைப்பாளிக்கு கோபம் வந்தது....

கடவுளின் சட்டையை பிடித்தான் உழைப்பாளி, சட்டை கிளியா கத்தினான் ...

அடக்க முடியாத சிறுநீரை அடிக்கி கொண்டு தலையாட்டிக்கொண்டு முதலாளிமுன் நின்று இருக்கியா...
என்றான் கடவுளிடம் உழைப்பாளி..,

கையில் குமட்டும் டீசல் நாத்ததுடன் ஒரு நாலாவது சாப்புட்டு இருக்கியா ?,

பிஞ்சு போன செருப்புக்காக வச்சுருந்த காசில் குழந்தைக்கி மிட்டாய் வாங்கி தந்து இருக்கியா ?
அடுத்தசம்பலம் வரும் வரைக்கும் அறுந்து போன செருப்பையே இழுத்து இழுத்து நடந்து இருக்கியா ?,

ஸ்கூல் போற என் பையன் டாட்டா சொல்லி போகும் போது கிழிஞ்ச டிரௌசரை பார்க்கும் போது ஏற்படும் வலியை என்னைக்காவது நீ உணர்ந்து இருக்கியா ?

ஒரு கரும்பு சக்கை போல பிழிந்து கொண்டு இருக்கும் அலுவலக நேரத்தில் களைப்பு தீர்க்க கழிவறையில் ஒதுங்கி இருக்கியா ?

தான் மகன் வயதுள்ள முதலாளிக்கு சோத்து மூட்டை தூக்கி கொண்டும், டம்ளர் தட்டும் கழிவி இருக்கியா ?

கொதிக்கும் தார் சாலையில் தன மகன் நடந்துவர , எஜமானின் மகனை சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு, அந்த பிஞ்ச செருப்பையும் , இழுத்துக்கொண்டு நடந்து இருக்கியா..?

முதலாளி வீட்டுக்காக கறிக்கடையில் கறிவாங்கும் போது , தன் வீட்டுக்கு சமைக்க அரிசி கடன் வாங்க வந்த மனைவியின் முகம் காணாமல் ஒளிந்து கொண்டு இருந்து இருக்கியா ?

இறைவன் படைத்த மழையின் வானவில் வந்தது,
இறைவை பார்த்தான்
அவமானத்தில் ரசிக்க முடியாமல் தலை கவிழ்ந்து போனான் ...!

(நன்றி- ஈரம் மகி (எ) மகேந்திரன், சமூக சேவகர், கோவை)

தெரிந்து கொள்வோமா-28 [டி.என்.எ]

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த போது கிடைத்தவை, பயன் இருக்கலாம் என்றெண்ணி பதிந்திருக்கிறேன். பயன் இருந்தா அனுபவிங்க, இல்லனா திட்டிடுங்க...(ஏன்னா, மனதிலே வச்சிருந்தா உடம்புக்கு ஆகாது....)

நண்பர்1-ற்கு பிறந்தநாள். நண்பர்2, நண்பர்1-ற்கு நிறைய புகைப்படங்களை அனுப்பி வாழ்த்துரைக்கிறார். அதன் தொடர்ச்சியாக கீழ்வருகிறது உரையாடல்...



நண்பர்1: Neenga photo vallalal Annea... Midiyala 

நண்பர்2: நான் கருப்பா இருந்தாலும், கை சிவந்திருக்கும். ஏன்னா அவ்வளவு கொடுத்திருக்கேன். ஹி ஹி... நரனறி

நண்பர்1: Colour ah than irukinga... Piriyala ...

நண்பர்2: நன்றியதான் அவ்வளவு அழுத்தமா சொன்னேன். ஹி ஹி ஹ்இ

நண்பர்1: Romba nara nara nu irku Annea... Unga marabanu la irukara A-T/G-C la etho mutation pola...

நண்பர்2: அதென்ன A-T/G-C?

நண்பர்1:

These four are the base of DNA ... Adenine Guanine Thymine Cytosine...

These four are twisted together in a pair... These Dna stores the codes for protein...

Proteins are made up of Amino acids ( a chemical compound ) a protein may be made of hundreds or thousands of amino acids.

In this how different proteins varudhu na amino acid order la changes irukum podhu apdi than different proteins kedaikudhu... 

Like milk proteins in milk - renin nu sollu vanga... Wheat la irukara gluten...

Entha oru section of DNA vanthu protein uruvaga base ah iruko athu than genes... This genes control the proteins that builds the tissues in our body...

SUPPOSE if we lose a protein the metabolic activities of our cell does not function which results in a disease... Like wise the cancer too...

Athavadhu uncontrolled growth of cells... Idhuku than namma body la Programmed cell death nadakudhu... These all are functioned under signal transduction... Like connecting wire...


Idhu ellathukume moola kaaranamana molecules are Proteins - proteins ku - rna - rna ku dna- dna ku a t g c.. Aapppaaaaaddi mudiyala... Etho na padichathu purinjukitadhu...


A t g c la mutation nadantha - mutation na changes... Order ah illama irukaradhu... Proteins la changes nadakum...

Some food colours cause cancer on continuous exposure to them... Adhuku than poricha items kadaila vikratha athigama sapda kudathu... Because those chemicals in the food colours has the character of mutate the normal genes which in turn results in a mal functioned protein (unwanted ) - cancer.

(நன்றிகள்: பிரியா கிருஷ்ணன் [நண்பர்1])

தெரிந்து கொள்வோமா-27 [பென் டிரைவினை இராமாகப் பயன்படுத்தலாம்...]


Use a USB Flash Drive for RAM Memory:


We use USB to transfer the data’s. The USB can be used asRAM. Let’s start with windows vista; those who use pc’s can use their USBdrives to increase the performances of their computer. This is called ReadyBoost. Ready Boost deal with free spacethat is on your USB drives, such as RAM. When we increase RAM that’s equal to more speed. Ready Boost comprise on all free versions ofwindows vista and windows 7. It’s easy to setup the positions and in few minutes it can be finished.

1. Insert the USB drive in your computer.
2. Go to "My Computer" then right-click on the USB drive.
3. Go to "Properties"
4. Next, click on the "ReadyBoost" tab.
5. Choose the option that says "Use this device".
6. Under "Space to reserve for system speed", select the amount of memory that you wish to use for your USB flash drive. The amount of memory that Windows recommends is usually the best setting and should not be exceeded.
7. Click on "OK" to save your settings and exit.
8. Restart your computer for the changes to take affect.

Thursday, February 21, 2013

தெரிந்து கொள்வோமா-26 [பெண்கள் அதிகம் பேசுகிறார்கள்-ஆய்வு]

அடேங்கப்பா... ஒரு நாளைக்கு 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம் பெண்கள்!
லண்டன்: பெண்கள்தான் அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம். அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். ஆண்களை விட இது அதிகமாகும். ஆண்களை விட பெண்கள் ஒரு நாளைக்கு 13,000 வார்த்தைகள் அதிகமாக பேசுகிறார்களாம்.

அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள் அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல்பூர்வமாகவே அதை உண்மை என்று சொல்லியுள்ளனர். ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்ஸ்பி 2 என்ற புரதம்தான் காரணமாம். இது பெண்களின் மூளையில் அதிகமாக சுரக்கிறதாம்.

மனிதர்களைப் பொறுத்தவரை பெண்களின் மூளையில் இந்த புரதம் அதிகம் சுரக்கிறது. எலிகளில், ஆண் எலிகளின் மூளையில் இது அதிகம் சுரப்பதால் ஆண் எலிகளிடம்தான் சவுண்டு அதிகம் இருக்கிறதாம்.


இந்த பாக்ஸ்பி 2 புரதத்திற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மொழிப் புரதம் என்று பெயரிட்டுள்ளனர். காரணம் இதுதான் பேச்சுக்களுக்கும் வார்த்தைப் பிரயோகத்திற்கும் முக்கியக் காரணம் என்பதால். எனவே ஆண்களே, இனியும் பெண்களை பொத்தாம் பொதுவாக வாயாடி என்று சொல்லாதீர்கள்,வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்...



(மூலம்-http://tamil.oneindia.in)

தெரிந்து கொள்வோமா-25 [உலகின் மிக நீண்ட கொம்புகள்...]


Watusi bull

This is Lurch, Lurch was born in Missouri,USA and is currently known as the bull with the largest horn in the world, the proud bearer of the world’s largest horns. Lurch is a Watusi bull living in an Animal shelter, whose horns measure 92.25 cm and weigh more than 100 pounds each. He’s quite the attraction in his home state and he’s favorite pass-time is acting as bodyguard for a crippled horse that’s being harassed by fellow horses.

நல் வாழ்க்கைக்கு சில...


‎15 GREAT THOUGHTS BY CHANAKYA

1) "Learn from the mistakes of others... you can't live long enough to make them all yourselves!!"

2)"A person should not be too honest. Straight trees are cut first and Honest people are screwed first."
...
3)"Even if a snake is not poisonous, it should pretend to be venomous."

4)"There is some self-interest behind every friendship. There is no friendship without self-interests. This is a bitter truth."


5)" Before you start some work, always ask yourself three questions - Why am I doing it, What the results might be and Will I be successful. Only when you think deeply and find satisfactory answers to these questions, go ahead."


6)"As soon as the fear approaches near, attack and destroy it."


7)"The world's biggest power is the youth and beauty of a woman."


8)"Once you start a working on something, don't be afraid of failure and don't abandon it. People who work sincerely are the happiest."


9)"The fragrance of flowers spreads only in the direction of the wind. But the goodness of a person spreads in all direction."


10)"God is not present in idols. Your feelings are your god. The soul is your temple."


11) "A man is great by deeds, not by birth."


12) "Never make friends with people who are above or below you in status. Such friendships will never give you any happiness."


13) "Treat your kid like a darling for the first five years. For the next five years, scold them. By the time they turn sixteen, treat them like a friend. Your grown up children are your best friends."


14) "Books are as useful to a stupid person as a mirror is useful to a blind person."


15) "Education is the Best Friend. An Educated Person is Respected Everywhere. Education beats the Beauty and the Youth."

If you Like it Share with your Friends.

ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் ....


தெரிந்துகொள்வோமா-23 [வாகன ஓட்டுநர்களின் கவனத்திற்கு...]

ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Thank info
Puthiya Thalaimurai

தெரிந்து கொள்வோமா-24 [பொ.அ.]

* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.

* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.

* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.
...
* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.

* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.

* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.

* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.

* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.

*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.

*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.

*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.

*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.
அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.

*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-
முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.

*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.

*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.

*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.

தகவல்: யாழ்

Sunday, February 17, 2013

தெரிந்து கொள்வோமா-21



ஆய்வில் ஆச்சரிய தகவல் கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி : ‘கசப்பு, துவர்ப்பு பிடிக்கல மம்மீ’
கர்ப்பத்தில் இருக்கும் சிசு டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடி





லண்டன் : கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது.கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.



பொதுவாக கர்ப்ப காலத்தில் தாய், சேய் என 2 உயிர்களையும் பாதுகாப்பாக, அதிக கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த கட்டத்தில் கருவில் உள்ள சிசுவுக்கு தாயின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் உள்ளதை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள சிசுவுக்கு உணவும் தாயின் மூலமே கிடைப்பதால் தாய் ஊட்ட சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வது ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகுக்கும். பிறந்த பின்பும் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. 



இந்நிலையில் கர்ப்பத்தில் உள்ளபோதே சிசுவுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் உப்பு, இனிப்பு, சுவைகளை அறியும் திறன் இருக்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் போது கிடைக்கும் சுவையையே குழந்தை பிறந்து வளரும் போது அதிகம் விரும்புகிறது என்று சமீபத்திய ஆய்வில் உறுதியாகி உள்ளது. கசப்பு, துவர்ப்பு சுவைகள் கர்ப்பத்திலேயே குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை என்பதும் ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.



அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள மோன்னெல் என்ற மருத்துவ ஆராய்ச்சி மையம் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது. டாக்டர் மோனெல்லா தலைமையில் நடந்த இந்த ஆய்வில், 6 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள 46 குழந்தைகளின் பிடித்தமான உணவு சுவை குறித்து அலசி ஆராயப்பட்டது. கர்ப்ப காலத்தில் தாயின் உணவு முறை குறித்தும் இந்த கணக்கெடுக்கப்பட்டது. கர்ப்ப காலத்தில் தாய் எடுத்துக் கொண்ட உணவு வகைகளில் குழந்தைகளுக்கு அதிக நாட்டம் இருந்தது உறுதியானது.



குறிப்பாக அதிக அளவில் கேரட் எடுத்துக் கொண்டவர்களின் குழந்தைகளுக்கு அந்த சுவை மற்றும் நறுமணத்தில் அதிக நாட்டம் இருந்தது. இதே போன்று பலவிதமான காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு குழந்தைகளின் பிடித்தமான சுவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் எதிர்பார்த்த வெற்றி கிட்டியது. இதன் மூலம் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு சரிவிகித ஊட்டச்சத்து அளிக்க வேண்டியதன் அவசியம் தெளிவாகி உள்ளது. இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என எல்லா விதமான சுவைகளையும் கர்ப்ப காலத்தில் சிசுவுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது தாயின் கடமை என்கிறார் டாக்டர் மோனெல்லா.

(மூலம்-தினகரன்)

Saturday, February 16, 2013

நல் வாழ்க்கைக்கு...


‎40 Tips for Happy Health Life - MUST READ & SHARE
Health:
1. Drink plenty of water.
2. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
3. Eat more foods that grow on trees and plants, and eat less food that is manufactured in plants.
4. Live with the 3 E’s — Energy, Enthusiasm, and Empathy.
5. Make time for prayer and reflection
6. Play more games.
7. Read more books than you did in 2012.
8. Sit in silence for at least 10 minutes each day.
9. Sleep for 7 hours.


Personality:
10. Take a 10-30 minutes walk every day —- and while you walk, smile.
11. Don’t compare your life to others’. You have no idea what their journey is all about.
12. Don’t have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
13. Don’t over do; keep your limits.
14. Don’t take yourself so seriously; no one else does.
15. Don’t waste your precious energy on gossip.
16. Dream more while you are awake.
17. Envy is a waste of time. You already have all you need.
18. Forget issues of the past. Don’t remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness.
19. Life is too short to waste time hating anyone. Don’t hate others.
20. Make peace with your past so it won’t spoil the present.
21. No one is in charge of your happiness except you.
22. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
23. Smile and laugh more.
24. You don’t have to win every argument. Agree to disagree.

Community:
25. Call your family often.
26. Each day give something good to others.
27. Forgive everyone for everything.
28. Spend time with people over the age of 70 & under the age of 6.
29. Try to make at least three people smile each day.
30. What other people think of you is none of your business.
31. Your job won’t take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.

Life:
32. Do the right things.
33. Get rid of anything that isn’t useful, beautiful or joyful.
34. Forgiveness heals everything.
35. However good or bad a situation is, it will change.
36. No matter how you feel, get up, dress up and show up.
37. The best is yet to come.
38. When you awake alive in the morning, don’t take it for granted – embrace life.
39. Your inner most is always happy. So, be happy.

Last but not least:
40. Enjoy LIFE!

PLEASE SHARE THIS POST WITH YOUR BELOVED ONES

தெரிந்து கொள்வோமா-20

ஆண் மற்றும் பெண்ணின் மூளைகளின் திறன் பற்றி அறிவோமா?!

Human Brain Analysis - Man vs. Woman......A MUST READ!


1. MULTI-TASKING
Women - Multiple process
Womens brains designed to concentrate multiple task at a time.
Women can Watch a TV and Talk over phone and cook.
Men - Single Process
Mens brains designed to concentrate only one work at a time. Men can not watch TV and talk over the phone at the same time. they stop the TV while Talking. They can either watch TV or talk over the phone or cook.

2. LANGUAGE
Women can easily learn many languages. But can not find solutions to problems. Men can not easily learn languages, they can easily solve problems. That's why in average a 3 years old girl has three times higher vocabulary than a 3 yeard old boy.

3. ANALYTICAL SKILLS
Mens brains has a lot of space for handling the analytical process. They can analyze and find the solution for a process and design a map of a building easily. But If a complex map is viewed by women, they can not understand it. Women can not understand the details of a map easily, For them it is just a dump of lines on a paper.

4. CAR DRIVING.
While driving a car, mans analytical spaces are used in his brain. He can drive a car fastly. If he sees an object at long distance, immediately his brain classifies the object (bus or van or car) direction and speed of the object and he drives accordingly. Where woman take a long time to recognize the object direction/ speed. Mans single process mind stops the audio in the car (if any), then concentrates only on driving.

5. LYING
When men lie to women face to face, they get caught easily. Womans super natural brain observes facial expression 70%, body language 20% and words coming from the mouth 10%. Mens brain does not have this. Women easily lie to men face to face.
So guys, do not lie face to face.

6. PROBLEMS SOLVING
If a man have a lot of problems, his brain clearly classifies the problems and puts them in individual rooms in the brain and then finds the solution one by one. You can see many guys looking at the sky for a long time. If a woman has a lot of problems, her brain can not classify the problems. she wants some one to hear that. After telling everything to a person she goes happily to bed. She does not worry about the problems being solved or not.

7. WHAT THEY WANT
Men want status, success, solutions, big process, etc... But Women want relationship, friends, family, etc...

8. UNHAPPINESS
If women are unhappy with their relations, they can not concentrate on their work. If men are unhappy with their work, they can not concentrate on the relations.

9. SPEECH
Women use indirect language in speech. But Men use direct language.


10. HANDLING EMOTION
Women talk a lot without thinking. Men act a lot without thinking.

(மூலம்-www.way2usefulinfo.blogspot.com)

Friday, February 15, 2013

தெரிந்து கொள்வோமா-19


டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.

டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும் காணலாம். உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது.

அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.

உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.

டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.

டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்: M- 130 Kmph P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T - 190 Kmph H - 210 Kmph V - 240 Kmph W - 270 Kmph Y - 300 Kmph ZR - over 240 Kmph.

நல் வாழ்கைக்குக் கருத்துக்கள்...


தெரிந்து கொள்வோமா-18


அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்..


"அரைஞாண்" நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம் னு சொல்லுவாங்க ....

உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை ....

அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது

முதலாவது பலன்
-------------------------------------
அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி..கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும் ஏழைகளுக்கு கரம் கொடுக்கும் ராஜ தந்திரி அது.. விடம் கொண்ட பூச்சிகள், பாம்பு தடம் பதித்து ஊடாடும் போது அவர்களுடன் வசிப்பவை அவை. எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விடத்தின் கடிவாய்க்கும்
இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன்.

கையினால், விடம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.

மருத்துவ பலன்
-----------------------------------
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம்
ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.


இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள்.

இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு....

நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுகாமல் சிறு சிறு விடயங்கலளையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....

வாழ்க தமிழ் வளர்க தமிழர் பாரம்பரியம்

தெரிந்து கொள்வோமா-17



முதல் விளையாட்டு கூகுள் பக்கத்திற்கு சென்று தேடல் பெட்டியில் "do a barrel roll" என்று டைப் செய்lது பேக்ஸ்பேஸ் பட்டனை அழுத்தினால் அந்த பக்கம் வலப்புறமாக ஒரு சுற்றுசுற்றி வந்து நிற்கும்.



2வது விளையாட்டு கூகுள் பக்கத்திற்கு சென்று அட்ரஸ் பாரில் elgoog.im என்று எழுதிப் பாருங்கள். திடீர் என்று எல்லாமே உல்டாவாகத் தெரியும்.



3வது விளையாட்டு கூகுள் தேடல் பெட்டியில் Zerg Rush என்று டைப் செய்யுங்கள். உடனே நிறைய 'O' என்ற எழுத்துக்கள் வரும். அவற்றை நீங்கள் கிளிக் செய்து அழிக்காவிட்டால் அவை அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையுமே அழித்துவிடும்.



5வது விளையாட்டு ஏதாவது வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் அதை கண்டுபிடிக்க பேர் உதவியாக உள்ளது கூகுகள் டிரான்ஸ்லேட். அதிலும் ஒரு விளையாட்டு உண்டு என்று தெரியுமா. உடனே கூகுள் டிரான்ஸ்லேட்டிற்கு http://www.translate.google.com/ சென்று அங்குள்ள ஃபிரம்(from) பட்டனை ஆங்கிலத்தில் மாற்றி தேடல் பெட்டியில் pv zk bschk zk kkkkkkk என்று பல முறை டைப் அல்லது காப்பி பேஸ்ட் செய்து ஆடியோ ஐகனை கிளிக் செய்து பாருங்கள் இசை கேட்கலாம்.



6வது விளையாட்டு கூகுள் பக்கத்திற்கு சென்றால் கூகுள் என்ற வார்தைக்கு பதில் உங்கள் பெயர் வர வேண்டுமா? கூகுள் பக்கத்தில் funnygoogle என்று டைப் செய்து கிளிக் செய்யவும். அதன் பிறகு வரும் முதல் லிங்கை கிளிக் செய்க. அதில் உங்கள் பெயரைக் கேட்டு ஒரு பெட்டி இருக்கும். அதில் உங்கள் பெயரை டைப் செய்து சப்மிட் பட்டனை அழுத்தவும். அதன் பிறகு வித்தையைப் பாருங்கள்.


7வது விளையாட்டு கூகுள் இமேஜஸ் பக்கத்தில் completely wrong என்று டைப் செய்தால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற மிட் ரோம்னியின் படங்கள் வருகின்றன.

8வது விளையாட்டு கூகுள் தேடல் பெட்டியில் Pig-Latin என்று டைப் செய்யுங்கள் தேடல் பக்கத்தில் 2வதாக உள்ள லிங்கை https://www.google.com/intl/xx-piglatin கிளிக் செய்து பார்த்தால் கூகுள் பக்கம் வேறு மொழியில் இருக்கும். இதே போன்று அந்த அட்ரஸ் பாரில் xx-klingon, xx-elmer ஆகிய வார்க்தைகளையும் முயற்சிக்கலாம்
.

9வது விளையாட்டு கூகுள் பக்கத்தில் anagram என்று டைப் செய்தால் do you mean nag a ram? என்று வரும். Recursion என்று டைப் செய்தால் do you mean recursion? என்று நம்மையே கூகுள் கலாய்க்கும்.

10வது விளையாட்டு Fluffiest Kitten in the Whole Wide World என்று கூகுள் பக்கத்தில் டைப் செய்தால் மொஸு மொஸு என்று இருக்கும் வெள்ளைப் பூனையின் உருவம் வரும்.

(மூலம்-oneindia.in)

(கொசுரு: 4வது இல்லை என்பதைக் கவனிக்காதவர்கள் இப்போது கவனித்துக்கொள்ளவும்.)

தெரிந்து கொள்வோமா-16


எங்கும் அவரவர்தம் தாய் மொழி காண்போம்...
மகிழ்வுறுவோம்...

வணக்கம் தமிழர்களே .

windows 7 மற்றும் 8 OS .தமிழில் பயன்படுத்த வழி செய்து இருக்கிறது .
ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்தே கணினியே இனி நம் அழகு தமிழில் பார்க்கமுடியும் .

கணினி கற்று கொள்ள ஆங்கிலமும் அவசியம் இல்லை அவர் அவர் தாய் மொழியிலே கணினி இணையத்தை கற்று கொள்ளலாம் .எத்தனை மொழி வேண்டுமாயின் கற்று கொள்ளுங்கள் தாய் மொழியே மட்டும் மறவாதீர்கள் .

எத்தனை மொழி கற்று இருந்தாலும் சிந்தனை பிறப்பது தாய் மொழியில் மட்டும் தான் 

அதுபோல் vlc player,firefox ,internet explorer இவற்றிலும் தமிழ் முழுமையாக  பயன் படுத்த முடியும் .

விண்டோஸில் தமிழ் திரை மாற்ற .கீழே இருக்கும் இணைப்பிற்கு போய் தமிழ் மென்பொருள் தரவிறக்க வேண்டும் //http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta

புரியவில்லை என்றால் தமிழுக்கு விண்டோசை எப்படி மாற்றுவது என்று இந்த விடியோவை பார்க்கவும் http://www.youtube.com/watch?v=ib2bQ2BlGjI 

தொழில்நுட்ப உதவி வேண்டுமாயின் கேளுங்கள் சொல்லுகிறேன் .













வணக்கம் தோழமைகளே .

windows 7 மற்றும் 8 OS .தமிழில் பயன்படுத்த வழி செய்து இருக்கிறது .
ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்தே கணினியே இனி நம் அழகு தமிழில் பார்க்கமுடியும் .

கணினி கற்று கொள்ள ஆங்கிலமும் அவசியம் இல்லை அவர் அவர் தாய் மொழியிலே கணினி இணையத்தை கற்று கொள்ளலாம் .எத்தனை மொழி வேண்டுமாயின் கற்று கொள்ளுங்கள் தாய் மொழியே மட்டும் மறவாதீர்கள் .

எத்தனை மொழி கற்று இருந்தாலும் சிந்தனை பிறப்பது தாய் மொழியில் மட்டும் தான்

அதுபோல் vlc player,firefox ,internet explorer இவற்றிலும் தமிழ் முழுமையாக பயன் படுத்த முடியும் .

விண்டோஸில் தமிழ் திரை மாற்ற .கீழே இருக்கும் இணைப்பிற்கு போய் தமிழ் மென்பொருள் தரவிறக்க வேண்டும் //http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta

புரியவில்லை என்றால் தமிழுக்கு விண்டோசை எப்படி மாற்றுவது என்று இந்த விடியோவை பார்க்கவும் http://www.youtube.com/watch?v=ib2bQ2BlGjI

தொழில்நுட்ப உதவி வேண்டுமாயின் கேளுங்கள் சொல்லுகிறேன் .