Friday, February 20, 2015

Thamizhargalin Paarambariyam....



5000-6000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழர்கள் எவ்வாறான ஒரு அழகான பெறுமதியான நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வோமா?
அதற்குமுன்னர் ...........
நான் எனது பதிவுகளில் பழங்காலம் தொட்டு தமிழர்கள் பின்பற்றிய மதத்தை "சைவம் "எனறே
விழிக்கிறேன் . "ஹிந்து ""இந்து " என்ற சொல் தமிழர்களுக்குப் பொருத்தமற்றது என்று அறிகிறேன். இரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிந்துகொள்வது நல்லது.

சைவம் உலகிலேயே பழைமையான மதம் என்று அறியப்படுகிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகமான சிந்துவெளி நாகரீகத்தில் (ஹரப்பா , மொஹஞ்சதாரோ போன்ற பகுதிகளில் ) அண்மையில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட்களில் அதற்கான சான்றுகள்
கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையும் முன்பே சைவத்தைப் பின்பற்றிய தமிழர்கள் இந்தியாவின் வடபகுதிகள் எங்கும் வியாபித்திருந்தனர்.

இந்தியாவுக்குள் புகுந்த ஆரியர்கள் எனப்படுபவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் . பல்வேறு கால இடைவெளிகளில் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள். எனினும் தமிழர்களின் வீரம் செறிந்த தாக்குதல்களை முறி யடிப்பதற்க்காக ஒன்றிணைந்து கொண்டு தமிழர்களோடு போரிட்டார்கள்.

நிறத்தால் அவர்கள் ஒரேமாதிரியாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பொது எதிரியாக தமிழர்கள் இருந்தமையால் இலகுவாக அவர்கள் ஒன்றிணைந்து கொண்டார்கள். தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்க்காக தொடர்ச்சியாக ஒன்றிணைந்து செயல்பட்டார்கள்.அந்தகாலப்பகுதிகளில் அவர்களிடம் ஒரு மதமோ இலக்கியமோ இருந்திருக்கவில்லை.அதனால் பிற்காலத்தில் சைவ சமயம் , சமணம், வைணவம் போன்ற மதங்களிலிருந்தும் தமிழ் இலக்கியங்களில் இருந்தும் பல விசயங்களைத்திருடி ,இணைத்து , வர்ணாசிரமக் கொள்கையான சாதீயக் கொள்கையைப்புகுத்தி தமக்கேற்றவாறு தம்மை முன்னிலைப்படுத்தி ஒருகொள்கையை உருவாக்கிக் கொண்டார்கள் .
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் சிந்துவெளி அழைக்கப்பட்டு பின்னர் இந்துவெளி என்று மருவி பின்னர் ஆரியர்களின் மதக்கொள்கை சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் ஹிந்து , ஹிந்துசம் என்று அழைக்கப்பட்டது.
‘இந்து மதம்’ – என்னும் பெயர் கி.பி. 1794க்கு முற்பட்ட இந்திய இலக்கியங்கள் எவற்றிலுமே இல்லாத புதுப்பெயர் ஆகும்.
மனுநூல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வருணாசிரமக் கொள்கையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்குக் கி.பி.1794இல் சர் வில்லியம் சோன்சு (Sir William Jones) என்னும் ஆங்கில நீதிபதி ‘Hinduism’ என்று புதுப்பெயர் கொடுத்தார்.
‘Hinduism’ என்பது இன்று ‘இந்துத்துவம்’ அல்லது ‘இந்துத்துவா’ என்று அழைக்கப்படுகிறது.

சைவ மதத்தை வளர்த்த நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.
வைணவ மதத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.
சைவ மத இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது.
வைணவ மத இலக்கியமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ்மொழியிலேயே இருக்கிறது.
இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் இருநூற்று எண்பது ஆகும். அவற்றுள் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன.
வைணவத் திருப்பதிகள் நூற்று எட்டில் தொண்ணூற்று ஆறு திருப்பதிகள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன.
சைவ மதத்தின் தலைமைக் கோவில் சிதம்பரத்தில் இருக்கிறது.
வைணவர்களின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் இருக்கிறது.
ஆகவே சைவமும் வைணவமும் தமிழர் சமயங்கள் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'இந்துத்துவாவின் பிடியிலிருந்து இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து எடுத்து வெளியிடப்பட்டுள்ளது)

Saivam is the oldest ancient religion of the world.
Ancient Tamil literature gives a detailed description of the Tamil religion.
In our old Tamil literature there is no word called Hindu. The word has been used by the early Persian language. People around Indus river were initially called as Sindu. Over the years, Sindu was pronounced as Hindu and India hence, the word Hindu refers to the land and people of Indus valley. The quote above clearly denotes that the word, Hindu, used by Aaryans(Persians) referred to the land of India and not to any religion.
Approximately 4500 years ago when Aaryans came to India they destroyed the ancient Tamil culture and the cities around Indus valley. They established homa worship and created mantras for it. Vaitheegam or veda culture developed simultaneously. The brahmin priests (Aaryans) who practiced them, became more powerful and classified people into four groups under the varnaasrama system and placed themselves as the highest group. Varnaasrama dharma and homa worship quickly spread to south India from north India.
Kings of south India, invited brahmin priests and homa worship was propagated in the south. Brahmin priests took over the duties of south Indian priests in the inner sanctrum of the temples, initially built by south Tamils. Thus, the varnaasrama dharma became the common dharma in India and became India’s general way of life. As India was earlier referred to as Hindu, the varnaasrama way of life was accepted as Hindu dharma. With the exception of some communities, all the others accepted this dharma which included veda culture, the usage of Sanskrit language and homa worship came under the control of brahmins and were known as Hindu religion (Hinduism)
Some traditional and aagama religions were of the opinion that they preceded vedas and hence, remained as independent religions. Those accepted Saivam did not want to be known as Hindus, as they did not accept the Aryan vedas and did not want to acknowledge the superiority of the brahmins.
Due to the conspiracy of Aaryans, some people were of the opinion that Tamils did not have any religion until recently. The historical data and information gathered from old sangam literature not only refutes this but gives very clear information about Tamil religion. The way of live of Tamils and their worship practices are shown in the priceless book, Tholkapiam and in sangam literature.

source: மகிழ்நிலா ஈழ சாதனா

No comments: