Sunday, May 31, 2015

திருப்தியாக வாழுங்கள்..



ஒரு நாள் மனிதன் இறந்து விட்டால் தனது பணம் வங்கி அல்லது லாக்கரில் இருக்கும்.

மனிதன் உயிருடன் இருக்கும் போது, அவர் செலவு செய்ய போதுமான பணம் இல்லை என்று நினைக்கிறார்கள்.

அந்த மனுஷன் பணத்தை விட்டு செல்லும் போது அவரது வங்கி கணக்கில் நிறைய இருக்கும் .

ஒரு பிரிட்டிஷ் தொழில் அதிபர் காலமானார்.
அவர் வங்கியில் தனது மனைவிக்கு , 1 பில்லியன் பவுண்டுகள் விட்டு சென்றார் ..
அவர் மனைவி தான் கணவரிடம் வேலை செய்த இளம் ஊழியர் ஒருவரை திருமணம் புரிந்து கொண்டனர்.
அந்த ஊழியர் கூறினார் ,
"இதனை நாள் நான் எனது முதலாளிக்கு வேலை செய்கிறான் என்று நினைத்தேன்.
இப்போது தான் புரிகிறது என் முதலாளி எனக்காக இதனை நாள் வேலை செய்து கொண்டுஇருந்தார் என்று "

கதையின் நீதி

அதிக செல்வத்தை விட நீண்ட ஆயுள் முக்கியம் என்பதே!.
• வலுவான மற்றும் ஆரோக்கியமான உடல் முக்கியம் .
• ஒரு விலையுயர்ந்த செல் போனின் செயல்பாடுகளில் 75% பயனற்றவை.
ஒரு விலையுயர்ந்த காரின் வேகத்தில் 75% தேவை இல்லை.
ஒரு பெரிய ஆடம்பரமான வீட்டில் 75% காலியாக இருக்கிறது.
அலமாரியில் உள்ள உடைகளில் 75% அரிதாக அணியப்படுகிறது.
வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் வருமானம் 75% மற்றவர்களுக்காகவே சம்பாதிக்கப்படுகிறது .
ஒவ்வொரு மனிதனின் திறமையும் 75% பயன்படுத்துவது இல்லை.

எனவே, மீதமுள்ள, உங்களின்  25%த்தை எப்படி முழுமையாகப் பயன்படுத்த 
போகிறீர்கள்?
• நீங்கள் நன்றாக இருந்தாலும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
• நீங்கள் தாகம் இல்லை என்றாலும் அதிக தண்ணீர் குடியுங்கள் .
எப்போதும் உங்கள் ஈகோவை விட்டுவிடுங்கள்.
• நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நபராக இருந்தாலும் மற்றவர்களிடம் பணிவுடன் இருங்கள்.
• நீங்கள் பணக்காரனாக இல்லை என்றாலும் வாழ்கையில் திருப்தியாக வாழுங்கள்..

The day man dies, his money will still be in the bank or locker

When man is alive, he thinks he doesn’t have enough money to spend.

When man passes away, there is still a lot of money in his bank account not spent.

A British tycoon passed away.
He left for his widow 1 Billion Pounds in the bank.
The widow remarried one of her husband’s young employees.
The employee said,
“All this while I thought I was working for my boss.
I now realize that my boss was all the time working for me!”

Moral of the Story

It is more important to live longer than to have more wealth.
• Strive to have a strong and healthy body.
• In an expensive cell phone, 75% of the functions are useless.
• In an expensive car, 75% of the speed is not needed.
• In a big luxurious house, 75% of the space remains unoccupied or unutilized.
• In a whole wardrobe of clothes, 75% of them are rarely worn.
• Out of whole life’s earnings, 75% stays behind for other people to use.
• In every human being, 75% of the talent is not utilized

So, how to make full use of our 25%?
• Go for medical check-up even when you feel fit.
• Drink more water even if you’re not thirsty.
• Let go your ego, whenever you can.
• Give in even if you are right.
• Be humble even if you are very powerful.
• Be contented even if you are not rich.

Have a Great Life !

Saturday, May 30, 2015

Relieve Back Pain With These 7 Stretches In Just 7 Minutes!...........

Relieve Back Pain With These 7 Stretches In Just 7 Minutes!



Does your low back feel stiff, achy, and about to spasm, or are you already there? Do these seven stretches; perform this sequence three times a day and once the pain is considerably less, you can reduce the sequence to once a day, and ultimately three to four times per week. 

When you're ready to start, lie down on the bed or floor (preferably on a carpet, rug or yoga mat). 

Pelvic Tilt Warmup

Lie on your back with your knees bent and feet flat on the floor. In this relaxed position, the small of your back will not be touching the floor.

Perform a pelvic tilt by tightening your abdominal muscles so that the small of your back presses against the floor. Hold for 5 seconds, and then relax. Repeat this move three times and gradually build to 10 repetitions.

Next, take a deep breath and on the exhale contract your abdominals, pulling your belly button towards your spine. Hold for 5 to 10 seconds. Repeat 10 times.

Now, you are ready to begin stretching.

7 STRETCHES IN 7 MINUTES FOR LOW BACK PAIN RELIEF

1. Hamstring Floor Stretch

Hamstring Floor Stretch

What it works?  Back of thighs (the hamstrings)

Hold for 30 seconds. Do this 2 times for each leg.

Helpful Tip: Contract your abdominals when bringing your legs up.

2. Knees to Chest Stretch

Knees to Chest Stretch

What it works?  Hips/ Glutes (aka Butt)/ Lower Back

Hold for 20 seconds. Repeat on other leg.

Helpful Tip: With your abdominals contracted, try to straighten your right leg. If you experience any discomfort in your back, leave your right leg bent.


3. Spinal Stretch

Spinal Stretch
What it works?  Lower Back/ Obliques

Hold for 20 seconds. Repeat on other knee.

Helpful Tip: Contract your abdominals before bringing your knees up and over.


4. Piriformis Stretch

Piriformis Stretch

What it works?  The Glutes

Hold for 30 seconds. Repeat with other leg.

Helpful Tip: Contract your abdominals before crossing your leg and resting your foot on the opposite knee.

5. Hip Flexors Stretch

Hip Flexors Stretch

What it works?  Hips/ Front of thighs (quadriceps)

Hold for 30 seconds. Switch sides and repeat stretch.

Helpful Tip: Remember to contract your abdominals, keep your shoulders down and back straight.


6.  Quadriceps Lying Down Stretch

Quadriceps Lying Down Stretch

What it works?  Front of thighs (quadriceps)

Hold for 30 seconds. Switch sides and repeat stretch.

Helpful Tip: Contract your abdominals before grasping the top of your foot and bringing it to your butt.



7A. Total Back Stretch

Total Back Stretch

7B. Then Try This…


What it works?  Entire back/ Shoulders/ Arms

Hold for 10 seconds.

SUCCESS!  Hopefully, you are now experiencing noticeable low back pain relief.

Sticking to a regular back stretching routine will hopefully keep your back stronger and less likely to become injured.
- See more at: http://www.funinventors.com/2015/05/relieve-back-pain-with-these-7-stretches-in-just-7-minutes.html#sthash.OINtgaKz.dpuf

Friday, May 29, 2015

"மரு" (Skin Tag) உதிர...



"மரு" (Skin Tag) உதிர...

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.

அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...

அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும்.

இதனை மரு மீது பூசவும்.

மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.

இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

எவரெஸ்ட் சிகரம் முதன் முதலில் தொடப்பட்ட தினம் இன்று(மே 29)....



எவரெஸ்ட் சிகரம் முதன் முதலில் தொடப்பட்ட தினம் இன்று(மே 29)

மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று தான்

உலகின் மிக உயரமான அந்த சிகரத்தை தொடுவதற்கான முன்னெடுப்புகள் நெடுங்காலமாக நடைபெற்றன. தொட பத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் .கொஞ்சம் மரணங்கள் இதுதான் அதுவரைக்கும் எவரெஸ்ட் நோக்கி போனவர்களின் கதை. உச்சிக்கு போக போக பிராண வாயு அளவு குறையும், எண்ணற்ற சிக்கல்கள் உருவாகும்.தலைவலி, ஞாபக மறதி, மயக்கம், பசி இழப்பு, உடல் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பின்மை,மனப்பிறழ்வு கொஞ்சம் போனால் கோமா இதெல்லாம் வந்து சேரும்

ஜான் ஹன்ட் எனும் இங்கிலாந்து நபர் தலைமையில் பதினோரு பேர் கொண்ட குழு கிளம்பியது.அதில் ஒருவர் தான் எட்மன்ட் ஹிலாரி நியூசிலாந்து நாட்டில் பிறந்த எட்மன்ட் குட்டிப்பையனாக படிப்பில் சுமார் தான்;கூச்ச சுபாவம் வேறு -பள்ளிக்கு போகும் பொழுது இரண்டுமணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு சென்றது கூட்டி போனது;அந்த கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார் ;மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார் .

தேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார் .உலகப்போரில் ஈடுபட போய் தீக்காயங்களுக்கு உள்ளாகி மீண்டு வந்தார் ;எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது விட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார் .வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபபடும் அப்பொழுது அங்கு போய் சேர்ந்தார் -உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார் .

நெருங்கிபழகிய இருவரும் முன்னேறினார்கள் ;கடுமையான சூழலில் ,பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953 இல் இதே நாளில் தொட்டார்கள் .காலை நான்கரை மணிக்கு எழுந்து எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது இருவரும் கிளம்பி போய் உச்சத்தை அடைந்தார்கள்.யார் முதலில் தொட்டார்கள் என இறுதிவரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே தொட்டதாக சொன்னார்கள் .அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் ஹில்லாரி தென் மற்றும் வட துருவங்களை தொட்டார் .

நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உதவினார் .எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட பொழுது ,"இயல்பான எளியவன் நான் !புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான் .அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன் .சிம்பிள் !" என்றார் . மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று

Pazhangalum athan nanmaigalum....







உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்...




அதிகம் பகிரவும், மக்கள் பயன் பெற.

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து
தெரிந்துகொள்ளலாம்:

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள்
உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும்
வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை
என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற
முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி
விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின்
அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும்
அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக
வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி
வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல்
சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக்
கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ்
மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்
என்ன வியாதி?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது.
இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து
கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த
நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான
வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத்
தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க
வேண்டும்..

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச்
செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால்
களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த
பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும்
அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும்,
பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய
உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை
செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப்
பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு
இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து
கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த
இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே
இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம்
‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை
உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக்
கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில்
அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி
ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது.
உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால்,
ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத்
தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது
அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன்
வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும்
என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும்
பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற
முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு
மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால்
இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம்
இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு
இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக
ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட
வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும்
செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும்
வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில
நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து
ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து
கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்
கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக்
கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட
டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்
கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு
சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை
ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக
வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல்
உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல்
இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக
சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள்
இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட
கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக்
கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள்
ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக
வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான
உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக்
கொடுக்கும். காரணம் உடலின் மற்ற
பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக
இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம்
சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின்
விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள்
பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள்
அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச்
செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம்
இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து
விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின்
எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள்,
மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக்
கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின்
ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து
மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக்
கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால்
விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி
அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை
வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர
வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த
மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும்
வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும்
வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக்
கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம்.
ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக்
குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி.
இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி
விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான
நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக்
கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக்
கொண்டாலே வியாதி அதிகமாவதைத்
தடுக்கலாம்.

வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும்
அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று
நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி
இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம்
வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும்,
பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம்.

ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ்
கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன
வியாதி?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ்
செய்து கொள்வதாலும் வாய்ப்புண்
வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும்,
இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும்
இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக்
கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும்
யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக்
குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு
கொண்டு வாய் கொப்பளித்து
வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண்
ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில்
அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த
டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக
வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து
போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்
கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர்
தண்ணீர் அருந்துவது அவசியம்.

அதன்கூடவே பழங்களையோ
பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.
ஷேர் செய்யவும்...................