1⃣ ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
2⃣ தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
3⃣ பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
4⃣ அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும் ஒன்றே!.
5⃣ மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல,
தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.
6⃣ ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது.
ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
7⃣ மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும்,
பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.
8⃣ வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல..மொழி !
9⃣ வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......
வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது
1⃣0⃣ நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை....
1⃣1⃣ நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்...!!!
நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!
Saturday, September 12, 2015
மனதைத் தொட்ட வரிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment