Thursday, July 2, 2015

அருமருந்து பூண்டு (Garlic)


பாட்டி வைத்தியம்!

புற்று நோயைக்கூட வர விடாம தடுக்கற அருமருந்து பூண்டு. அஞ்சாறு பச்சைப் பூண்டு பல்லை ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டாலே போதும்.. வயித்துல இருக்கற குடல் புழுக்கள் அழியும்! இதய நோய்க்காரங்களுக்கு பூண்டு ரொம்ப ரொம்ப நல்லதுங்கறது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே போல, கர்ப்பிணிப் பொண்ணுங்களும் கர்ப்பமான முதல் மூணு மாசம் தவிர்த்து, பிறகு தினமும் பூண்டு சாப்பிடணும். பூண்டை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவங்க அதை ரசம் வெச்சு சாப்பிடலாம்.

சரி... பூண்டு ரசம் செய்யறது எப்படி?

ஒரு முழு பூண்டைத் தோலுரிச்சு, தேவையான அளவு புளித்தண்ணியில வேகப் போடுங்க. பிறகு அதை நல்லா மசிச்சு விடுங்க. அப்புறம், காய்ஞ்ச மிளகாய் ஆறு, ஒரு டேபிள் ஸ்பூன் தனியா, ஒரு டீஸ்பூன் மிளகு, சின்னத் துண்டு பெருங்காயம்.. இது எல்லாத்தையும் நெய்யில வறுத்து, மிக்ஸியில கரகரப்பா பொடிச்சு, வெந்துக்கிட்டிருக்கற ரசத்துல போடுங்க. தேவையான உப்பும் போடணும்.

வெந்த துவரம்பருப்பை ஒரு கரண்டியளவு எடுத்து, அரை டம்ளர் தண்ணியில கரைச்சு, ரசத்துல ஊத்தி, நுரைச்சு வந்ததும் இறக்கிட வேண்டியதுதான். தேவைப்பட்டா, ஒரு தக்காளியை பொடியா நறுக்கிப் போடலாம். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில ஒரு டீஸ்பூன் கடுகு, சீரகம் தாளிச்சு, ரசத்துல கொட்டி, கைப்பிடியளவு கொத்துமல்லித்தழையை பொடியா நறுக்கி, ரசத்துல சேர்த்தா வாசனை எட்டூரைக் கூட்டும்.

No comments: