Saturday, May 31, 2014

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

தினசரி பயன்படுத்தும் குறிப்புகள் :-
+++++++++++++++++++++++++++++

தினசரி இரவில் படுக்கும் முன் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அனுகாது. உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

தினசரி காலை அல்லது இரவு இட்டிலியை உணவாகக் கொண்டால் நீரிழிவு நோய் குணமாகும். இட்லியில் உள்ள உளுந்து சர்க்கரை நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

இடுப்புவலி, மூட்டுவலிக்கு மருந்து கோதுமையை பொன்னிறமாக வறுத்து எடுத்து இடித்து சலித்து பாட்டிலில் வைத்துக் கொண்டு தினசரி சிறிது மாவை எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து மாவை பிசைந்து சாப்பிட்டு வர குணமாகும்.

எலும்பு பற்கள் உறுதியாய் இருக்க ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம்பழத்தை சாப்பிட்டு வர எலும்பு பற்கள் உறுதியாகும்.

மலச்சிக்கலில் சிரமப்படுவோர் இரவில் மாம்பழத்தைச் சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.

உடல் பருமன் உள்ளவர்கள் தினசரி உணவில் பப்பாளிக் காயை சேர்த்து வர நாளடைவில் உடல் பருமன் குறையும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினசரி மூன்று நெல்லிக்காயைச் சாப்பிட்டு வர அதிலிருந்து விடுபடலாம்.

ஞாபக சக்தி பெருக பப்பாளிக் பழத்தை தினசரி சிறு அளவு சாப்பிட்டுவர ஞாபக சக்தி பெருகும்.

அன்னாசி பழத்தை தினசரி சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள பூச்சிகள் ஒழியும்.

மணத்தக்காளிக் கீரையும், வெங்காயத்தையும், தினசரி உணவில் சேர்த்துக் வந்தால் மூலச்சூட்டைத் தவிர்க்கலாம்.

தினசரி பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்பட்டு வரும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி...




பொது நலம் கருதி வெளியிடுவோர்:-

கடலூர் அரங்கநாதன்...

No comments: