குட்டி கதை!!
டீக்கடை!!
கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது.
‘‘அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே? அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.’’
‘‘ஒரு ரெண்டு டீ போடு.’’
குரல் நாலாபுறம் இருந்தும் வந்தது.
டீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, ‘‘ஐயா! சாமி ஒரு சாயா தாங்கய்யா.’’ _எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.
அவர் அந்த ஊர்ளில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்..
டீக்கடைக்காரர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்து விட்டு, அந்த நபருக்கு,மட்டும் அலுமினிய டம்ளரில் டீ போட்டு தன் விரல் அந்த நபர் கையில் பட்டு விடாதபடி டம்ளரை நீட்டினார்.
எல்லோரும் காசு கொடுக்க _ அந்த நபரும் காசு கொடுக்க கல்லாவில் போட்டார் கடைக்காரர். டீ கொடுத்து, அதைக் குடித்து விட்டு கடைக்காரரை ஏறிட்டு மெதுவாகச் சொன்னார் அந்த ஆசாமி. ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன்னு எனக்குத் தனியா வேற ஒரு டம்ளரில் டீ தாரீங்க. ஆனா நான் கொடுத்த காசையும் அவங்க கொடுத்த காசையும் ஒரே கல்லாவில் போடுறீங்களே!’’
பதில் சொல்லத் தெரியவில்லை டீக்கடைக்காரருக்கு.
No comments:
Post a Comment