Wednesday, July 15, 2015

நாழிக்கிணறு !!!



நாழிக்கிணறு !!!

திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.

சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.

போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14 அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது.

ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.
இந்த அதிசயத்தை நேரில் காண திருச்செந்தூர் வாருங்களேன்...!

எளிதான இயற்கை முறையில் உடல் எடை குறைக்க:


எளிதான இயற்கை முறையில் உடல் எடை குறைக்க:

இந்த சுவையான பானத்தை தயாரித்து வெறும் வயிற்றில் காலையில் அருந்தவும். வயிறு சுருங்கி, தொப்பை மறைந்து பிட்டாக இருக்க பலன் தெரியும் வரை தொடர்ந்து சாப்பிடவும்.

தேவையானவை:

சுத்தமான தேன் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி சாறு சுண்ணாம்பு நீக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 1 பல்
பொதினா அல்லது பார்ஸ்லி - 1 கைப்பிடி
தண்ணீர் - அரை கிளாஸ்
அவகேடோ - அரைப் பழம்

செய்முறை:

அவகேடோ பழத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும். இஞ்சி சாறு, தேனை தவிர்த்து மற்ற மேலே சொன்னவற்றை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். கடைசியில் இஞ்சி சாறு, தேன் சேர்த்து கலக்கவும்.

தினமும் காலை வெறும் வயிற்றில் பலன் காணும் வரை அருந்தவும்.

தொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!!!





தொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!!! 
உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.

மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!!

வெள்ளரிக்காய், எலுமிச்சை, புதினா, இஞ்சி, தண்ணீர்

ஜூஸ் செய்யும் முறை

1 வெள்ளரிக்காய் 5 எலுமிச்சை 1 எலுமிச்சங்காய் 15 புதினா இலைகள் 2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி 2.5 லிட்டர் தண்ணீர் வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதில் எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள எலுமிச்சையை பிழிந்து, புதினாவை நறுக்கி, 1.5 லிட்டர் நீரில் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து குடிக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட


சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட

100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும் 
நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும் .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது

இது கடுமையான விஷம் ,மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

மேலும் இயற்கை வைத்திய முறைகளுக்கு கீழே உள்ள வலைப்பூவில் பார்வையிடுங்கள்...

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....
1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/
அரசி போலவும், மதிய
உணவு ஒரு இளவரசன்/
இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம்
செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக
எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட
உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு
நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம்
படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில்
அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம்
வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன்
ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் /
மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள்
பாதை வேறு.
11. எதிர்மறையான
எண்ணங்களை எப்பொழுதும் மனதில்
நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த
அள்வு வேலை செய்யுங்கள்.
அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில்
உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும்
பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய
கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப்
பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம்.
உங்களுக்கு தேவையானது உங்களிடம்
உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க
முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள்
நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில்
யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக்
கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள்
கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள்.
சிக்கல்களும்,பிரச்சனைகளும்
இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய
இடங்களில்
தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள்.
இது பல
பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21.
வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால்
குடும்பத்தில் இருப்பவர்களுக்கும்,
நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும்
அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம்
மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6
வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க
நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன
நினைப்பார்களோ என்பதைப்
பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள்
மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும்
இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம்
தான். அதை தேடி அனுபவித்துக்
கொண்டே இருங்கள்.
29.
உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ,
எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக்
கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக
மாறும்.

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக;் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்....

பரபரப்பான சூழலில் பதற்றப்படாமல் சமயோசிதமாகச் சிந்தித்து நடந்து கொள்ளவேண்டும்.

இது ஒரு உண்மைச் சம்பவம் !!
ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் ஜன்னல் வழியே காற்று ‘குபுகுபு’வென்று வீசிக் கொண்டிருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலுஜிலுப்பை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பெட்டியில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒருவர் சந்தோஷத்தில் ஜன்னலுக்கு வெளியே தன் கையை நீட்டி ஆட்டி அசைத்து மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் சட்டென்று கழன்று கீழே விழுந்துவிட்டது.
பதறிப்போன அந்த மனிதர் தன் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டதாகக் கூச்சல் போட்டுக் கத்தினார். இதனையடுத்து அந்தப் பெட்டியில் இருந்த சகப் பயணிகள் அனைவரும் பதற்றத்தோடு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சிலர் ஜன்னல் வழியே கைக்கடிகாரம் தெரிகிறதா என்று பார்த்தனர். சிலர் எமர்ஜென்சி செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்கள்.
இவ்வாறு அந்தப் பெட்டி முழுவதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது, கைக்கடிகாரத்தைத் தவற விட்டவருக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் மட்டும் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தார். இதனைப் பார்த்தவர்கள் அவர் மீது கடுப்பில் இருந்தனர்.
இதற்குள் அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது. இந்தப் பெட்டி அருகே நிறைய அதிகாரிகள் காத்திருந்தனர். இதனைப் பார்த்ததும் மற்றவர்கள் பரபரப்புடன் அந்த அதிகாரிகளிடம் கைக்கடிகாரம் தொலைந்துபோனதைப் பற்றி வருத்தத்துடன் கூறி, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நேரத்தில் அந்த எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரோ, அந்த அதிகாரிகளிடம் இங்கிருந்து இருபத்தயிந்து கம்பங்களுக்குப் பின்னால் இவரது விலை உயர்ந்த கடிகாரம் விழுந்துவிட்டது. அதனைக் கண்டுபிடித்து இவரிடம் சமர்ப்பித்து விடுங்கள்” என்றார்.
அந்த எதிர் இருக்கைக்காரர் ராஜாஜி!
உட்கருத்து:
பரபரப்பான சூழலில் பதற்றப்படாமல் சமயோசிதமாகச் சிந்தித்து நடந்து கொள்ளவேண்டும்.

Campus placement 😝😝😝😝😝😝

Parents asked the college watchman,is this a good college?
Watchman: probably the best .I did my engineering here and got campus placement. 😆😆😆😆😆😆😆

Small story...

Once upon a time ..a small boy named Hameed lived in a tiny Moroccan village. All his classmates hated him for his stupidity especially his teacher who was always yelling at him "you are driving me crazy Hameed"...

One day his mother went to check out how he is doing at school and the teacher told her honestly that her son is simply a disaster, getting very low marks and never had she seen such a dumb boy in her whole career...

The mother could not accept such a feed back and she took her son out from that school. she even shifted to another city ...

25 years later, that teacher got a cardio disorder and all the doctors have advised her to go for an open heart operation which only one surgeon could perform..

Left with no other choice she did it and the surgery was successful ...when she opened her eyes, she saw a handsome doctor smiling to her, being under anesthesia effect, she wanted to thank him but could not talk, in turn, he was staring at her face which started turning blue, she was raising her hand trying to tell him some thing but in vain and eventually died...

The doctor was shocked and was trying to understand what just happened, till he turned back and saw our friend Hameed working as a cleaner in that hospital who unplugged the ventilator to connect his vacuum cleaner......     
                
If you were thinking that Hameed became a doctor, its because you have been watching too many Indian movies, serials or have been read too many motivational foward messages...😂. 😆

Sunday, July 12, 2015

கவனம் கலப்படம்!



கவனம் கலப்படம்!

தண்ணீர் கலந்த பால், செங்கல்தூள் கலந்த மிளகாய்த் தூள், வாசனையற்ற மல்லித்தூள் போன்றவை மட்டுமே மக்களுக்கு அதிகம் தெரிந்த கலப்படங்கள். இதனால், சுவை குறையுமே தவிர, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், வணிகப் போட்டி காரணமாகவும் அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கிலும் பாலில் யூரியா, அமோனியம் சல்ஃபேட், டிடர்ஜென்ட் பவுடர் போன்றவை கலக்கப்பட்டு, அடர்த்தியாக மாற்றப்படுகிறது. சூடான் டை கலக்கப்பட்ட மிளகாய்தூள், உணவை அழகாக்கி, குடலைப் புண்ணாக்குகிறது. புற்றுநோய் வருவதற்குகூட ‘உணவுக் கலப்படம்’ காரணமாகிறது என்பதே நம்மை அச்சறுத்தும் செய்தி. உணவுப் பொருட்களில் என்னென்ன மாதிரியான கலப்படங்கள் நிகழ்கின்றன என்பதை, இங்கே விரிவாகச் சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

காய், கனிகள்

உணவுப் பாதுகாப்புத் துறை, பழங்களைப் பழுக்கவைக்க, ‘எத்திலின்’ பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்தினாலும், பெரும்பாலான வணிகர்கள் அதைப் பயன்படுத்தாமல் கார்பைடு கல்லைப் பயன்படுத்துகின்றனர். தர்பூசணிப் பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு, பீட்டா எரித்ரோசின் (Beta erythrocin) என்ற ரசாயனம் ஊசி மூலமாகச் சேர்க்கப்படுகிறது. மாம்பழம், தக்காளி, பப்பாளி, சப்போட்டா, வாழைப்பழம் போன்ற பழுங்களை பழுக்கவைக்க, கார்பைட் (Carbide) பயன் படுத்துகின்றனர்.

விளைவுகள்: எலிகளை வைத்து எரித்ரோசின் பரிசோதிக்கப்பட்டதில், தைராய்டு கட்டி உருவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எரித்ரோசின் கலக்கப்பட்ட பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோய் வரும். கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும். கார்பைட்டினால் மறதி, மூளையில் ரத்த ஒட்டம் குறைதல், தலைவலி, மூளை பாதிப்புகள் ஏற்படலாம்.

கவனிக்க: ஒரே மாதிரி பழுத்துள்ள, பளபளப்பான பழங்களில், இயற்கையான வாசம் இருக்காது. சீசன் பழங்களை, சீசன் இல்லாதபோது வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பழங்களை உப்பு நீரில் ஊறவைத்து நன்றாகக் கழுவி, தோல் நீக்கி சாப்பிட வேண்டும்.

அசைவம், தந்தூரி உணவுகள்

பார்த்ததும் சாப்பிடத் தூண்டும் நிறமும் வாசமும் தந்தூரியின் தந்திரம். முதல் சுவையிலே நாவை அடிமைப்படுத்த, சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. சிவப்பு நிறத்தில் தெரிய ‘ரெட் டை’ பயன்படுத்தப்படுகிறது. கோழி வளர்ப்பில் பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. மேலும், உணவகங்களில் மீதமாகிப்போன இறைச்சியை, வினிகரில் கழுவி, புதிது போல விற்கின்றனர்.

விளைவுகள்: சீக்கிரத்திலேயே பூப்பெய்துதல், நெஞ்சு எரிச்சல், அல்சர், தைராய்டு கட்டிகள், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தீயால் சுடப்படும் உணவுகளால், புற்றுநோய் வரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. ஸ்மோக்கி உணவுகளைத் தவிர்ப்பது ஒன்றே இதற்கு வழி.

கவனிக்க: சாப்பிட்ட தந்தூரியின் சிவப்பு நிறம் கையில் ஒட்டியிருக்கும், சோப் போட்டால் மட்டுமே போகும். கடையில் விற்கப்படும் இறைச்சி, சிவப்பாகவோ வெளுத்துப்போயோ இருக்கக்கூடாது. இறைச்சி, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

பால் பொருட்கள்

பால் அடர்த்திக்கு அமோனியம் சல்பேட், பால் நுரைத்து வருவதற்கு சோப், நீண்ட நாள் கெடாமல் இருக்க பார்மலின், யூரியா போன்றவை சேர்க்கப்படுகின்றன என, சமீபத்தில் மத்திய அரசே தெரிவித்துள்ளது. கடைகளில் விற்கப்படும் ‘சின்தட்டிக்’ மில்க்கில் வழவழப்பு, பளபளப்புக்கு வெள்ளை நிற வாட்டர் பெயின்ட், எண்ணெய், அல்கலி (Alkali) மற்றும் டிடர்ஜென்ட் பவுடர் கலக்கப்படுகின்றன.

செம்மறி ஆடு மற்றும் பன்றியிடமிருந்து பெறப்படும் ரென்னட் (Rennet) என்ற பொருளிலிருந்து சீஸ் தயாரிக்கப்படுகிறது. வனஸ்பதி மற்றும் நெய்யில் விலங்குக் கொழுப்பு, வெண்ணெயில், மாட்டுக் கொழுப்பு, மைதாவில் மணிலா (வேர்க்கடலை) மாவு போன்றவை கலக்கப்படுகின்றன.

விளைவுகள்: வயிற்றுவலி, வயிற்றுபோக்கு, கெட்ட கொழுப்பு சேருதல், முக வீக்கம், இதயப் பிரச்னை, வயிற்றுக் கோளாறு, சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா போன்றவை வரலாம்.

கவனிக்க: வீட்டிலே தேங்காய், சோயா, பாதாம், எள்ளு, வேர்க்கடலை போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் பாலை அருந்தலாம். இந்த பாலிலும் தயிர், மோர் தயாரிக்கலாம். பசும்பாலைவிட எள்ளுப் பாலில் 10 மடங்கு அதிக கால்சியம் கிடைக்கும். சீஸுக்கு பதிலாக, சோயா டோஃபு, பாதாம், முந்திரியிலிருந்து தயாரிக்கப்படும் சீஸைச் சாப்பிடலாம்.

பன்னாட்டு உணவுகள்

விளம்பரம், ஆட்கள் சேர்க்கை மூலம், இந்தியாவில் பரவலாக விற்கப்படுகின்றன பன்னாட்டு உணவுகள். இந்தியாவில், 100 பொருட்களை மார்கெட்டிலிருந்து திரும்பப் பெறச் சொல்லி, உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாத்திரை, கிரீம், ஹெல்த் டிரிங்ஸ், புரோட்டீன் பவுடர் போன்ற சில பன்னாட்டு உணவுகளில், நம் சூழல் சார்ந்த உடல் நலனுக்குப் பொருத்தம் இல்லாததால் அரசு தடை விதித்துள்ளது. மேலும், உலோகங்கள், தாவர நச்சுகள் இதில் கலந்திருக்கலாம்.

விளைவுகள்: சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கும். வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும்.

கவனிக்க: பன்னாட்டு உணவுகளைத் தவிர்ப்பது ஒன்றே மாற்று வழி.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

ரெடிமேட் தோசை மாவு சீக்கிரத்தில் புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிகேட், மிளகாய் தூளில் செங்கல்தூள், சூடான் டை, சிட்ரஸ் ரெட், கான்கோரைட். மல்லி தூளில் மரத்தூள், குதிரை சாணம், மாலசைட் பச்சை (Malachite green – வீட்டு வாசல் பச்சை நிறமாக மாற, சாணத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தும் நிறமி), மஞ்சள் தூளில் காரிய க்ரோமல், அக்ரிடைன் மஞ்சள் (Acridine yellow), கடுகில் ஆர்ஜிமோன் விதை, தூள் உப்பு கட்டியாகாமல் இருக்க ஆன்டிகேக்கிங் ஏஜென்ட், டீ தூளில் முந்திரி தோல் மற்றும் செயற்கை வண்ணங்கள், தேனில் வெல்லப் பாகு, சர்க்கரை, சமையல் எண்ணெய்களில் காட்டு ஆமணக்கு எண்ணெய் ஆகியவை கலக்கப்படுகின்றன.

விளைவுகள்: தொடர் தலைவலி, ஒற்றைத் தலைவலி, உடல்பருமன், சில வகைப் புற்றுநோய்கள், சிறுநீரகக் கற்கள், கருச்சிதைவு, மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, நெஞ்சுவலி, நுரையீரல் பாதிப்புகள், குறைபாடுடன் குழந்தை பிறப்பது, அல்சர், கல்லீரல் வீக்கம், கணைய பாதிப்புகள், குழந்தையின்மை, ரத்தக் குழாய் மற்றும் மூளை பாதிப்புகள் ஏற்படலாம்.

கவனிக்க: லேபிளில், மோனோசோடியம் க்ளுட்டமேட் என்ற உப்பு, பதப்படுத்தும் ரசாயனங்கள் மாற்று பெயரில் மறைந்திருக்கும். ரெடிமேட் உணவுகளைத் தவிர்த்து, வீட்டில் தயாரித்த உணவுகளே பாதுகாப்பானது.

சைவ உணவுகளில் அசைவ உணவுகள்

சிப்ஸ், பாக்கெட் மற்றும் டின் உணவுகளில் விலங்குக் கொழுப்பு, வெள்ளை சர்க்கரையில் கால்நடைகளின் எலும்புத் தூள், ரெடிமேட் ஆரஞ்ச் ஜூஸ், சில வகை பானங்களில் மீன் எண்ணெய், கம்பளியிருந்து எடுக்கப்படும் லனோலின், பூச்சியிலிருந்து எடுக்கப்படும் கார்மைன் (E 120) என்ற நிறமூட்டி ஆகியவை மறைமுகமாகச் சேர்க்கப்
படுகின்றன.

பேக்கரி உணவுகள், சூயிங் கம், ஜெல்லி மிட்டாய், ஜாம், காப்ஸ்யூல் மாத்திரைகளில், விலங்குகளின் முடியிலிருந்து, தயாரிக்கப்படும் எல்-சிஸ்டீன் (L-Cysteine), விலங்குத் தோல், கேப்ரிக் அமிலம் (Capric acid) ஆகியவை உள்ளன. இனிப்புகளின் மேல் முடப்படும் வெள்ளித்தாள், மாட்டுக் கொழுப்பால் தயாராகிறது. கால்நடைகளின் எலும்புத் தூளான ‘போன் பாஸ்பேட்’, செயற்கை பான பொடிகளில் சேர்க்கப்படுகிறது.

விளைவுகள்: அலர்ஜி, ஆஸ்துமா, தொடர் தும்மல், சரும பிரச்னை, உடல் பருமன், வயிறுத் தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கலப்படம் இல்லாத சைவ உணவுகளைச் சாப்பிட விரும்புவோர், ‘வீகன் குறியீடு’ இருக்கிறதா எனப் பார்த்து வாங்கலாம்.

கவனிக்க

இ என்ற எழுத்துகளில் வரும் E120, E542, E441, E469, E631, E635,E901, E913,E920 ,E966, E1105 கோடு எண்கள், லேபிளில் பார்த்தால் அதில் விலங்குப் பொருட்கள் இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

யாரிடம் புகார் செய்வது?

வாங்கும் பொருட்களால், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்த ஊரில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். அவர்கள் எந்த பொருளால் உடல்
நலக் கேடு ஏற்பட்டதோ, அந்த இடத்துக்குச் சென்று, அந்த உணவின் சாம்பிளை பரிசோதனை செய்வர். ரிப்போர்ட்டில் கலப்படம் என்று தெரிந்தால், விற்ற
வர் மற்றும் தயாரித்தவர் மேல் கேஸ் போடப்படும். பாதிக்கப்பட்டோர் நிவாரணமும் கேட்கலாம்.

தடை செய்யப்பட்ட வண்ணங்கள்!

உணவுத் தயாரிப்பில் அரசால் சில வண்ணங்கள் மட்டுமே சேர்க்கப்படலாம் எனச் சட்டங்கள் உள்ளன. ஆனால், இங்கு சின்தட்டிக் வண்ணங்கள், தடைவிதிக்கப்பட்ட நிறங்கள், ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதைக் கண்டுபிடிக்க, அந்தந்த ஊர்களில் பரிசோதனை கூடங்கள் இல்லை. தமிழ்நாட்டிலும் ஆறே பரிசோதனை கூடங்கள்தான் உள்ளன.

சூடான் அதிபரை கைது செய்யப்போகிறார்கள். ஆனால் கொடியவன் ராஜபக்‌ஷே….? Sudan Omar- Al-Bashir - Mahinda Rajapakse.



சூடான் அதிபரை கைது செய்யப்போகிறார்கள். ஆனால் கொடியவன் ராஜபக்‌ஷே….? Sudan Omar- Al-Bashir - Mahinda Rajapakse. 
_____________________________________

திஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) சூடான் அதிபர் ‘ஓமர் அல் பஷீர்’ இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் . மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவரைக் கைதுசெய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உறுப்பு நாடான தென்னாப்பிரிக்காவிடம் அவரை கைது செய்ய வேண்டுமென்ற பொறுப்பை ஒப்படைத்துள்ளது. சூடான் அதிபரைக் கைது செய்ய வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

தென்னாப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டுக்குக் கலந்துகொள்ள சென்றுள்ள ஒமர் அல் பஷீர், ஜோஹன்ஸ் பெர்க்கில் தங்கியுள்ளார். புருண்டி, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நீதிமன்றமும் அவர் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறக்கூடாது என்ற உத்தரவையும் நேற்றைக்கு (14-06-2015) பிறப்பித்துள்ளது. இந்த மாநாடு முடிந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்.

2003ம் ஆண்டு சூடான் நாட்டில் சுமார் 3லட்சம்பேர் கொல்லப் பட்டதாகவும், 25லட்சம்பேர் தங்களுடைய வீடுகள், உடைமைகளை இழந்ததாகவும் ஐ.நா இவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

இதே நிலைமை தானே ஈழத்தில் நடந்தது. ராஜபக்‌ஷே மீது சர்வதேச, சுதந்திரமான , நம்பகமான விசாரணை நடத்த நியாயமான கோரிக்கைகள் எழுப்பப்பட்டும் இன்னும் நிறைவேறாத நிலையில் இருக்கின்றது. இராஜபக்‌ஷேயும் இன அழிப்புதானே செய்தார்.

லைபீரிய அதிபர் சார்லஸ் இனப்படுகொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு லண்டன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாரே ? இப்போது ஒமர் அல் பஷீர்…

இப்படி இனப்படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்படும் நிலையில், இராஜபக்‌ஷே தண்டனையிலிருந்து தப்புவதற்கான முயற்சிகளை முறையடிக்க வேண்டாமா?

இலங்கையில் மைத்திரி சிறிசேனா தலைமையில் அமைந்துள்ள புதிய அரசும்கூட, ராஜபக்‌ஷே நடத்திய போர்க்குற்றங்களை விசாரணை நடத்துவதைக் காட்டிலும், அந்தக் கொடுமையை மறைத்து விசாரணையை தாமதப்படுத்துவது என்ற நிலையிலே உள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாண அவையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு விசாரணை வேண்டுமென்று தீர்மானங்கள் கொண்டு வந்தும், சிறிசேனா அரசு அத்தீர்மானத்தையே பொருட்படுத்தவில்லை. இன்னும் தமிழர் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அவர்களது சொத்துகளை சிங்களர்கள் கபளீகரம் செய்துகொண்டுள்ளனர்.

சிறிசேனாவின் முயற்சியாலும் ஈழத்தின் நடந்த போர்க்குற்ற விசாரணையை கிடப்பில் போடுவதை ஐ.நா ஏற்றுக்கொண்டுவிட்டதாக செய்திகல் வருகின்றன.

இந்த நிலையில் இன அழிப்பு போர்க்குற்றங்களில் காரணமான அதிபர்களை உலக அளவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட ராஜ பக்‌ஷே மட்டும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-06-2015.

இயற்கைக்கு நிகர் இயற்கை மட்டுமே.....



நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

சே குவேரா.....



”புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்” - சே குவேரா

■ சே குவேரா பிறந்த தினம் - ஜூன் 14

இப்பூமியில் பலர் வருகிறனர்-போகிறனர். ஆனால் ஒருசிலரே இன்றுவரை நீடித்து நிலைத்து சாதனை படைக்கிறார்கள். அந்தவகையில் வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்ட பெயரில் ஒன்றே சே குவேரா என்கின்ற அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோகுவேரா டி லா செர்னா. இவன் பெயர் பூமியின் ஈரத்தில் ஆழப்பதிந்த பெயர். பல தளிர்களுக்கு வேராக நின்று துளிர்விட்ட பெயர்.

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா

உலகில் தோன்றிய பல விடுதலை வீரர்களிலிருந்தும் முற்றிலும் இவர் வேறுபட்ட ஒரு மாமனிதராவார்.

செல்வந்த குடும்பத்தில் பிறந்து,ஒரு மருத்துவராக பட்டம் பெற்ற இவர் நினைத்திருந்தால் தன் காலம் முழுவதும் வசதியான வாழ்க்கையை மேற்கொண்டிருக்க முடியும் ஆனால் அனைத்தையும் துறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதுவும் வேறு நாட்டு மக்களுக்காக போராடிய இவரது போராட்டம் அளப்பரிய ஒன்றாகும்.

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா (Ernesto Guevara de la Serna) என பெயர் சூட்டினர். இவரது குழந்தை பருவம் குறையற்ற விதத்தில் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.

இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார்.. இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம். பெரு (Peru) நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது.

தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்துவிளையாடிய ‘சே குவேராவின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்கள் தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட புத்தகம் உலகப் பிரபல்யம் பெற்றது இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

சேவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப் போட்ட பயணம் அது. இதுவரையும் அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால் இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை தந்தது. தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.

பொதுவுடமை சமூகத்தில்,உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும். எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒருமையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும். மக்கள் உழைத்து தமக்குரிய பொருளாதார பங்கை பெறுவர். பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால், சமூகத்தின் வளங்களும், செல்வங்களும் தனிமனித முதலாளிகளிடம் முடக்கப்படுவது அறவே தவிர்க்கப்படுகிறது. இந்த வளங்களை கொண்டு பொதுவாக ஏகாதிபத்திய,முதலாளித்துவ சமூக கோட்பாடுகளால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாமானிய வர்க்க மக்களின் வாழ்க்கைதரம் மேம்படுத்தப்படுகிறது. பொருளியல் துறை சார்ந்தவர்கள் இது தொடர்பில் அறிந்திருக்கலாம்.

இந்தகொள்கை தொடர்பான அறிவு சேவிற்கு வரக் காரணம் நூல்கள் மட்டுமன்றி இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே மார்க்சியம் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே குவேரா முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜென்டீனாவுக்குத் (Argentina) திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

1953 ஜூலையில் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும் அங்கிருக்கப் பிடிக்காமல், மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா (Bolivia) , பெரு (Peru), ஈக்குவடோர் (Ecuador), பனாமா (Panama), கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா (Nicaragua ), ஹொண்டூராஸ் (Honduras), எல் சல்வடோர் (El Salvador ) ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.

உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். ஏற்கெனவே அவருக்குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. குவேதமாலா கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக்கவிழ்க்க, அமெரிக்கா தன் சி.ஐ.ஏ. மூலமாக தீவிரமாகச் செயல்பட்ட தருணம்.

குவாத்தாமாலா நகரில், ஹில்டா கடேயா (Hilda Gadea) அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவரை பிற்காலத்தில் சே குவேரா திருமணம் புரிந்தார் இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக்காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

சே’, அங்கிருந்த கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது. 1954ம் ஆண்டு ஜூன் மாதம் குவாத்தாமாலாவை முற்றுகையிடும்போது தப்பியோடும் நிலை ஏற்பட்டு மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்தவர் நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்தார். இக்காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந்தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். விவசாயிகளிடம் குவேதமாலா அரசு, ஆயுதங்களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்காவின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏவின் பார்வைக்கு இலக்கானார். பாதுகாப்புக்காக அர்ஜென்டினா தூதரகத்தில் தங்கநேரிட்டது.

இந்த நேரத்தில் அவரது எண்ணங்களால் ஒரு கியூபா போராளி வசீகரிக்கப்பட்டார். அவர் பெயர் நிக்கோ லோபஸ். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த பாடிஸ்ட்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய ‘ஜூலை 26’ எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது.

நிக்கோலோபஸ்க்கு, குவேத மாலாவில் ‘சே’வைச் சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.

