Wednesday, September 2, 2015

Management Lesson...

Management Lesson
ஒரு நாள் ஒரு நாய் காட்டில், வழி தவறிவிட்டது, அப்பொழுது
அது தன்னை பார்த்து வந்த சிங்கத்தை கண்டது, இன்றோடு நம் கதை
முடிந்தது என்று எண்ணியது.
MBA Lesson:-
அப்பொழுது அதன் முன்னே எலும்பு துண்டுகள் கிடந்ததை
பார்த்து, சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்காந்து கொண்டு
அந்த எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது, சுவைத்து கொண்டே மிகவும் சத்தமாக கூற தொடங்கியது,
"சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது,
மேலும் ஒரு சிங்கம் கிடைத்து, அதை கொன்று தின்றால் வயறு நிறைந்து விடும்" இதை கேட்ட சிங்கம் "இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து அங்கிருந்து ஓடியது,
இதை அனைத்தையும் மரத்தின் மேல் இருந்து பார்த்து கொண்டிருந்த குரங்கு, மனதில் எண்ணியது நாய் எப்படி சிங்கத்தை ஏமாற்றியதை சிங்கத்திடம் கூறினால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம்
பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்து, சிங்கத்தை தொடர்ந்து சென்றது, அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று
எண்ணி கொண்டது, சிங்கத்தை பின்தொடர்ந்து சென்ற குரங்கு, நாய் ஏமாற்றிய விசயத்தை கூறியது, அதை கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்" என்று கூறிகொன்ன்டு, "நீ என் முதுகில் ஏறி கொள்"
என்று கூறி குரங்கை முதிகில் ஏற்றி கொண்டு நாய் இருந்தா இடத்தை நோக்கி ஓடியது,
Can you imagine the quick "Management" by the DOG..??
தன்னை பார்த்து வரும் சிங்கத்தை கண்டு, மீண்டும் ஒரு சங்கடம் தன்னை நோக்கி வருகிறது என்று நினைத்து, முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு
"Another lesson of MBA applied"
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது ஒரு சிங்கத்தை கூட ஏமாற்றி கூட்டி வரவில்லையே" என்று உரக்க கூறியது,
இதை கேட்ட சிங்கம் குரங்கை துக்கி எரிந்து விட்டு திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டது.
Moral of the story There are many such monkeys around us, try to identify them "Be a Smart Worker rather than a Hard Work"

No comments: