Monday, August 31, 2015

enna dinner?

5 star hotel chef calls his wife and asks:  enna dinner?
Wife : Steamed fine long grain white rice hand-picked in the emerald green lap of the Vindhyas, accompanied by a golden lentil spicy soup that was gently simmered with the choiciest handpicked southern spices and  the smouldering tang of organic tamarind
Husband : apdina 😳😳😳?




Wife :   Rasam soru ...😂

Saturday, August 29, 2015

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...

படித்ததில் பிடித்தது:

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…!  அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்..

Monday, August 24, 2015

அனைவரையும் நேசியுங்கள். நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

அனைவரையும் நேசியுங்கள். நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள.

செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.

“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”

“நான் எமதர்மராஜனின் ஏவலாள். இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு!”

“நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. நீ போய்விட்டு சில காலம் கழித்து வா!”

“அது முடியாது. நீ கிளம்பு என்னோடு!”

செல்வந்தனுக்கு இம்முறை சற்று கோபம் வந்தது. “நான் யார் தெரியுமா? இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர்களுள் ஒருவன்!”

“அனைவரையும் நான் அறிவது போலவே, நீ யார் என்பதும் தெரியும். உன் வரலாறு என்ன என்பதும் எனக்கு தெரியும். பேச நேரம் இல்லை. புறப்படு!”

“என்னுடைய சொத்து மதிப்பில் ஒரு 10 % உனக்கு தருகிறேன். அதுவே 50 கோடிகளுக்கு பெறும். எதுவுமே நடக்காத மாதிரி போய்ட்டு அட்லீஸ்ட் ஒரு மாசம் கழிச்சாவது வாயேன்!”

“நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ? நீ உடனே கிளம்புகிறாயா இல்லை, உன்னை கட்டி இழுத்துக்கொண்டு போகவா?”

அடுத்த சில நிமிடங்களில், தன்னுடைய நேரத்தை நீட்டிப்பதற்கான பேச்சு வார்த்தையில் அந்த எமதூதனுடன் மும்முரமாக இறங்கினான். ஒரு மாதம் என்பதை ஒரு வாரம் ஆக்கினான். சொத்தில் பாதியை தருவதாகவும் சொன்னான். கடைசியில் சொத்தில் முக்கால் பங்கு தருவதாகவும் ஒரு நாள் அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டான். ஆனால் எமதூதன் எதற்குமே மசியவில்லை.

இறுதியில், தன்னால் எமதூதனை படியவைக்க முடியாது என்று புரிந்துகொண்டான்.

தனது தோல்வியை ஒப்புக்கொண்டு “சரி… இறுதியாக இதையாவது செய். என்னுடைய சொத்து முழுவதையும் கிட்டத்தட்ட பல நூறு கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது, அத்தனையும் உனக்கு எழுதித் தருகிறேன். எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அவகாசம் கொடு. என் பெற்றோரையும், மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து நான் அவர்களை பிரியப்போவதாகவும் நான் அவர்களை மிகவும் நேசிப்பதாக சொல்லவேண்டும். இதுவரை நான் அவர்களிடம் என் அன்பை சொன்னதேயில்லை. அப்புறம் நான் என் வாழ்க்கையில் மிகவும் காயப்படுத்திய இருவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்! எனக்கு தேவையெல்லாம் ஐந்து நிமிடம் மட்டும் தான்! இதையாவது செய் ப்ளீஸ்!!”

எமதூதன் பார்த்தான். “நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். இந்த பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை சம்பாதிக்க உனக்கு எத்தனை காலம் பிடித்தது?”

“30 வருஷம் நண்பா. 30 வருஷம். ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துக்கு 30 வருஷமா நான் சம்பாதிச்ச சொத்தை தர்றேன்னு சொல்றேன். இது ரொம்ப பெரிய டீல். பேசாம வாங்கிக்கொண்டால் உன் வாழ்க்கையில் இனி நீ ஒரு நாள் கூட வேலை செய்யவேண்டாம். பத்து தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்!”

“எனக்கு உண்மையிலேயே இந்த மனுஷங்களை புரிஞ்சிக்கவே முடியலே. முப்பது வருஷமா நீங்க பாடுபட்டு சம்பாதிச்சதை 5 நிமிஷத்துக்காக தர்றேன்னு சொன்னா… வாழும் போது ஏன் அந்த ஒவ்வொரு நிமிடத்தோட மதிப்பையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க? முடிவு வரும்போது தான் நேரத்தோட அருமை உங்களுக்கு தெரியுமா? நேரத்தை நீங்க உண்மையிலேயே எப்படி மதிப்பிடுறீங்க? உங்களோட முக்கியத்துவங்கள் (PRIORITIES) என்ன? வாழும்போதே ஏன் இப்போ சொன்னதெல்லாம் செய்யலே? யார் எத்தனை கோடிகள் கொட்டிகொடுத்தாலும், அழுது புரண்டாலும் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர ஒரு வினாடி கூட உயிருடன் இருக்கமுடியாது!!”

அடுத்த சில நொடிகளில், செல்வந்தனின் உயிர் அவனது உடலில் இருந்து பிரிந்தது. அவனுடைய பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களால், கடைசியில் அவன் செய்ய விரும்பிய செயலை செய்ய ஜஸ்ட் ஒரு ஐந்து நிமிடங்களை கூட வாங்க முடியவில்லை.

நேரத்தை ஒரு போதும் வீணடிக்காதீர்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் உணருங்கள்.

உங்கள் குடும்பத்தார் உட்பட அனைவரையும் நேசியுங்கள். நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

Siringa...

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம் - படித்ததில் சுட்டது

ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா

👬நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் 👩மனைவியின் குரல் தெளிவாக கேட்டது.

"ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. 📷டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... 💰இருபதாயிரம்தான் விலை.
வாங்கிகட்டுமா...?"

"வாங்கிக்க...!"☺

"அப்புறம்... நான் கேட்டேனே ஒரு
💎வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் 💰ஒண்ணரை லட்சம் சொல்றான்..."

"ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...😊!"

“அப்புறம் ஒரு புடவை 💁 பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்”

“ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா 😏”

"ஏங்க... அப்புறம் நாம பார்த்தமே ஒரு கார் 🚘... இப்ப  ஆஃபர் போட்டிருக்காங்க... விலை 💰பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?"

"ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும ்😇 "

"ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ..." என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைத்தாள் மனைவி.

இவரும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டுத் திரும்பினார்.

ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா... நாங்கள் மிரண்டு போய்ப் 😳 பார்த்துகொண்டிருக்க, எங்களை பார்த்து சிரித்தபடியே 😆 கேட்டாரே ஒரு கேள்வி….

"யாரோட மொபைல்ங்க 📱 இது..?".
் 😝😝😜😛😛😛😜😝😝

Friday, August 21, 2015

அமைதி என்றால்....

🍁🍃🍂🌿🌾🍄🌐🌴🌲🌳🌰🌱🌼🌵💐🌸🌷🍀🌹🌻🌺

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்
கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.

ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே
பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.

இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார்.

“இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?”

“மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல...

இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!”

“சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்..,

ஆம்.,நண்பர்களே.,
அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.

அது ஒரு வாழ்க்கையும் அல்ல.ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,

“நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,“எனக்கு நேரும்  
மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே…

அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.

அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!

Beautiful explanation by Swami Vivekananda on 'ASSOCIATION '.

Beautiful explanation by Swami Vivekananda
on 'ASSOCIATION '.

"The rain drop from the sky, if it is caught in hands is pure enough for drinking.

If it falls in gutter, it's value drops so much that it can't be used for washing the feet.

If it falls on hot surface, it perishes.

If it falls on lotus leaf, it shines like a pearl and

finally, if it falls on oyster, it becomes a pearl.

The drop is same, but it's existence & worth depends on with whom it ASSOCIATES ."

We love ourselves even after making so many mistakes. Then how can we hate others for their small mistakes?

URGENTLY NEEDED,

Not BLOOD, but

An ELECTRICIAN, to 'restore the current' between
People,who do not speak to each other anymore. . .

An OPTICIAN, to 'change the outlook' of people. . .