■ பிடல் காஸ்ட்ரோவுடனான சந்திப்பும்,கியூபாவில் போராட்டமும்

கியூபா மண்ணின் தலைஎழுத்தை மாற்றிய அந்த சந்திப்பு 1955, ஜூலை மாதம், ஒரு இரவில் மெக்ஸிகோ நகரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நடக்கின்றது. அடுத்த சில நொடிகளில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நிகழ்ந்தது. சேகுவேராவும் ஃபிடல் காஸ்ட்ரோ வும் வெவ்வேறு துருவங்கள். காஸ்ட்ரோவுக்கு போர்க்குணமும் போராட வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், போராட்டத்துக்கு வேண்டிய தத்துவப் பின்புலன் இல்லை. ‘சே’வுக்கு தத்துவமாக கம்யூனிஸம் உறைந்திருந்தது. ஆனால் போராடக் களம் இல்லை. இருவரும் இணைந்த போது… சக்திகள் இடம் மாறின.

இரண்டு மகத்தான சக்திகள் இணைந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அத்திவாரம். அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.

புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது. காலநிலையில் ஏற்பட்ட சிக்கலால் படகு எதிர்பார்த்த இடத்தை எதிர்பார்த்த நேரத்தில் அடைய முடியாமல் போகின்றது. இதனால் இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது. இச் சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழக்கின்றனர். மிஞ்சியவர்களின் துணையோடு இராணுவத்திற்கு ஆயுதங்கள் வரும் இரயில் கவிழக்கபடுகின்றது இராணுவத்தினர் சிறைபிடிக்கபடுகின்றனர்.

1957, ஜனவரி 17ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற ‘சே’, தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார்.. கொரில்லாப் படைக்குக் கமாண்டராக அறிவிக்கப்பட்ட ‘சே’ கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர் காடுகளிலும், மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார்.

”சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்’’போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு தெம்பூட்டி சீற்றம் கொள்ளவைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் ‘சே’வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. 1958ம் வருடம் ஸாண்டா கிளாராவைக் (Santa Clara) கைப்பற்றினார் . கியூபாவை ஆண்ட கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்குத் தப்பியோடினான். 1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த்தியது.

1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் சேகுவேராவை ஒரு கியூபன் என்றுஅறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம் தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். ‘சே’ மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார்.

அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத்தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப்பேன்’’ என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’. சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இந்நிலையில் காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்துக்குப் பிறகு, ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு ‘சே’வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.

அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ (Raul castro) ‘சே’வை சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.

அது மட்டுமன்றி வேறு சில காரணங்களும் சொல்லபடுகின்றது அவை 1964ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது. அவ்விரு நியமனங்களுமே குவேரா வெளியேறுவதற்கு ஒரு தூண்டுகோலாகியது.

மற்றுமொரு காரணம் குவேராவின் எண்ணமும் விருப்பமுமான மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம். மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று போர்க்கொடி தூக்கினார்கள். 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்டார். அதனால் கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினார் .

சே எங்கே?’ பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. ‘சே’வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ‘சே எங்கே?’ எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ

உண்மையில் ‘சே குவேரா பிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தார். அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக காங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தார். அவரது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றி செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோ அக்டோபர் மாதம் கியூபன் மக்களுக்கு அறிவித்தார். காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய கடிதத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் காஸ்ட்ரோ படித்தார். அதில் என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற போராளிகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் என்று எழுதியிருந்தார்.

இந்த மாவீரனின் தோல்விக்கான வரலாறு எழுதப்பட தயாராகி கொண்டிருக்கின்றது இதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தவர். 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் தீவு நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது.

பொலிவியாவில் நடந்த கொரில்லாப் புரட்சியின் போது பொலிவியக் காடுகளில் பதுங்கி இருந்தார். தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது.

■ 1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.

● காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

● நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள்.அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

● பிற்பகல் 3.30… காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான்இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.
காலில் குண்டு அடிபட்ட நிலையில் சே குவேரா

● மாலை 5.30… அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.

● இரவு 7.00… ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது.. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

● தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

● அக்டோபர் 9… அதிகாலை 6.00… லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.

● பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

● கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

● காலை 10.00 ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது.

● வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’… 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

● காலை 11.00 ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது.. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ (Mario Jemy) என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.

● கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.

● தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

● மணி 1.10 மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்கின்றது. ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான். சேவின் மார்புகளைத் தோட்டாக்களால் துளைத்தது. ஆனால் அந்த வீரனின் கண் இமைகள் அப்போதுகூட மூடிக்கொள்ளவில்லை. கண்கள் திறந்தபடியேதான் அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்தது.

● அக்டோபர் 18…. கியூபா… ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ‘‘வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுக்கிறார்.

● சேகுவேரா உண்மையில் இறந்தது அக்டோபர் மாதம் 9ம் தேதியாகயிருப்பினும், கியூபாவில் இன்றும் ஒவ்வொரு அக்டோபர் 8ம் தேதியன்று சே குவேராவின் நினைவு நாளாக அவனது பங்களிப்புக்கு தலை வணங்கி போற்றுகின்றனர்.

● குவேராவின் நினைவாக நிகழ்வுகளும், கியூபாவின் அரசு தரப்பிலிருந்து வெளிவரும் நாளேடான ‘க்ரான்மா ‘வில் நினைவஞ்சலியாக பல பக்கங்கள் ஒதுக்குவதும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் இயக்கமான ‘பயனீயர்ஸ் ‘ என்ற இயக்கத்தில் ஆறு வயது சிறுவர்கள் சேர்ந்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். அப்போது அவர்கள் சுயநலமில்லாமல் சமுதாயத்திற்கே தங்களை அர்ப்பணிக்க உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.

● எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிற்காகவோ போராடி எந்த மண்ணிலோ துணிச்சலாக மரணத்தை சந்தித்த சே குவேரா இந்த யுகத்தின் ஒப்பற்ற தலைசிறந்த விடுதலைப்போராளி.

■ கவனம் பெறும் நிகழ்வுகள்:-

● 1929 ஜூன் 14 – பிறப்பு

● 1945 – மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்

● 1950 – உந்துருளியில் 3000 மைல் தூரம் ஆர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்

● 1952 – தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசூலா, ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்

■ 1953

● ஜூன் 12 – மருத்துவராக பட்டம் பெறுதல்.

● ஜூலை 6 – லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்

■ 1955

● ஜூலை – ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.

● ஆகஸ்ட் 18 – குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.

■ 1956

● பெப்ரவரி 15 – சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.

● ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.

■ 1958

● ஜூலை – புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.

● டிசம்பர் 28 – லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.

■ 1959

● ஜனவரி 1 – சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.

● ஜனவரி 2 – காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.

● ஜனவரி 3 – சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்

● ஜனவரி 8 – காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.

● மே 17 – உளவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

● ஜூன் 2 – சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

● ஜூன் 12 – வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.

● அக்டோபர் 7 – உளவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.

● நவம்பர் 26 – சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

■ 1960

● அக்டோபர் – சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்

● நவம்பர் 24 – சே – அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.

■ 1961

● ஜனவரி 3 – அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.

● பெப்ரவரி 23 – சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.

● ஆகஸ்ட் 8 – உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.

■ 1962

● மே 20 – சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்

● ஆகஸ்ட் 27 – சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்

■ 1963

● ஜூன் 14 – சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.

● ஜூலை 3 – பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.

■ 1964

● பெப்ரவரி 24 – சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.

● மார்ச் 14 – சே கியூபா திரும்புகிறார்.

● அக்டோபர் 31 – காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.

● டிசம்பர் – காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.

■ 1966

● நவம்பர் – சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.

■ 1967

● மார்ச் 23 – முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிக்கிறது.

● ஏப்ரல் 16 – ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.

● ஆகஸ்ட் 4 – ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.

● செப்டெம்பர் 26 – கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.

● அக்டோபர் 8 – மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைது செய்யப்படுகிறார்.

● அக்டோபர் 9 – சே கொலைசெய்யப்படுகிறார்

■ 1968

● ஜூலை 1 – ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.

■ 1995

● கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.

■ 1997

● ஜூன் 28 – பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.

● ஜூலை 14 – சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.

● அக்டோபர் 13 – ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.

● அக்டோபர் 14 – சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.

■ ”இருபதாம் நூற்றாண்டின் இந்த சிறிய போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள். சிலியா, ராபர்ட்டோ, மார்ட்டின், பீட்ரீஸ் மற்றும் அனைவருக்கும் எனது முத்தங்கள்.

என் அன்பு தாய், தந்தையே, உங்களுக்கு கீழ்படியாத இந்த தறுதலை பிள்ளையின் தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்.”

- எர்னஸ்டோ ['சே குவேரா' தன் பெற்றோருக்கு எழுதிய கடித்தில் இருந்து சில வாக்கியங்கள்]

■ ‘நான்’ என்பது - எனது முக்கியானவைகளில் ஒன்று!

- சே குவேரா -

■ “என்னுடைய துப்பாக்கியை வேரொறுவர் எடுத்து அநீதிக்கு எதிராக போராடுவார்கள் என்றால் நான் கொல்லப்படுவதை பற்றி கவனம் செலுத்தமாட்டேன்”

- சேகுவேரா

■ நீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன்.

- சே குவரா.

■ ”கோழையே சுடு! நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்!”

- சே குவராவின் கடைசி வசனம்.

”புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்."