பழனி ஆண்டவர் சிலையை விஞ்ஞான சோதனை செய்தவரின் கருத்து:
இந்து ஆலயங்களில் உள்ள தெய்வங்களின் சிலைகளை கருங்கல் பாறைகளில் செய்வார்கள். அதற்குக் காரணம் அவற்றில் இயற்கையாக அமைந்து உள்ள அதி இழுவிசை சக்தியே.
மேலும் கருங்கல் பாறைகள் பெரும் பலம் மிக்கவை . அது மட்டும் அல்லாமல் இயற்கை உருவாக்கி உள்ள பஞ்ச பூத சக்திகளான தண்ணீர், காற்று, நெருப்புமற்றும் ஈதர் போன்ற அனைத்துப் பொருட்களும் அதற்குள் உள்ளன.
ஆனால் அப்படி இல்லாமல் பழனி ஆலயத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது.
சமஸ்கிருதத்தில்'நவ'என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.'நவ'என்றால்'புதியது'அல்லது'ஒன்பது'என்ற அர்த்தங்கள் உள்ளன.
அது போலவே'பாஷணம்'என்றால்'விஷம்'அல்லது'தாதுப் பொருட்கள்'என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன.
பழங்காலத்திய இலக்கியங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நவபாஷண சிலையை செய்தவர் சித்த முனிவரான'போகர்'என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள்.
அங்குள்ள மூலவரின் சிலை நவபாஷணங்களினால் செய்யப்பட்டு உள்ளது. அதை மிகவும் நுண்ணியமாக ஒன்பது விஷப் பொருட்களின் கலவையினால் செய்து உள்ளார்.
அந்த ஒன்பது நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களும் ஒன்றாகியபோது உடைக்க இயலாத பலம் மிக்க பொருளாக மாறியதும்அல்லாமல் பல வியாதிகளை குணப்படுத்தும் ஒருவித மருத்துவத் தன்மைக் கொண்ட பொருளாகவும் மாறி இருந்தது.
அதற்குப் பின்னரே அந்தக் கலவையில் செய்த பொருளில் மூலவருடைய சிலை செய்யப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமித்து இருப்பதில் இருந்தே சித்த முனிவரான போகர் ரசவாதகலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமல்ல , தொலைதூர கண்ணோட்டத்துடன் பின்னர் வர உள்ள காலத்து முருக பக்தர்களின் உடல் நலனில் பெருமளவு அக்கறை கொண்டு இருந்தவர் என்றும், அவர் மிக உயர்வான தெய்வீக நிலையில் இருந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
அந்த சிலையின் அருகில் சென்று உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு கழுத்துக்கு கீழே உள்ள பாகங்கள் தக்க விகிதாசாரத்தில் தற்போது இல்லை என்பது தெரியவரும். பக்தர்கள் உபயோகித்து இருந்த சில அபிஷேகப் பொருட்களினால் அந்த சிலையின் கைகளும் கால்களும் மிகவும் சேதம் அடைந்து உள்ளன
தொடைப் பகுதியில் முட்டிக்கு கீழே உள்ள கால்கள் மிகவும் மெல்லியதாகி விட்டது தெரிகின்றது. இரண்டு இரும்புக் கம்பிகள் ஒரு பீடத்தில் நிற்பது போலவும், எலும்புகள் தேய்ந்து போன நோயாளிகளின் கால்களைப் போலவும் தோற்றம் தரும் அளவிற்கு அந்த சிலை பழுது அடைந்துள்ளது.
உடலின் பல பாகங்களில்சிறு சிறு பள்ளங்கள் போன்றவை தோன்றிஉள்ளன. அந்த சிலை சொரசொரப்பான உடல் அமைப்பைக் கொண்டது போல காட்சி அளிக்கின்றது. கூர்மையான பொருள் போலசில பகுதிகளில் எதோ நீட்டிக் கொண்டு உள்ளது .