An ARTIST, to 'draw a smile' on everyone's face. . .

A CONSTRUCTION WORKER, to 'build a bridge'
between angry neighbours & relatives & Friends . .

A GARDENER, to 'cultivate positive
good thoughts' . . .

And

Last but not the least

A MATHS TEACHER,
For all of us to re-learn how to 'count'
our blessings everyday . . .

We love ourselves even after making so many mistakes.
Then how can we hate others for their small mistakes?

A thought which is so true, but we always FORGET.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை

அருமையான செய்தி

JRD TATA வுக்கு ஒரு நண்பர் இருந்தார்.

அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார்.

இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார்.

இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

அப்போது டாட்டா
தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார்.

மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார்.

அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.

பேனா  மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே.

நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்.

1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பன் - மரியாதை கொடுப்போம்.

3. பணம் - அவசிய செலவுகள் செய்வோம்.

4. உறவுகள்- முறிக்க மாட்டோம்.

5. வியாபாரம் - அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கை - உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

Wednesday, August 19, 2015

பிரண்டையின் பயன்கள்.

பிரண்டையின் பயன்கள்.
பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் 
கொடுக்கும்.
• பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. பிரண்டை, நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம்.
• பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டுவந்தால் கப நோய்கள் நீங்கும்.
• பிரண்டைகளில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல பிரிவுகள் உண்டு. முப்பிரண்டை கிடைப்பது அரிது.
• களிப்பிரண்டையை கணு நீக்கி மிளகு, உப்பு ஆகியவற்றைச்சேர்த்து உணவாகப் புசித்து வந்தால், பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும்.
• பிரண்டையின் அடிவேரை நீர் விட்டு நன்றாக அலம்பி, அதை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு 10 குன்றி மணி எடை, சாப்பிட எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும். 
• பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட சுவாச காசம் (ஆஸ்துமா) சாந்தப்படும். வேகவைத்த பிரண்டையை உப்பிட்ட மோரில் போட்டு உலர்த்தி வற்றலாகச் செய்வார்கள். பிரண்டையை நெய்விட்டு அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, தினமும் காலை, மாலை என்று இரு வேளையும் (எட்டு நாள்) சாப்பிட ஆசனத்தினவு, ரத்தமூலம் ஒழியும்.
• பிரண்டைத் தண்டுகளைச் சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் குடித்தால் எலும்புகள் பலம் பெறும். முறிந்த எலும்பு விரைவில் கூடும். ஒரு மாதம் பிரண்டை ரசம் குடிக்கவேண்டும். 
• பிரண்டையை இடித்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். இத்துடன் புளி, உப்பு சேர்த்துக் காய்ச்சுங்கள். குழம்பு பதத்தில் கெட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கிச் சூடு தாங்கும் அளவுக்குப் பற்று போடவேண்டும். இப்படிச் செய்தால் சுளுக்கு, சதை பிரளுதல், எலும்பு முறிவினால் ஏற்பட்ட வீக்கம் ஆகியவை குணமாகும். ஒரு நாளில் சரி ஆகுமா? குணமாகும் வரை வைத்தியத்தைத் 
தொடருங்கள்.
• பிரண்டை உப்பு பல நோய்களைப் போக்கும் வல்லமை கொண்டது. பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் 
உள்ளன. பிரண்டை ஆண்மை சக்தியைப் பெருக்கும்.
• உங்கள் வீட்டில் மண் தொட்டியை வைத்து பிரண்டையை வளர்க்க முயற்சி செய்யுங்கள். இதனுடைய தண்டுப் பகுதி நான்கு பட்டைகளுடன் சதைப் பற்று நிறைந்திருக்கும். இதனுடைய இலைகள் தடித்து நீர் மிகுந்து இருக்கும்.

யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.


யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.
.....................................

மெத்த படித்த விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..

கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள்,
அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..

ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..

ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..

மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.

தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..

இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு
வெட்கி தலை குனிந்தான்..

நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,

ஆம்..நண்பர்களே..,

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;

உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.

அதே ஒரு தீக்குச்சியினால்
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்

எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

நல்லதையே நினைப்போம்..

நாளும் நல்லதையே செய்வோம்...

இன்றைய நாள் உற்சாகமும், உத்வேகமும் தரும் நாளாக உங்களுக்கு அமையட்டும்..

The ...E... life !!!!!

This is such a Beautiful message - 👍😃 - Please do read it - 😃👍😃

The ...E... life !!!!!

In this world of E-mails, E-ticket, E-paper, E-recharge, E-transfer and the latest E-Governance...

Never Forget "E-shwar ( God )"

who makes e-verything e-asy for e-veryone e-veryday.

"E" is the most Eminent letter of the English alphabet.

Men or Women don't exist without "E".

House or Home can't be made without "E".

Bread or Butter can't be found without "E".

"E" is the beginning of "existence" and the end of "trouble."

It's not at all in 'war'
but twice in 'peace'.

It's once in 'hell' but twice in 'heaven'.

"E" represented in 'Emotions'
Hence,  all emotional relations like Father, Mother, Brother, Sister,wife & friends have 'e' in them.

"E" also represents 'Effort' & 'Energy'
Hence to be 'Better' from good both "e" 's are added.

Without "e", we would have no love, life, wife, friends or hope

& 'see', 'hear', 'smell', or 'taste' as 'eye' 'ear', 'nose' & 'tongue' are incomplete without "e".

Hence GO with "E" but without E-GO.
👍👍👍👍👍

அலுவலக கீதை.

அலுவலக கீதை.

!! நீ தனியாகத்தான் வந்தாய், தனியாகத்தான் போவாய்.
இங்கு உனக்கு என்று ஒன்றும் கிடையாது.

பணியாளர்கள் குறைவு என்று வருந்தாதே ! 
நீ தனியாகத்தான் போராட வேண்டும். யாரையும் நம்பி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே !

உற்றார் உறவினர் நண்பர்கள் சக பணியாளர்கள் என்பதெல்லாம் மாயை, அவை அனைத்தும் மா
யையின் சின்னங்கள்.

அதிகமாக உழைக்கும் காரணமாக உன்னை மீறி நடக்கும் பிழைகளுக்கும் அதற்கு உண்டான தண்டனைகளுக்கும் வருந்தாதே !

நீ அடுத்த பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று ஏங்காதே !
தற்போது எந்த பதவியில் இருக்கிறாயோ அதில் திருப்தி பட்டுக்கொள் !

நீ எப்பொழுது இங்கு இல்லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம் நடந்து கொண்டுதான் இருந்தது.  நீ எப்பொழுது இருக்கப்போவதில்லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம் நடந்து கொண்டுதான் இருக்கும்.

இதில் நீ என்று எதுவும் கிடையாது.
இன்று உனது வேலை எதுவோ
அது நேற்று வேறு ஒருவருடையதாக இருந்தது,
நாளை வேறு ஒருவருடையது ஆகி விட போகிறது.

நீ என்பது ஒரு மாயை.  தான் என்ற கர்வம் வர கூடாது.
இந்த மாயை மட்டுமே உனது அனைத்து கவலைகளுக்கும் காரணம்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு, விடுமுறைகள், . என்கிற வார்த்தைகளை நீ மறந்து விடு.  மாயையிலிருந்து விடு படு.

அப்படி இருக்கும் பட்சத்தில் நீதான் இந்த அலுவலகம், இந்த அலுவலகம்தான் நீ என்பது உனக்கு புலப்படும்..

ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்து வளர்ந்த பிள்ளைகளே எதிர்காலத்தில் ஏற்றமிகு பலனைத் தருவார்கள்..

வருஷம்பூரா பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், திடீர் புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப் பட்டதால் மனம் வெறுத்துப் போன ஒரு விவசாயி கடவுள்கிட்டே கேட்டான்,
”ஏன் ஆண்டவனே உனக்குக் கொஞ்சமாச்சும் மூளை இருக்கா?
மழையை அளவாப் பெய்ய வைச்சா என்ன?
ஏன் இப்பிடி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களையெல்லாம் அழிக்கறே..
அதே மாதிரி காத்து அடிச்சாப் பத்தாதா? புயலாய்த்தான் அடிக்கணுமா?
வெயில் அடிச்சாப் பரவாயில்லே...ஒரேயடியா இப்பிடி வறட்சி வர வைக்கணுமா?
உனக்கு பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு கொஞ்சம் கூடத் தெரியலை... எங்கிட்டே அந்த சக்தியைக் கொடு. உற்பத்தியைப் பெருக்கி நாட்டில் சுபிட்சத்தை உண்டாக்கிக்காட்டறேன்”ன்னு சவால் விட்டான்.
கடவுளும் சரி உன் இஷ்டம். இனி இயற்கை உன் சொல்படி நடக்கும்னு அவனுக்கு சக்தியைக் கொடுத்தார்.
அன்னைலேர்ந்து அந்த விவசாயி இட்ட கட்டளைக்கு நிலம், நீர், ஆகாயம், வெப்பம், காற்று எல்லாம் கட்டுப் பட்டுச்சு.
மழை அளவா பேஞ்சுது. காற்று மிதமா வீசிச்சு. நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்துச்சு. வெப்பம் அளவோடு இருந்துச்சு. பயிர்கள் அமோகமா விளைஞ்சிருப்பதைப் பாத்து அவனுக்குப் பெருமிதம் பிடிபடலை.
கடவுளைக் கூப்பிட்டு.. "பாத்தீங்களா ஆண்டவனே. நான் எப்பிடி விளைச்சலைப் பெருக்கி இருக்கேன்"ன்னு சொன்னான்.
கடவுளும் சரி..அறுவடை செய் என்று அருகில் நின்று வேடிக்கை பார்த்தார். விவசாயி அறுவடை செய்து முற்றிய கதிர்களை உதிர்த்துப் பார்த்தான். நெல் சிதறியது. ஆனால் உள்ளே அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தன. அவன் திகைத்துப் போயி இறைவனை ஏறிட்டுப் பார்த்தான்.
கடவுள் அமைதியாகச் சொன்னார்...இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயலைக் கொடுக்கும் போது பயிர் தன் வேரை பலப் படுத்திக்கும். நான் வரட்சியைக் கொடுக்கும் போது தன் வேர்களை நன்றாக பாய விட்டு நீரைத் தேடி வளரும். நான் நீரை அதிகமாகக் கொடுக்கும் போது அதில் வேர்கள் அழுகிப் போகாமல் தன் வேர்கால்களை வலுவாக்கிக் கொள்ளும். அதனால் அதன் வளர்ச்சி எல்லா பருவ நிலைகளுக்கேற்றபடி மாறி நல்லதொரு பலன் கொடுக்கும் பயிராய் அது வளரும்...
ஆனால் நீ வளர்த்த பயிர்கள், சகல வசதியும் சுகமாய் கிடைத்ததும்...
சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறி விட்டது.
இது விவசாயிக்கு மட்டுமில்லை. நம் குடும்பத்துக்கும் பொருந்தும். பிள்ளைகளுக்குக் குடும்பக் கஷ்டம் தெரியாமல் சுகமாக வளர்த்தால் அவர்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் எந்தவிதப் பலனும் இருக்காது...
ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்து வளர்ந்த பிள்ளைகளே எதிர்காலத்தில் ஏற்றமிகு பலனைத் தருவார்கள்..

Tuesday, August 11, 2015

Keep smiling and ...☺ Be happy😄😄😄😄

Charlie Chaplin told the audience a wonderful joke and all the people started laughing...

Chaplin repeated the same joke and only few people laughed..????

He again repeated the same joke but this time no one laughed...??????

Then he told these beautiful lines...;

" when you cannot laugh on the same joke again and again...
then why do you cry  again and again on the same worry"

So enjoy your every moment of life..!!
Life is beautiful??????
Have  a good day to recollect his 3 heart-touching statements:-

(1) Nothing  permanent in this world, not even our troubles.

(2) I like walking in the rain, because nobody can see my tears.

(3) The most wasted day in life is the day in which we have not laughed.

Keep smiling and ...☺  Be happy😄😄😄😄

Sunday, August 9, 2015

நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

, ஒரு விவசாயி👳 வளர்த்து வந்த
வயதான பொதி சுமக்கும்
கழுதை 🐴 ஒன்று தவறி அவன்
தோட்டத்தில் உள்ள வறண்ட
கிணற்றில்
விழுந்துவிடுகிறது😔

உள்ளே விழுந்த கழுதை
அலறிக்கொண்டே இருந்தது🐴 😮  அதை எப்படி
கிணற்றிலிருந்து
வெளியேற்றி
காப்பாற்றுவது என்று
அவன் விடிய விடிய
யோசித்தும்🙇 ஒரு யோசனையும்
புலப்படவில்லை😔.
காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு
பிடிக்ககூடியதாக இருந்தது😳❗
.
அந்த கிணறு எப்படியும்
மூடப்படவேண்டிய ஒன்று.
தவிர அது மிகவும் வயதான
கழுதை என்பதால் அதை
காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன்😥, கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று
முடிவு செய்தான்😨.
அக்கம் பக்கத்தினரை
உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர்👲👳👮👷👦👧👨👩👴👵. சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை
மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்😓.

கழுதை நடப்பதை உணர்ந்து
தற்போது மரண பயத்தில்
அலறியது😩😫.

ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை 😱
இவர்கள்
தொடர்ந்து மண்ணை அள்ளி
அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம்
கழித்து அதன் அலறல் சத்தம்
அடங்கிவிட்டது🐴 😷.

ஒரு பத்து நிமிடம் மண்ணை
அள்ளி கொட்டியவுடன்
கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க,
அவன் பார்த்த காட்சி அவனை
வியப்பிலாழ்த்தியது😳❗❗.

ஒவ்வொரு முறையும்
மண்ணை கொட்டும்போது,
கழுதை🐴 தனது உடலை ஒரு
முறை உதறிவிட்டு,
மண்ணை கீழே தள்ளி,
அந்த
மண்ணின் மீதே நின்று வந்தது🐴 😊
இப்படியே பல அடிகள் அது மேலே
வந்திருந்தது❗❗

இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை🐴 🙌 தனது முயற்சியை கைவிடாது,
உடலை உதறி உதறி மண்ணை
கீழே தள்ளி தள்ளி அதன் மீது
ஏறி நின்று வந்தது.
கழுதையின் இடைவிடாத
இந்த முயற்சியால்
அனைவரும் வியக்கும்
வண்ணம் ஒரு வழியாக
கிணற்றின் விளிம்பிற்கே
வந்துவிட்டது❗❗🙇
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி
தோட்டத்திற்குள் சென்று
மறைந்தது🙇😊.

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில்
இப்படித் தான் நம்மை
படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும்,
மண்ணையும் நம் மீது
கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும் இந்த உலகம் 🌍❗

ஆனால் நாம் தான்
இந்த கழுதை🐴 😊 போல
தன்னம்பிக்கையும்
விடாமுயற்சியும்
கொண்டு, அவற்றை உதறித்
தள்ளி மேலே வரவேண்டும்.

நம்மை நோக்கி வீசப்படும்
ஒவ்வொரு கல்லையும்
சாமர்த்தியமாக பிடித்து
படிக்கற்க்களாக்கிக்
கொள்ளவேண்டும்,
எத்தனை பெரிய குழியில்
நீங்கள் விழுந்தாலும்..🙌🙌

நன்றி இல்லாத, நண்பர்கள்👬, குடும்பத்தார் 👪,பணியிடத்தின் முதலாளி💂, இப்படியாக எல்லாராலும் ஒதுக்கபட்டு, உங்களை அழிக்க நினைத்தாலும் 👆👀❗❓

“இத்தோடு நம் கதை
முடிந்தது” என்று
கருதாமல் விடாமுயற்சி
என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம். “நீங்கள் எதுக்குள்ளே
விழுந்தா என்ன❗, உங்க மேல
எது விழுந்தா என்ன❓
எல்லாத்தையும் உதறிட்டு,
நம்பிக்கையுடன் செயல்படுங்கள்..😊☺