Friday, May 31, 2013

தெரிந்து கொள்வோமா-134 [பாம்புக்கடித்தவுடன் கவனிக்க வேண்டியவை...]

பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும ்.


"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..


1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா.. ..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...


2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா.. ..??? கடித்த இடம் சற்றுதடித்து(வீங்கி) காணப்படுகிறதா.. ?? கடுமையான வலி இருக்கிறதா..??? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும். ..


முதலுதவி:-


1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.


2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.


3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது . அவர் பதற்றமடையும்போத ும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.


4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல்முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகி றது


5.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துக ின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம ்.


6.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும ்.


7.பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும ்.


8.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.


பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...


நன்றி : Saran GR.

Saturday, May 25, 2013

நல் வாழ்க்கைக்கு.....

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!!

காத்திடுவோம் நம்மின் பாரம்பரிய அடையாளங்களை.....

தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் !!

"பேசும் சிற்பம்" என்ற தலைப்பைக் கண்டதும் வியப்படைந்துவிடீர்களா..??

உங்கள் வியப்பு நிச்சயம் குறையாது. இந்த சிற்பம் பேசுவது வாய் மொழியால் அல்ல, உடல் மொழியால்.... வாருங்கள் தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனையை காண்போம் !! 

படம் 1 :
18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன. அதை சுற்றி இருக்கும் சிற்ப வேலைபாடுகளை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில் ஒரு சிங்கம், ஒரு பாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும். 

படம் 2 :
சாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது, அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும் 

படம் 3 :
சரி துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள், பாம்பின் வாயில் என்ன ? ஆஹா ஒரு யானை !! பின்புறமாக யானையை விழுங்கும் பாம்பு, யானை எவ்வளவு பெரியது, அதையே விழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் !!!?? அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபாலகரின் காலில் ஒரு அரைஞான் கயிறு போல சிறிதாக தொங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்த துவாரபாலகர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்…?!?!?!?!?!?

இதனால் என்ன தான் கூற வருகிறார்கள் ? இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார், சற்று அமைதியாக செல்லுங்கள் ! என்பதை வாயிலில் நிற்கும் இந்த சிற்பத்தில் எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள். 

வாய் பேசாத அந்த சிற்பம், தன் கையால் பேசிக் கொண்டிருப்பதையும் சற்று கவனியுங்கள்…

(இ-1) : இடது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருக்கும் கடவுளை நோக்கி காட்டிக்கொண்டு இருக்கின்றது. 

(இ-2) : அதற்கு கீழே இருக்கும் கை நின்றுகொண்டிருக்கும் தான் எவ்வளவு பெரியவன் என்பதை அந்த பாம்பை பார்த்து தெரிந்து கொள்ள சொல்கின்றது 

(வ-1) : வலது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருப்பவர் எப்பேர் பட்டவர் என்பதை கையை மடித்து எவ்வளவு அழகாக பூரிப்புடன் காட்டிக் கொண்டு இருக்கிறது. 

(வ-2) : கீழே இருக்கும் கை எச்சரிப்பதை காட்டுகிறது. 

நான் சொல்வதை எல்லாம் மறந்து விட்டு இப்போது நீங்களே இந்த நான்கையும் ஒப்பிட்டு சற்று கற்பனை உலகிற்கு செல்லுங்கள், வார்த்தைகள் ஊமையாகி, அந்த சிற்பியை காதலிக்க துவங்கி விடுவீர்கள், தமிழர்களின் ஆற்றலை உணர்வீர்கள். 

இது ஒன்று தானா..?? இல்லவே இல்லை.... இது போன்று எத்தனையோ கோயில்களில், எத்தனையோ சிற்பங்கள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன, அவைகள் ஒவ்வொன்றும் எதையோ ஒன்றை குறிப்பால் உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோமா..?? இல்லை மாறாக அழிக்கிறோம் !!! அடுத்த முறை கோயில்களுக்கு செல்லும் போது, இது போன்ற சிற்பங்களின் மீது விபூதிகொட்டுவது, அதன் மீது சாய்வது, அவற்றின் மீது பெயர்களை பதிப்பது, அதை சேதப் படுத்துவது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.!!

அழிவிலிருந்து காப்பாற்றுவோம் நம் கலைப் பொக்கிஷங்களை.!!!

அதிசயம் —

Tuesday, May 14, 2013

தெரிந்து கொள்வோமா-133 [தமிழக மண்டல போக்குவரத்து அலுவலக குறியீட்டு எண்...]

TAMIL NADU R.T.O. REGISTRATION NUMBER DETAILS
1 TN01 - CHENNAI(CENTRAL )
2 TN02 - CHENNAI(NORTH-W EST)
3 TN03 - CHENNAI(NORTH-E AST)
4 TN04 - CHENNAI(EAST)
5 TN05 - CHENNAI(NORTH)
6 TN06 - CHENNAI(SOUTH-E AST)
8 TN09 - CHENNAI(WEST)
9 TN10 - CHENNAI(SOUTH-W EST)
10 TN11 - RTO TAMBARAM
11 TN11Z - SOLLINGANALLUR
12 TN16 - RTO, TINDIVANAM
13 TN18 - REDHILLS
14 TN18Z - AMBATTUR
15 TN19 - CHENGALPATTU
16 TN19Z - MADURANTAKAM
17 TN20 - TIRUVALLUR
18 TN20Y - POONAMALLE
19 TN21 - KANCHEEPURAM
20 TN21W - SRIPERUMBUDUR
21 TN22 - MEENAMBAKKAM
22 TN23 - VELLORE
23 TN23T - GUDIYATHAM
24 TN23Y - VANIYAMBADI
25 TN24 - KRISHNAGIRI
26 TN25 - TIRUVANNAMALAI
27 TN25Z - ARANI
28 TN28 - NAMAKKAL
29 TN28Y - PARAMATHIVELLOR E
30 TN28Z - RASIPURAM
31 TN29 - DHARMAPURI
32 TN29W - PALACODE
33 TN29Z - HARUR
34 TN30 - SALEM(WEST)
35 TN30W - OMALUR
36 TN31 - CUDDALORE
37 TN31U - CHIDAMBARAM
38 TN31V - VIRUDHACHALAM
39 TN31Y - NEYVELI
40 TN32 - VILLUPURAM
41 TN32W - KALLAKURICHI
42 TN32Z - ULUNDURPET
43 TN33 - ERODE
44 TN34 - TIRUCHENCODE
45 TN36 - GOBICHETTIPALAY AM
46 TN36W - BHAVANI
47 TN36Z - SATHIYAMANGALAM
48 TN37 - COIMBATORE(SOUT H)
49 TN38 - COIMBATORE(NORT H) -
50 TN39 - TIRUPPUR(NORTH)
51 TN39Z - AVINASHI
52 TN40 - METTUPALAYAM
53 TN41 - POLLACHI
54 TN42 - TIRUPUR(SOUTH)
55 TN42Y - KANGAYAM
56 TN43 - OOTY
57 TN43Z - GUDALUR
58 TN45 - TRICHIRAPPALLI
59 TN45Y - THIRUVERUMBUR
60 TN45Z - MANAPPARAI
61 TN46 - PERAMBALUR
62 TN47 - KARUR
63 TN47Z - KULITHALAI
64 TN48 - SRIRANGAM
65 TN48Z - THURAIYUR
66 TN49 - THANJAVUR
67 TN49Y - PATTUKOTTAI
68 TN50 - THIRUVARUR
69 TN50Z - MANNARGUDI
70 TN51 - NAGAPATTINAM
71 TN51Z - MAYILADURAI
72 TN52 - SANGARI
73 TN52Z - METTUR
74 TN54 - SALEM(EAST)
75 TN55 - PUDUKOTTAI
76 TN55Z - ARANTHANGI
77 TN56 - PERUNDURAI
78 TN57 - DINDIGUL
79 TN57R - OTTANCHATRAM
80 TN57V - VADASANDUR
81 TN57Y - BATALAGUNDU
82 TN57Z - PALANI
83 TN58 - MADURAI(SOUTH)
84 TN58Z - THIRUMANGALAM
85 TN59 - MADURAI(NORTH)
86 TN59V - VADIPATTI
87 TN59Z - MELUR
88 TN60 - THENI
89 TN60Z - UTHAMAPALAYAM
90 TN61 - ARIYALUR
91 TN63 - SIVAGANGA
92 TN63Z - KARAIKUDI
93 TN64 - MADURAI(South)
94 TN65 - RAMANATHPURAM
95 TN65Z - PARAMAKUDI
96 TN66 - COIMBATORE(CENT RAL)
97 TN67 - VIRUDHUNAGAR
98 TN67U - SIVAKASI
99 TN67Z - SRIVILIPUTHUR
100 TN68 - KUMBAKONAM
101 TN69 - TUTICORIN
102 TN69Y - TIRUCHENDUR
103 TN69Z - KOVILPATTI
104 TN70 - HOSUR
105 TN72 - TIRUNELVELI
106 TN72V - VALLIOOR
107 TN73 - RANIPET
108 TN73Z - ARAKONAM
109 TN74 - NAGERCOIL
110 TN75 - MARTHANDAM
111 TN76 - TENKASI
112 TN76V - AMBASAMUTHIRAM
113 TN76Z - SANKARANKOIL
114 TN77 - ATTUR
115 TN77Z - VALAPADI
116 TN78 - DHARAPURAM
117 TN78Z - UDUMALPET

Monday, May 13, 2013

தெரிந்து கொள்வோமா-132 [எனது அஞ்சல் தலை’ திட்டம் தமிழகத்திற்கும் வந்தாச்சு]


எனது அஞ்சல் தலை’ திட்டம் தமிழகத்திற்கும் வந்தாச்சு

தமிழகத்தில் இந்திய தபால்துறையின் எனது அஞ்சல் தலை திட்டத்தின் தொடக்க விழா முதல் முறையாக சென்னை அண்ணாசாலையில் உள்ள சிறப்பு தபால் தலை சேகரிப்பு மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை வாங்கி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எழுதி அனுப்பும் கடிதங்களில் ஒட்டி அனுப்பலாம்.அல்ல்து தபால் தலைகளை வாங்கி வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்திய தபால்துறை சார்பில், கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற தபால் தலை கண்காட்சியில் எனது அஞ்சல் தலை திட்டம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்திரபிரதேசம், மும்பை உள்பட வட மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
4 m - my stmp1
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை வாங்கி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எழுதி அனுப்பும் கடிதங்களில் ஒட்டி அனுப்பலாம். தபால் தலைகளை வாங்கி வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். இதுவரை மறைந்த தலைவர்களின் புகைப்படங்கள் மட்டுமே தபால் தலைகளாக வெளிவந்த நிலையில், உயிருடன் இருக்கும் சாதாரண மக்களின் புகைப்படங்களையும் தபால் தலைகளாக அச்சிடுவது இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்கவிழா, சென்னை அண்ணாசாலையில் உள்ள சிறப்பு தபால் தலை சேகரிப்பு மையத்தில் நடைபெற்றது. விழாவில் முதல் அஞ்சல் தலையை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீ மெர்வின் அலெக்ஸாண்டர் வெளியிட மத்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் ஜெ.சதக்கத்துல்லா பெற்றுக் கொண்டார். இதில் தபால் துறை இயக்குனர் ஜெ.டி.வெங்கடேஸ்வரலு, முதன்மை தலைமை தபால் அதிகாரி எம்.பூர்ணசந்திர ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எனது அஞ்சல் தலை திட்டம் குறித்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீ மெர்வின் அலெக்ஸாண்டர்,”எனது அஞ்சல் தலை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலுடன், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறப்பு தபால்தலை சேகரிப்பு மையங்களில் விண்ணப்பிக்கலாம். சென்னையில் இருந்து வாடிக்கையாளர்களின் புகைப்படம் ஒட்டிய தபால் தலைகள் தயாரிக்கப்பட்டு அவர்களது சொந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 7 நாட்களுக்குள்ளும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள்ளும் தபால் தலை அனுப்பி வைக்கப்படும். இதில் ரூ.300-க்கு 12 அஞ்சல் தலைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து, பின்னர் இதற்கான விண்ணப்பங்களை தலைமை தபால் நிலையங்களில் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது பூக்களால் ஆன தபால் தலைகள் மட்டுமே உள்ளன. விரைவில் பாரம்பரியம்மிக்க கட்டிடங்கள், பிரபல சுற்றுலா தலங்கள், மற்றும் விலங்குகளின் படங்களும் எனது அஞ்சல் தலைகளில் இடம் பெறும்.”என்று அவர் கூறினார்.
சாம்பிளுக்கு நம் அண்டை மாநிலமான கேரளாவில் எடுக்கப் பட்ட ‘என் அஞ்சல்’ விடீயோ உங்களுக்காக்:
My Stamp Scheme introduced by India Post in Tamilnadu!
*********************************************************
The “My Stamp” scheme in Mumbai lets you have your photograph printed on five rupee (10 U.S. cent) stamps. The minimum order a customer can place is for one sheet of 12 stamps.
நன்றி-ஆந்தை ரிப்போர்ட்டர்...

புது வகையில் இளநீர் சீவுகிறார்....



தெரிந்து கொள்வோமா-131 [இஸ்திரி தேவைப்படாத சட்டை...]

100 நாட்கள் துவைக்காமல் அயர்ன் பண்ணாமல் போடக் கூடிய சட்டை! -வீடியோ இணைப்பு
####################################

அமெரிக்க நிறுவனமொன்று 100 நாட்களுக்கு மேல் துவைக்காமலும் அயர்ன் செய்யாமலும் பயன்படுத்தக் கூடிய சட்டையை தயாரித்துள்ளது. 

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேல் இந்த சட்டையை அணிந்திருந்தாலும் இது கொஞ்சமும் அழுக்கடையாமல் அதே பளிச்-சில் இருக்கும் என வூல் அன்ட் பிரின்ஸ் எனும் சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறுகிறது. 

அதாவது சுருங்காத தன்மையுடைய நூலினால் இந்த ச்ட்டை தயாரிக்கப்பட்டுள்ளதால் அதை நீண்ட நாட்கள் அயர்ன் செய்யத் தேவையே இல்லையாம்.

கடினமான உடற்பயிற்சிக்குப் பிறகு கூட இந்தச் சட்டை தூய்மையாக,அதே நறுமணத்தோடு இருக்குமாம்.


மேலும் விரிவான செய்தி + விடீயோவுக்கு:

தெரிந்து கொள்வோமா-130 [விலங்குகளைப்பற்றிய 20 சங்கதிகள்...]

20 amazing facts about animals

A goldfish has a memory span of about 3 seconds.


A star fish has no heart.


Dolphins sleep with one eye open.


Alligators can't move backwards.


Penguins can jump 6 feet into the air.


Hippos milk is pink


A jellyfish is made up of 95% water.


You are more likely to get stung by a bee on a windy day than any other weather.


There are more plastic flamingoes in America than real ones.


The spotted skunk does a handstand before he sprays you.


Some ribbon worms will eat themselves if they can't find any food.


Slugs have 4 noses.


Owls are one of the only birds that can see the colour blue.


Starfish is one of the few animals who can turn their stomach inside out.


Bats always turn left when exiting a cave.


The praying mantis is the only insect that can turn it's head.


In Tokyo, they sell toupees for dogs.


On average, people fear spiders more than they do death.


A snail can sleep for three years.


A giraffe can clean it's ears with it's 21" tongue.

தெரிந்து கொள்வோமா-129 [ATM அட்டைகள்...]

PUBLIC SERVICE ANNOUNCEMENT! Please share this with your friends, family, and loved ones.

People are using these fake keypads in different countries since 2011 up to this day. Crooks are now more technologically advanced and use a Card Skimmer - An illegal electronic device that can capture all of the personal information (Name, Expiration date, 3 digit verification pin, etc.) from a credit/debit card and ATM card. Only a few people are aware of this so always double-check. Here are the other signs to know if it's fake:

1) The red, yellow and green bars or lines/buttons on the right-side are usually longer than the regular ones (cancel, clear, and accept).
2) There are usually no marks on the left and right of the Zero (0) button.
3) Try to raise the ATM Keypad - MAJOR sign that it's fake.

See photo for further details and comparison.

If you encounter this, immediately report it to your bank to avoid further scamming.

குழந்தைத் தொழிலாளி....

Chotu CEO
There is a Chotu CEO around each of us. The thing is we just ignore it.
Watch this video so that you can not ignore it next time.
One of the best documentary on Child Labor



தெரிந்து கொள்வோமா-128 [உ.பா.க்களின் பிறப்பிடம்...]

தெரிந்து கொள்வோமா-127 [இயற்கை பாலங்கள்...]

Nature's Marvel: Living Root bridges of Cherrapunji.


On listening to the word ‘bridge’, we all form an image of a well structured iron bridge in our minds. But ever heard of natural bridges? Well here’s an interesting example of a natural living bridge.


Cherrapunji, a town in North-East India, which is known to be the second wettest place on earth, is also known for its living bridges. Here the bridges aren't built but grown. The living bridges are made from the roots of Ficus elastica tree whose secondary roots grow above the ground surface. 

Long ago, War-Khasis, a tribe of Meghalaya, used this tree to cross rivers. Using the same technique, villagers of Cherrapunji grow their own bridges whenever required. The villagers have created a root-guiding system that forces the tender roots of the rubber tree to grow straight. Such roots make a strong, living bridge in about 10-15 years.


Unlike the conventional man-made bridges which grow weak over time, these living bridges gain strength over time. Some of these bridges are more than five hundred (500) years old and can support 50 people at a time. A unique bridge called Umshiang Double-Decker Root Bridge is believed to be only one of its kinds in the whole world. It is actually a combination of two bridges, one stacked on top of the other.

எதிரிகளை குழப்பிட கடைப்பிடிக்கப்பட்ட இராஜ தந்திரம்...

Taj Mahal was covered with a huge scaffold during WW2 to make it look like a stockpile of Bamboo and misguide any enemy bombers. (It was also disguised again in 1971!)

தெரிந்து கொள்வோமா-126 [லெமூரியா கண்டம்...]

The Lost world of Kumari Kandam

We already know about many legendary cities that today’s world has lost in time. Some of those were the city of Atlantis, and the city of Dwaraka that is mentioned in Mahabharata. But out of all these, there existed one huge land mass to the south of today’s Indian peninsula extending from Kanyakumari in the north, and its sides touching as far to the west as Madagascar and as far to the east as Australia. This huge continent of the Tamil people was called Kumari Kandam or the Lemuria continent that was swallowed by the seas, and eventually lost forever.Hundreds of thousand years ago, continents started drifting, and different continents were formed. And after a much long time, the earliest human beings were born on the earth about 400,000 years ago.

During the end of the last Ice age, earth’s temperature started rising, large icy masses and glaciers started melting, and thus sea levels started rising. During this period, 12000 years ago, India’s Dravidian peninsula was swallowed by the ever rising seas. Various oceanographic researches have shown that the sea level in the Indian peninsula has risen by 100 meters within the past 14,500 years. There had been three major episodes of sea level fluctuations resulting in the submergence of the Kumari continent which existed to the south of Kanya Kumari (About 14,500 years ago, Sri Lanka was connected with Peninsular India!)The area had been ruled by the Pandya kings, and there are lots of scattered literary evidences to this lost land of the Tamils.

As per Adiyarkunallar, a huge landmass extending from Kanyakumari to a distance of 700 kavatams (unknown, obsolete unit) got sunken in the sea. During this civilization, Kumari Kandam land was divided into 49 territories (nadu). It had mountain ranges, and also had two main rivers- Pahruli and Kumari.

The earliest civilization that we know of today is the Sumerian civilization established in Mesopotamia (today’s Iraq) around 4000 BC. After this were the Egyptian civilization and then the Indus valley civilization But the Tamil civilization around Kumari Kandam had been much earlier than this, which would put it to the first in the time scale of civilization of mankind. What is even more interesting is that, many world-renowned researchers also claim to have deciphered the Indus script to be Tamil! As per Nakkirar’s Iraiyanaar Akaporul the three Tamil Sangams (Academies of Tamil poets) functioned for 9990 odd years!

However, very sadly, all that is extant today is the Tamil literature works from the third Sangam. Everything else is lost in the sea, and in time; the people of the civilization were swallowed by the seas. It’s a tragedy of a huge magnitude. The quality of life of the ancient Tamils in Kumari Kandam should have been extraordinarily sublime. Thus naming of India as subcontinent turned out to have a greater meaning . Within a few years , travel to submerged parts of “Kumari kandam” or “Lumeria” should be possible , scientists hope.

By: Vivek Ravin
Keep Sharing...#Tamilanda

உலகின் விந்தை செய்திகளில் சில...







உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத இரகசியத்தை கொண்டுள்ளது.

பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் இரகசியத்திற்கு இன்னும் விடைகிடைக்கவே இல்லை. 

பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான"கிஸா" பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. 

ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; 

ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது. 

இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால் பிரமாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் பலமைல் சுற்றளவிற்கு எந்த ஒரு பெரியபள்ளமும் இல்லை.

இதைப் போலவே 1947 -க்கும் 1956-க்கும்இடைபட்ட காலத்தில் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் உள்ள கும்ராம் மலைக்குகையில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 900 ஆவணங்கள் கிடைத்தன.

மெல்லிய செப்பு தகடுகளில் எழுதப்பட்ட இவை சாக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட இந்த சுருள்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகசியம்.

தங்கப்புதையலுக்கான தகவல்கள். புதையல் கரிசிம் மலையில் இருக்கிறது என்கிறது ஒரு சுருள். 

ஆனால் கரிசிம் மலை எது என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத வினா.

இலக்கியமும், சினிமா பாடல்களும், வரலாறும் அலசி காயப்போட்ட பாபிலோனின் தொங்கும் தோட்டம் எங்கே இருக்கிறது? 
என்பதே ஒரு ரகசியம்தான். 

கி.மு. 4 00- ல் பெரோசஸ் என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார். 

பாக்தாத்துக்கு பக்கத்தில் கி.மு.6 00-ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து.

சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75அடி அகல சுவரை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கையாக தெரிவிக்கிறார்கள்.

உலகில் உள்ள மலைகளிலேயே மிகவும் பணக்கார மலை எதுவென்றால் அது ஆல்ப்ஸ் மலைதான். 

காரணம் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளுக்கு பயந்து, தான் வைத்திருந்த பிளாட்டினம், தங்கம், வெள்ளி முதலியவற்றை அள்ளி ஆல்ப்ஸ் மலையில் ஒளித்து வைத்திருப்பதாக நம்பி மலையெங்கும் அலைந்து திரிந்தது அமெரிக்கப்படை. 

கடைசியாக ஒரு புதையலை கண்டுபிடித்தது. அதுவே பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானம் கொண்டது. 

அன்றிலிருந்து மக்கள் கூட்டம் எப்போதும் ஆல்ப்ஸ் மலையில் புதையல் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.

இயேசு கிறிஸ்து இறுதியாக திராட்சை ரசம் குடித்த கோப்பை ஒன்று ஐஸ்லாந்தில் இருப்பதாக கூறுகிறார்கள். திஹோலி கிரெயில் என்று அழைக்கப்படும் இந்த கோப்பை பூமிக்கு அடியில் 15 அடி ஆழத்தில் ஒரு இரகசிய அறையில் இருப்பதாக கதைகள் உலவுகின்றன. 

கோப்பை இருக்கிறதா? இல்லையா? என்று மக்கள் கூட்டம் ஐஸ்லாந்து பகுதியில் பூமியை தோண்டிக்கொண்டே இருக்கிறது. 

இப்படி விடை கிடைக்காத இரகசியங்கள்,அதிசயங்கள் பூமியில் நிறைய இருக்கின்றன.

பி.கு.:-
இதற்கே இப்படினா, நம்ம தமிழ் வரலாற்றைத் தோண்டினா??????????

தெரிந்து கொள்வோமா-125 [பழனியாண்டவர் எனப்படும் முருகப்பெருமான்...]


பழனி ஆண்டவர் சிலையை விஞ்ஞான சோதனை செய்தவரின் கருத்து:

இந்து ஆலயங்களில் உள்ள தெய்வங்களின் சிலைகளை கருங்கல் பாறைகளில் செய்வார்கள். அதற்குக் காரணம் அவற்றில் இயற்கையாக அமைந்து உள்ள அதி இழுவிசை சக்தியே. 

மேலும் கருங்கல் பாறைகள் பெரும் பலம் மிக்கவை . அது மட்டும் அல்லாமல் இயற்கை உருவாக்கி உள்ள பஞ்ச பூத சக்திகளான தண்ணீர், காற்று, நெருப்புமற்றும் ஈதர் போன்ற அனைத்துப் பொருட்களும் அதற்குள் உள்ளன.

ஆனால் அப்படி இல்லாமல் பழனி ஆலயத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது.

சமஸ்கிருதத்தில்'நவ'என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.'நவ'என்றால்'புதியது'அல்லது'ஒன்பது'என்ற அர்த்தங்கள் உள்ளன. 

அது போலவே'பாஷணம்'என்றால்'விஷம்'அல்லது'தாதுப் பொருட்கள்'என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 

பழங்காலத்திய இலக்கியங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நவபாஷண சிலையை செய்தவர் சித்த முனிவரான'போகர்'என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள். 

அங்குள்ள மூலவரின் சிலை நவபாஷணங்களினால் செய்யப்பட்டு உள்ளது. அதை மிகவும் நுண்ணியமாக ஒன்பது விஷப் பொருட்களின் கலவையினால் செய்து உள்ளார். 

அந்த ஒன்பது நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களும் ஒன்றாகியபோது உடைக்க இயலாத பலம் மிக்க பொருளாக மாறியதும்அல்லாமல் பல வியாதிகளை குணப்படுத்தும் ஒருவித மருத்துவத் தன்மைக் கொண்ட பொருளாகவும் மாறி இருந்தது. 

அதற்குப் பின்னரே அந்தக் கலவையில் செய்த பொருளில் மூலவருடைய சிலை செய்யப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமித்து இருப்பதில் இருந்தே சித்த முனிவரான போகர் ரசவாதகலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமல்ல , தொலைதூர கண்ணோட்டத்துடன் பின்னர் வர உள்ள காலத்து முருக பக்தர்களின் உடல் நலனில் பெருமளவு அக்கறை கொண்டு இருந்தவர் என்றும், அவர் மிக உயர்வான தெய்வீக நிலையில் இருந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

அந்த சிலையின் அருகில் சென்று உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு கழுத்துக்கு கீழே உள்ள பாகங்கள் தக்க விகிதாசாரத்தில் தற்போது இல்லை என்பது தெரியவரும். பக்தர்கள் உபயோகித்து இருந்த சில அபிஷேகப் பொருட்களினால் அந்த சிலையின் கைகளும் கால்களும் மிகவும் சேதம் அடைந்து உள்ளன

தொடைப் பகுதியில் முட்டிக்கு கீழே உள்ள கால்கள் மிகவும் மெல்லியதாகி விட்டது தெரிகின்றது. இரண்டு இரும்புக் கம்பிகள் ஒரு பீடத்தில் நிற்பது போலவும், எலும்புகள் தேய்ந்து போன நோயாளிகளின் கால்களைப் போலவும் தோற்றம் தரும் அளவிற்கு அந்த சிலை பழுது அடைந்துள்ளது. 

உடலின் பல பாகங்களில்சிறு சிறு பள்ளங்கள் போன்றவை தோன்றிஉள்ளன. அந்த சிலை சொரசொரப்பான உடல் அமைப்பைக் கொண்டது போல காட்சி அளிக்கின்றது. கூர்மையான பொருள் போலசில பகுதிகளில் எதோ நீட்டிக் கொண்டு உள்ளது . 
அந்த சிலையின் கால்கள் பலவீனமாகி விட்டதினால் சிலையின் கனத்தைத் தாங்க முடியாமல் எந்த நேரமும் அந்த சிலையின் கால்கள்உடைந்து விடுமோ என்று கூட ஒரு கால கட்டத்தில் பயந்தார்கள். அந்த நிலை முற்றிக் கொண்டே போகத் துவங்கியதும், பல பக்தர்களும் மக்களும் அந்த சிலையின் உருவத்தை கண்டு அஞ்சி தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்களை அனுப்பினார்கள். 

அதனால் கவலையுற்ற தமிழக அரசும் 1983 -84 ஆம் ஆண்டுகளில் பழனியில் உள்ள அந்த பெருமை வாய்ந்த சிலை மேலும் பழுதாகி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என தீர்மானித்து பல யோசனைகளைப் பரிசோதித்தது.

அந்த சிலையை மாற்றி விடலாமா என்று கூட ஒரு கட்டதில் யோசனை செய்யப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அகம விதிப்படி ஆலயங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டப் பின் அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்தப் பின் முதலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த அதே சிலையை அதுமுன்னர் இருந்த இடத்திலேயே வாய்க்க வேண்டும்.
ஆனால் அதற்குப் பதிலாக பழுதடைந்த சிலையை மாற்றி அதற்குப் பதிலாக அதே மாதிரியான சிலையை செய்துஅதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதானமுன் உதாரணம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகள் எந்த ஆலயத்திலும் நடைபெற்றது இல்லை. கற்பாறைகளில் செய்யப்பட்ட சிலைகளைக் கூட ஆலயங்கள் பழுது பார்க்கப்பட்டபோது தற்காலிகமாக அதேஆலயத்தில் எங்காவது ஒரு பகுதியில் கொண்டு போய் வைத்து இருந்து , ஆலய வேலைகள் முடிந்தப் பின் அதே சிலையை அஷ்டபந்தனங்கள் செய்தப் பின் (வெண்ணையில் சில மூலிகைகளை கலந்துபசைப் போல தயாரித்து அந்த சிலை முழுவதையும் பூசுவதே அந்த நிகழ்ச்சி) முதலில் இருந்த இடத்திலேயே சிலையை கொண்டு போய் வைத்து விட்டு அதை மீண்டும் பிரதிஷ்டை செய்து விடுவார்கள். ஆனால் மூலவர் சிலையையே மாற்றி அமைத்து உள்ளதான சரித்திரமே எந்த ஆலயங்களிலும் கிடையாது. 

பழனியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின்வடிவமோ இன்னும் வித்தியாசமானது. மூலவர் சிலை பல மூலிகைகளைக் கொண்டுவிசேஷமான கலவையில் தயாரிக்கப்பட்டுவியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகுணம் கொண்ட சிலையாக வரும்கால சந்ததியினரின் உடல் நலத்தை மனதில் கொண்டு தெய்வாம்சம் கொண்ட'போகரால்'செய்யப்பட்டு உள்ளது. அதை தயாரித்த விதமோ, அல்லது அந்த மூலிகைகளின் கலவையின் அளவோ எவருக்கும் தெரியாது. முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசைப் போல செய்து அதை அந்த சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது வேறு ஒரு மருத்துவக் குணம் கொண்டப் பசையாக மாறி வியாதிகளை தீர்க்கும் முறையில் மாறி விடுவதினால் அந்த சிலை மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோயும் விலகுகின்றன என மக்கள் கருதினார்கள். அதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரம் உள்ளது என ஆலயம் வெளியிட்டு உள்ள புத்தகக் குறிப்பில் காணப்படுகின்றது. ஒரு சாரரின் கருத்துப்படி அந்த சிலையில் உள்ள பொருட்களில் லட்சக்கணக்கான சில கிருமிகள் உள்ளன என்றும், அவற்றில் சில அபிஷேக நீருடன் கலந்து வெளியேறுவதினால் அதைப் பருகும் மக்களின் உடலில் உள்ளதீய அணுக்கள் மடிந்து வியாதிகள் வெளியேறுகின்றன என நம்பினார்கள்.

Friday, May 10, 2013

தெரிந்து கொள்வோமா-124 [திருப்பதி...]




பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.






பி.கு.

நெருப்பில் உருக்கப்படும் நெய் போன்று பெருநன்மை இருப்பின் இவ்வளவு செலவு செய்வது நியாயமே...

தெரிந்து கொள்வோமா-123 [தேங்காய் எண்ணையில் சுத்தமான கலப்படம்]

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே...

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது .. கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..
johnson baby oil, amla hair oil,
clinic plus, ervamartin hair oil, etc..
பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
1.தோல் வறண்டு போகும்
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்
2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
3.அரிப்பு வரும் ..
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை .

Wednesday, May 8, 2013

தெரிந்து கொள்வோமா-122 [நாம் மறந்து போன பழைய சாதம்/கஞ்சி]

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது:
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு.

மரங்களைக் காப்போம்...

தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..

SHARE & Like the page here-->> World Wide Tamil People

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,

மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,

ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........,

அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,

மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

புதுச்சேரி, மின் துறையில் நவீனத்துவம்...

நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக, "ஸ்மார்ட் கிரீட்' திட்டம், புதுச்சேரியில் அறிமுகம்.
******************************************

அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை, கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கும், "ஸ்மார்ட் கிரீட்' திட்டம், புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய பவர் கிரீட் கார்ப்பரேஷன் சார்பில், நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக, "ஸ்மார்ட் கிரீட்' திட்டம், புதுச்சேரியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, இந்திய பவர் கிரீட் கார்ப்பரேஷன்-புதுச்சேரி அரசின் மின் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

"ஸ்மார்ட் கிரீட்' திட்டத்தின் கீழ், புதுச்சேரி நகரத்தில் உள்ள 87 ஆயிரம் வீடுகளிலும் "ஸ்மார்ட் மீட்டர்' எனப்படும், அதிநவீன மின்சார மீட்டர்களை பொருத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, சாரம் பகுதியில் 400 வீடுகளில், "ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்பட்டு விட்டது. படிப்படியாக, நகரம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் "ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்படும்.

அனைத்து மின் நுகர்வோர்களும், ஒரே நேரத்தில், அளவுக்கு அதிகமான மின்சாரத்தை பயன்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட பகுதியின் டிரான்ஸ்பார்மர்கள் "லோடு' தாங்க முடியாமல் சூடாகி, வெடித்து பழுதடைந்து விடுகின்றன.
உதாரணமாக, தற்போது கோடைக்காலம் என்பதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் அனைவரும் ஒரே நேரத்தில் "ஏசி' போடுகின்றனர். இதனால், மின்சார பயன்பாடு கிடுகிடுவென உயர்ந்து, பல ஆயிரம் யூனிட் மின்சாரம் தாறுமாறாக உறிஞ்சப்படுகிறது.

பிறக்குது விடிவுகாலம்

டிரான்ஸ்பார்மர் சூடாவதை தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட பகுதியில், அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என, மின் வினியோகத்தை மின்துறையினர் துண்டிக்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கு தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுகின்றன.
இந்த பிரச்னைக்கு, அனைத்து வீடுகளிலும் "ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்படும்போது, எளிதாக தீர்வு காண முடியும்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு, "ஓவர் லோடு' ஆக எடுக்கப்படும் மின்சாரத்தை மட்டும் துண்டித்துவிட முடியும். ஒட்டுமொத்தமாக, சம்பந்தப்பட்ட பகுதிக்கே மின் வினியோகத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மின் திருட்டுக்கு "செக்'

ஒவ்வொரு வீட்டுக்கும் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது, சிங்கிள் பேஸ், டபுள் பேஸ், ட்ரிபிள் பேஸ் உள்ளிட்ட எந்த வகையான இணைப்பு பெற்றுள்ளனர், அனுமதிக்கப்பட்ட அளவு மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துகின்றார்களா என்பதையும் கட்டுப்பாட்டு அறையின் கம்ப்யூட்டர் உதவியுடன் எளிதாக கண்காணிக்க முடியும்.
அளவுக்கு அதிகமான மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தினால், உடனே கண்டுபிடித்து, மின் இணைப்பை துண்டிக்க முடியும். மேலும், மீட்டரை நிறுத்திவிட்டு, மின்சாரத்தை திருடி பயன்படுத்தினாலும், உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு கடைசி தேதி முடிந்த, அடுத்த நிமிடமே, ஸ்மார்ட் மீட்டரில் இருந்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறந்து விடும். உடனடியாக, கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே, சம்பந்தப்பட்ட வீட்டுக்கான மின்சார இணைப்பை துண்டிக்க முடியும்.
மின்துறை ஊழியர்கள், சம்பந்தப்பட்ட வீட்டை தேடி சென்று, பியூசை பிடுங்கி, ஒயரை துண்டித்து, மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது.

நன்றி-dinamalar

Monday, May 6, 2013

தெரிந்து கொள்வோமா-121 [இந்தியா தோன்றிய வரலாறு]

ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா? 
வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.

மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா, கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர், கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.

13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவிலிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வரலாறு என்ன? சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன. இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொகலாயர்கள் தான்!

மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண்டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில்தான். முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் ‘இந்து’ என்று கூறியதும், ‘இந்து’ என்ற பெயர் வழக்கில் வந்ததும், அக்காலத்தில் தான். சமஸ்கிருத சுலோகங்களையும், வேதங்களையும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான்.

அப்போதும் தமிழ்நாடு மொகலாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை. அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 01.12.1600. இந்திய அரசர்களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.

வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார்களா? இந்தக் கம்பெனி வெறும் கையுடன் வந்துவிடவில்லை. தனக்காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள். பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந்தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகிவிட்டது.

ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12 ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தியாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். வெற்றிகளைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார். அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா.

ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.
அப்போது இலங்கை ஒரு மாவட்டமாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர்வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ்தானும் பங்களாதேசும் அன்றைய ‘இந்தியா’ தான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை. ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித்தனிப் பகுதிகளாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’.

நன்றி- விடுதலை இராசேந்திரன்

துபையில் ஓர் கண் கொள்ளா காட்சி...

Dubai Aquarium. One of the largest tanks in the world !!!

A key centerpiece of Dubai Mall (the largest mall in the world) Dubai Aquarium, one of the of the largest tanks in the world at 51m x 20m x 11m and featuring the world’s largest viewing panel at 32.8m wide and 8.3m high. Over time, Dubai Aquarium will have more than 33,000 living animals, representing more than 85 species including over 400 sharks and rays combined. Dubai Aquarium’s 270-degree glass walk through tunnel makes for incredible close-encounter experiences.

# படித்ததில் பிடித்தது #



மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.

மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.

“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த
களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்

“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல
தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.

“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது
அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்
என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.

இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த
ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால்
இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி
விட்டு சென்றார்.

"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"

தெரிந்து கொள்வோமா-120 [உலா சேவையில் நிலுவையை அறிந்து கொள்ள...]

Sunday, May 5, 2013

தெரிந்து கொள்வோமா-119 [திருமணத்தின் போது கூறப்படும் சமஸ்கிரத மந்திரத்தின் பொருள்]

தமிழர்களே சிந்திப்பீர்! தமிழர் முறை திருமணத்தை ஆதரிப்பீர் !! 

வைதீக முறைப்படி நடைபெறும் திருமணத்தில், தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள் என்ன என்று தெரியுமா ?

'மாங்கலயம் தந்துனானே' என தொடங்கும் இம்மந்திரத்தில்,
''சோமஹ ப்ரதமோ விவிதே 
கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ 
அக்னிஸ்டே பதிதுரியஸ்தே 
மனுஷ்ய ஜாஹ''

இந்த வரிகளின் விளக்கம் பின்வருமாறு அமையும்.. 

''நீ(மணமகள்) முதலில் 
சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய்,
பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், 
பின்பு அக்கினி உன்னை அடைந்தான். 
இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.'' 

இதுதான் இந்த சமஸ்கிருத மொழியின் பொருள். அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு துணைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு துணைவியாகப் போகிறார்களாம். அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு துணைவியாக இருந்தாள் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

எனவே திருமணம் செய்ய விரும்புபவர்கள் தமிழ் முறைத் திருமணத்தை தேர்ந்தெடுங்கள் அதுதான் உண்மையானது ஏனையவை எல்லாம் போலியானது.

நன்றி : தோழமையுடன் தமிழ்ச்செல்வன்

தெரிந்து கொள்வோமா-118 [உலகின் மிகச்சிறிய தீவு]

We all know the largest island in the world is greenland but the smallest island in the world - according to the guinness book of record - is Bishop Rock.It lies at the most south-westerly part of the UK.It is one of 1040  islands around Britain and only has lighthouse on it.In 1861,the British goverment set out the parameters for classifying an island.It was decided that it was inhabited,the size was immaterial.

மின்னலை 200 மீட்டர் தூரத்தில் படம் பிடித்த அற்புதக் காட்சி...



புகைப்படங்கள்...

சிப்பிக்குள் முத்து....





ஹவாய் தீவினில் பிறந்ததும், தற்போது உயிருடன் இருக்கும் ஒரே தங்க வரிக்குதிரை
Born in Hawaii, Zoe is the only known captive golden zebra in existence 




ஹவாய் தீவில் இருக்கும் ஹலால் பழம்







தென் இந்தியாவின் முதல் இரண்டடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட தொடர்வண்டி தனது சோதனை ஓட்டமான சென்னை முதல் பெங்களூரு வரையான பயணத்தையும் வெற்றிகரமாக கடந்த ஞாயிறு அன்று முடித்தது. மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்களில், இடைவிடாது, மணிக்கு 150கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பயண நேரத்தில் ஏறத்தாழ மூன்று மணி நேரத்தைக் குறைத்துவிடுகிறது.

South India’s first AC Double Decker train successfully completed its trial run from Chennai to Bangalore on Sunday. Reducing travel time from Bangalore to Chennai by nearly three hours will be possible, as the double-decker express coaches are designed and built to run at 150 km per hour on upgraded tracks with no stoppages.








Monkey Orchids

These incredible looking flowers are monkey orchids. There are two species shown here, Dracula simia (the ones that look like monkey faces) and Orchis simia (which resemble little dancing monkeys).

Dracula simia are only found in the cloud forests of southeastern Ecuador at elevations of 1000 to 2000 meters and their flowers smell likes ripe oranges. Orchis simia are found in Europe, the Mediterranean, Russia, Asia Minor and Iran and the flowers smell strongly of feces! — with Linda DeGood, Filiz Uçar, Ayu Lubis, Claretha Woods, Randy Lambert and Terri Notz.


குழந்தை வளர்ப்பு-துணுக்குகள்....

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!