அந்த சிலையின் கால்கள் பலவீனமாகி விட்டதினால் சிலையின் கனத்தைத் தாங்க முடியாமல் எந்த நேரமும் அந்த சிலையின் கால்கள்உடைந்து விடுமோ என்று கூட ஒரு கால கட்டத்தில் பயந்தார்கள். அந்த நிலை முற்றிக் கொண்டே போகத் துவங்கியதும், பல பக்தர்களும் மக்களும் அந்த சிலையின் உருவத்தை கண்டு அஞ்சி தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்களை அனுப்பினார்கள்.
அதனால் கவலையுற்ற தமிழக அரசும் 1983 -84 ஆம் ஆண்டுகளில் பழனியில் உள்ள அந்த பெருமை வாய்ந்த சிலை மேலும் பழுதாகி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என தீர்மானித்து பல யோசனைகளைப் பரிசோதித்தது.
அந்த சிலையை மாற்றி விடலாமா என்று கூட ஒரு கட்டதில் யோசனை செய்யப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அகம விதிப்படி ஆலயங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டப் பின் அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்தப் பின் முதலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த அதே சிலையை அதுமுன்னர் இருந்த இடத்திலேயே வாய்க்க வேண்டும்.
ஆனால் அதற்குப் பதிலாக பழுதடைந்த சிலையை மாற்றி அதற்குப் பதிலாக அதே மாதிரியான சிலையை செய்துஅதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதானமுன் உதாரணம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகள் எந்த ஆலயத்திலும் நடைபெற்றது இல்லை. கற்பாறைகளில் செய்யப்பட்ட சிலைகளைக் கூட ஆலயங்கள் பழுது பார்க்கப்பட்டபோது தற்காலிகமாக அதேஆலயத்தில் எங்காவது ஒரு பகுதியில் கொண்டு போய் வைத்து இருந்து , ஆலய வேலைகள் முடிந்தப் பின் அதே சிலையை அஷ்டபந்தனங்கள் செய்தப் பின் (வெண்ணையில் சில மூலிகைகளை கலந்துபசைப் போல தயாரித்து அந்த சிலை முழுவதையும் பூசுவதே அந்த நிகழ்ச்சி) முதலில் இருந்த இடத்திலேயே சிலையை கொண்டு போய் வைத்து விட்டு அதை மீண்டும் பிரதிஷ்டை செய்து விடுவார்கள். ஆனால் மூலவர் சிலையையே மாற்றி அமைத்து உள்ளதான சரித்திரமே எந்த ஆலயங்களிலும் கிடையாது.
பழனியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின்வடிவமோ இன்னும் வித்தியாசமானது. மூலவர் சிலை பல மூலிகைகளைக் கொண்டுவிசேஷமான கலவையில் தயாரிக்கப்பட்டுவியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகுணம் கொண்ட சிலையாக வரும்கால சந்ததியினரின் உடல் நலத்தை மனதில் கொண்டு தெய்வாம்சம் கொண்ட'போகரால்'செய்யப்பட்டு உள்ளது. அதை தயாரித்த விதமோ, அல்லது அந்த மூலிகைகளின் கலவையின் அளவோ எவருக்கும் தெரியாது. முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசைப் போல செய்து அதை அந்த சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது வேறு ஒரு மருத்துவக் குணம் கொண்டப் பசையாக மாறி வியாதிகளை தீர்க்கும் முறையில் மாறி விடுவதினால் அந்த சிலை மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோயும் விலகுகின்றன என மக்கள் கருதினார்கள். அதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரம் உள்ளது என ஆலயம் வெளியிட்டு உள்ள புத்தகக் குறிப்பில் காணப்படுகின்றது. ஒரு சாரரின் கருத்துப்படி அந்த சிலையில் உள்ள பொருட்களில் லட்சக்கணக்கான சில கிருமிகள் உள்ளன என்றும், அவற்றில் சில அபிஷேக நீருடன் கலந்து வெளியேறுவதினால் அதைப் பருகும் மக்களின் உடலில் உள்ளதீய அணுக்கள் மடிந்து வியாதிகள் வெளியேறுகின்றன என நம்பினார்கள்.
No comments:
Post a Comment