Tuesday, June 18, 2013

சுத்தமான குடிநீரை லிட்டருக்கு 5 பைசாவிற்கே தரும் நானோ பில்டரை கண்டுபிடித்த தமிழன் !

சுத்தமான குடிநீரை லிட்டருக்கு 5 பைசாவிற்கே தரும் நானோ பில்டரை கண்டுபிடித்த தமிழன் ! 

இன்றைய உலகில் அதிகமாக பரவி வரும் ஒரு தொழில்நுட்பம் நானோ டெக்னாலஜி. அந்த தொழில் நுட்ப முறையில்(Nano filter), 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் பிரதீப். இவர் மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார். அத்துடன் ஒருவர் சுத்தமான நீரைக் குடிக்க ஒவ்வொரு மாதமும்1,000 ரூபாய்க்கும் மேல் செலவாகும் சூழ்நிலை உள்ளது. மனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீரை மிகக் குறைந்த விலையில் கிடைக்க இவர் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியில்தான் இதுபோன்ற நானோ தொழில்நுட்ப முறையில் ஒரு இயந்திரம் கண்டுபிடித்தார்.
முதலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அழித்த பின் இரண்டாம் கட்டமாக ஆர்சானிக், ஈயம், இரும்பு போன்ற தேவையற்ற உலோகங்களை நீக்கி பின்னர் சில்வர் நானோ துகள்களிலிருந்து கிடைக்கும் பொதுவாக “வெள்ளி அயனிகள்’ நீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து நீரைச் சுத்தப்படுத்தும. இந்த வெள்ளி அயனிகளை நேரடியாக நீரில் சேர்ப்பதால் நுண்கிருமிகள், கனிமங்கள், தாதுக்கள் போன்றவை அதன் சுத்தப்படுத்தும் செயல்திறனை குறைத்து விடும் என்பதால் அதற்கான மாற்று முறையைக் கண்டுபிடித்துள்ளார்.

அலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற களிமண் போன்ற பொருளால் 50 நானோ மீட்டர் நீளமும் 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து அதனுள் வெள்ளி அயனியை வைத்து”உயிரி பாலிமர்’ பொருளால் மூட வேண்டும். இதனால் வெள்ளி அயனியை நீரில் உள்ள நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால் வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு, நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி தேவையற்ற உலோகங்களை நீக்கலாம்.
இச்சுத்திகரிப்பு இயந்திரத்தை வீட்டில் பயன்படுத்தி நீரைச் சுத்திகரித்துக் குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் கூண்டை மாற்றினால் போதும். தொடர்ந்து பயன்படுத்தலாம். இதன் விலை ஜஸ்ட் 120 ரூபாய்தான். கிராமப்புற்ப் பெண்களுக்கு இத் தொழில்நுட்பப் பயிற்சியை கொடுத்தால் வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் சுத்தமான குடிநீரை லிட்டருக்கு 5 பைசாவிற்கே தரமுடியும் என்கிறார்கள்.

Affordable water purification using silver nanoparticles
*************************************************************************
Researchers at India’s Institute of Technology Madras have developed a new kind of portable water purification system based on nanoparticle filtration. In their paper published in the Proceedings of the National Academy of Sciences, the team explains how their new device does its job—it employs nanoparticles to remove not just biological hazards, but toxic heavy metals as well.

- See more at: http://www.aanthaireporter.com/?p=33957#sthash.9b0S9h9R.dpuf

No comments: