பெயர்: கோதையம்மாள், வயது:75 க்கும் மேல்.. .
ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..
பிள்ளைகள்: தறுதலைகள்..
தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..
சம்பளம்: ஒரு நாளைக்கு,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..
ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு.. (அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும், இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார்)
இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார், தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..
ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்..
ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம்..
அதனாலென்ன இப்போது முடிந்தால் நீங்கள் அனைவரிடமும் பகிறுங்களேன்.
No comments:
Post a Comment