தமிழர்களே சிந்திப்பீர்! தமிழர் முறை திருமணத்தை ஆதரிப்பீர் !!
வைதீக முறைப்படி நடைபெறும் திருமணத்தில், தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள் என்ன என்று தெரியுமா ?
'மாங்கலயம் தந்துனானே' என தொடங்கும் இம்மந்திரத்தில்,
''சோமஹ ப்ரதமோ விவிதே
கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ
அக்னிஸ்டே பதிதுரியஸ்தே
மனுஷ்ய ஜாஹ''
இந்த வரிகளின் விளக்கம் பின்வருமாறு அமையும்..
''நீ(மணமகள்) முதலில்
சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய்,
பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான்,
பின்பு அக்கினி உன்னை அடைந்தான்.
இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.''
இதுதான் இந்த சமஸ்கிருத மொழியின் பொருள். அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு துணைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு துணைவியாகப் போகிறார்களாம். அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு துணைவியாக இருந்தாள் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.
எனவே திருமணம் செய்ய விரும்புபவர்கள் தமிழ் முறைத் திருமணத்தை தேர்ந்தெடுங்கள் அதுதான் உண்மையானது ஏனையவை எல்லாம் போலியானது.
நன்றி : தோழமையுடன் தமிழ்ச்செல்வன்
No comments:
Post a Comment