ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை.
இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை.
அப்படியெனில்,
1. தரமான ஹெல்மெட்டுகள் மட்டுமே சந்தையில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா?
2. பல்வேறு அளவுகளில் ஹெல்மெட்டுகள் தயாரிக்க நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளதா?
3. விதி மீறல்களின் போது போலீசார் லஞ்சம் வாங்காமல் தடுத்திட என்ன ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன?
4. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றால், அதற்கு கீழுள்ளவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா அல்லது அவர்கள் இருசக்கர
வாகனத்தில் பயணிக்கக்கூடாதா?
5. விபத்துகள் நேராமல் இருக்க, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதா?
6. கனரக வாகனங்களின் போக்குவரத்துகள் கட்டுக்குள் உள்ளனவா?
7. வாகன ஓட்டுனர் உரிமம் முறையான தேர்வில்தான் வழங்கப்படுகின்றதா?
8. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் அவர் வேறு ஒரு போக்குவரத்து அலுவலகத்தில்
உரிமம் எடுக்க முடியாமல் இருக்க ஏற்பாடு இருக்கின்றதா?
9. அலுவலகங்கள், போகுமிடங்களில் வண்டிகளுக்குப் பார்க்கிங் இருப்பது போல்
ஹெல்மெட்டுகளைப் பாதுகாக்கவோ வைக்கவோ வசதி இருக்கிறதா?
நடைமுறையில் சேர்ந்துக்கொண்டால்
1. கொண்டை வைத்துள்ளோர்கள் ஹெல்மெட் போடுவது சிரமம்.
2. சிறுவர்களின் அளவிற்கு ஹெல்மெட் இல்லை.
3. நடுத்தரவர்க்கத்தினர், கணவன் மனைவி இரு குழந்தைகள் என ஒரு இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர். (அதுவே தவறு.) நான்கு ஹெல்மெட்டுகள்
போட்டுக்கொண்டு போய் எங்கே கழட்டி வைப்பார்கள், அதனை எப்படிப் பாதுகாப்பார்கள்?
4. ஹெல்மெட் அடிக்கடி தொலையவும் திருடு போகவும் வாய்ப்பு உள்ள நிலையில் திரும்பத்
திரும்ப வாங்கிட மக்களால் முடியுமா?
பெட்ரோல் விலை உயர்வோடு ஹெல்மெட் விலையும் சேர்ந்துகொண்டால் என்னதான்
செய்வார்கள்?
இது போலீசார் லஞ்சம் வாங்கவும், லஞ்சம் கொடுத்தால் தப்பு செய்யலாம் என்று பொதுமக்களின் எண்ணம் வளரவும்தான் வழி
செய்யும்.
மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு, புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்றெல்லாம் சொல்லி மக்கள் உடல் நலத்தைக் கெடுக்கும் அரசு,
ஹெல்மெட் போடாமல் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என்று தெருவெங்கும் அறிவிப்பு வைப்பதோடு நின்று கொள்ளலாம்.
பிடுங்க வேண்டிய ஆணிகள் நிறைய இருக்கும்பொழுது இந்த தேவையற்ற ஆணியைப் பிடுங்க வேண்டியதில்லை.
மொத்தத்தில் இது ஒரு பொதுஜனவிரோதப் போக்கு.
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!!
நன்றி...
No comments:
Post a Comment