Saturday, March 7, 2015

Nandu kuzhambu.......




Maalaimalar தமிழ்


பேச்சிலர் சமையல் :

நண்டு கறி :

தேவையான பொருட்கள் ...


நண்டு - 1 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 5
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கரம் மசலா - 1 ஸ்பூன்
சீரகம் சோம்புதூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3/4 கப்
பாதாம்பருப்பு - 15.20
பட்டை - லவங்கம்
உப்பு
எண்ணெய்

செய்முறை...

• நண்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து இரண்டு துண்டாக போட்டுக்கொள்ளவும்.

• தக்காளி. வெங்காயம். பச்சைமிளகாய் நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.

• சட்டியில் எண்ணெய் விட்டு அது சூடானதும், பட்டை லவங்கம் போட்டு அதில் நறுகிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வதங்கியதும், இஞ்சிப்பூண்டு பேஸ்டையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கவும்.

• அதுவும் வதங்கி வாசனை வந்ததும், பின்பு நண்டை அதனுடன் சேர்த்து சற்று பிரட்டி, பின்பு மசாலக்களை தண்ணீர்விட்டு கரைத்து அதனுடன் சேர்த்து கொத்தமல்லியில் பாதியை அந்த கலவையுடன் சேர்த்து உப்பிட்டு மூடவும்.

• கொதித்து வாசனை வந்ததும் திறந்து, பாதாமுடன் தேங்காப்பூவையும் போட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்த விழுதை அந்த நண்டுடன் சேர்த்து கிளறி சற்று வைத்திருந்துவிட்டு மீதமுள்ள கொத்தமல்லி தூவி இறக்கவும்.

• நண்டுக்கறி ரெடி. இது சாதம், சப்பாத்தி மற்றும் பரோட்டக்களுக்கு மிகவும் ஏற்றது.

No comments: