Saturday, February 21, 2015

பூமியில் பெண்கள் அனைவரும் சுமங்கலி பூஜை செய்கின்றனர்.

பூமியில் பெண்கள் அனைவரும் சுமங்கலி பூஜை செய்கின்றனர். அப்படியே, ‘ஏழேழு ஜென்மத்துக்கும் இவரே மீண்டும் கணவராக வர வேண்டும்’ என்று வரம் கேட்கின்றனர்.

வானுலகத்துக்கு இந்த கோரிக்கை கேட்கிறது. உடனே, பிரம்மனை நோக்கி சித்திர குப்தன் ஓடுகிறார்.

‘சுவாமி. பூமியில் உள்ள பெண்களுக்காக நீங்கள் அறிவித்த சுமங்கலி பூஜை திட்டத்தை உடனே நிறுத்துங்கள். அதனால், பெரிய பிரச்சினை உருவாகிறது’

‘சித்திரகுப்தா. என்ன சொல்கிறாய்...?’

’சுவாமி. எல்லா பெண்களுமே அவரவர் கணவர்களையே அடுத்த 7 ஜென்மத்துக்கும் கணவராக வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், அவர்களுடைய கணவர்களோ... ஒவ்வொரு ஜென்மத்திலும் வேறு வேறு பெண், மனைவியாக வேண்டும் என்று வரம் கேட்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது.’

‘சித்திர குப்தா... நீ கூறுவது சிறிது சிக்கலான விஷயம் தான். ஆனால், இது காலம் காலமாக இருந்து வரும் திட்டமாயிற்றே. திடீரென எப்படி நிறுத்துவது...?

இருவரும் மூளையை கசச்கிக் கொண்டு இருக்கின்றனர். விடை தெரியவில்லை. அப்போது, நாரதர் அங்கு வருகிறார்.

‘நாராயண... நாராயண... என்ன பிரச்சினை? இருவரும் ஒரு மாதிரியாக அமர்ந்திருக்கிறீர்கள்’

நாரதரிடம் பிரம்மனும், சித்திர குப்தனும் பிரச்சினையை விளக்கமாக எடுத்துக் கூறுகின்றனர்.

‘ஹாஹா... வெரி சிம்பிள். அதே கணவர் தான் மீண்டும் வேண்டும் என்று கேட்கும் பெண்களுக்கு கேட்ட வரத்தை கொடுத்து விடுங்கள். அப்படியே, கணவர் மட்டுமல்ல தற்போதைய மாமியாரே அடுத்த 7 ஜென்மத்துக்கும் உங்களுக்கு கிடைப்பார் என்ற நிபந்தனையையும் விதித்து விடு
ங்கள். பிறகு பாருங்கள் நடப்பதை.... நாராயண... நாராயண...’

No comments: