* மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.
* மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.
* பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.
* பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.
* தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம்.
* அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.
* தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.
# சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம்.
சாப்பிட்டேன் என்று அம்மாவிடமும்,
அடுத்த முறை வேலை கிடைத்து விடும் என அப்பாவிடமும்,
வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்தில் சுடிதார் வாங்கி தருகிறேன் என தங்கையிடமும்,
முதல் மாத சம்பளத்தில் ஸ்மார்ட் போன் வாங்கி தருகிறேன் என்று தம்பியிடமும் சொல்லிவிடலாம்,
ஆனால்,
சாப்பிடல மச்சான் ரொம்ப பசிக்குது ஒரு டீ வாங்கி கொடு என நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடியும்.
இது நட்பின் நேசம்.
நம்மில் பலர் இதை கண்டிப்பாக கடந்திருப்போம்.
உணர்ந்தவர்கள் நேசத்துடன் பகிருங்கள்☺😊😊😊 my family and friends are my life😘
Wednesday, September 16, 2015
பாசம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment