Monday, March 2, 2015

கோபம் இருக்கிற இடத்துல தான் குணமும் இருக்கும்

😡“கோபம் இருக்கிற இடத்துல தான் குணமும் இருக்கும்”😌
கோபப்பட்டு கத்திவிட்டு இந்த அஸ்திரத்தை எடுத்துவிட்டு நம்மை சமாதானப்படுத்துபவர்கள் பல..

❓அப்படியென்றால் கோபம் ஒரு மேன்மையான குணமா❓

இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது..

உங்களுக்குக் கோபம் எப்போது வருகிறது? நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால், அல்லது மற்றவர்கள் நீங்கள் நினைத்தது போல் நடக்கவில்லை என்றால் தான் கோபம் வருகிறது.
கண்களை மூடுங்கள். உங்கள் மனதை எதன் மீதாவது சில நிமிடங்களுக்கு தொடர்ந்து நிலைநிறுத்த முடிகிறதா என்று பாருங்கள். முடியவில்லை அல்லவா?
உங்கள் மனமே உங்கள் விருப்பத்தை மீறி எங்கெங்கோ அலைபாயும் போது, சுற்றி உள்ளவர்கள் எப்படி உங்களுக்குக் கட்டுப்படுவார்கள்.

No comments: