எனது அஞ்சல் தலை’ திட்டம் தமிழகத்திற்கும் வந்தாச்சு
தமிழகத்தில் இந்திய தபால்துறையின் எனது அஞ்சல் தலை திட்டத்தின் தொடக்க விழா முதல் முறையாக சென்னை அண்ணாசாலையில் உள்ள சிறப்பு தபால் தலை சேகரிப்பு மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை வாங்கி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எழுதி அனுப்பும் கடிதங்களில் ஒட்டி அனுப்பலாம்.அல்ல்து தபால் தலைகளை வாங்கி வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்திய தபால்துறை சார்பில், கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற தபால் தலை கண்காட்சியில் எனது அஞ்சல் தலை திட்டம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்திரபிரதேசம், மும்பை உள்பட வட மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை வாங்கி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எழுதி அனுப்பும் கடிதங்களில் ஒட்டி அனுப்பலாம். தபால் தலைகளை வாங்கி வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். இதுவரை மறைந்த தலைவர்களின் புகைப்படங்கள் மட்டுமே தபால் தலைகளாக வெளிவந்த நிலையில், உயிருடன் இருக்கும் சாதாரண மக்களின் புகைப்படங்களையும் தபால் தலைகளாக அச்சிடுவது இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்கவிழா, சென்னை அண்ணாசாலையில் உள்ள சிறப்பு தபால் தலை சேகரிப்பு மையத்தில் நடைபெற்றது. விழாவில் முதல் அஞ்சல் தலையை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீ மெர்வின் அலெக்ஸாண்டர் வெளியிட மத்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் ஜெ.சதக்கத்துல்லா பெற்றுக் கொண்டார். இதில் தபால் துறை இயக்குனர் ஜெ.டி.வெங்கடேஸ்வரலு, முதன்மை தலைமை தபால் அதிகாரி எம்.பூர்ணசந்திர ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எனது அஞ்சல் தலை திட்டம் குறித்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீ மெர்வின் அலெக்ஸாண்டர்,”எனது அஞ்சல் தலை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலுடன், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறப்பு தபால்தலை சேகரிப்பு மையங்களில் விண்ணப்பிக்கலாம். சென்னையில் இருந்து வாடிக்கையாளர்களின் புகைப்படம் ஒட்டிய தபால் தலைகள் தயாரிக்கப்பட்டு அவர்களது சொந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 7 நாட்களுக்குள்ளும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள்ளும் தபால் தலை அனுப்பி வைக்கப்படும். இதில் ரூ.300-க்கு 12 அஞ்சல் தலைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து, பின்னர் இதற்கான விண்ணப்பங்களை தலைமை தபால் நிலையங்களில் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது பூக்களால் ஆன தபால் தலைகள் மட்டுமே உள்ளன. விரைவில் பாரம்பரியம்மிக்க கட்டிடங்கள், பிரபல சுற்றுலா தலங்கள், மற்றும் விலங்குகளின் படங்களும் எனது அஞ்சல் தலைகளில் இடம் பெறும்.”என்று அவர் கூறினார்.
சாம்பிளுக்கு நம் அண்டை மாநிலமான கேரளாவில் எடுக்கப் பட்ட ‘என் அஞ்சல்’ விடீயோ உங்களுக்காக்:
My Stamp Scheme introduced by India Post in Tamilnadu!
*********************************************************
The “My Stamp” scheme in Mumbai lets you have your photograph printed on five rupee (10 U.S. cent) stamps. The minimum order a customer can place is for one sheet of 12 stamps.

நன்றி-ஆந்தை ரிப்போர்ட்டர்...
No comments:
Post a Comment