Saturday, December 21, 2013

குளிர்கால உணவு....

குளிர்காலம் வந்தாலே நம்மை பல தொற்றுநோய்கள் தாக்க தொடங்கி விடும்.
அதனால், இந்த குளிர்காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தெரிவுசெய்து உட்கொள்ள வேண்டும்.


இதன் மூலம், குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம்.


இஞ்சி சிகிச்சை


மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும்.


இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர்காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும்.


ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.






தேன்


இந்த குளிர்காலங்களில் உங்கள் உணவில் தேனை சேர்த்து கொள்ளுவது மிகச்சிறந்த ஒன்றாகும். இது உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவி புரியும்.






பாதாம்


பாதாமானது அதிக அளவில் பலன்களை அளிக்ககூடியதால் இது குளிர்காலங்களில் உட்கொள்ளும் உணவுகளில் மிகச்சிறந்த ஒன்றாகும்.


இது பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவி புரியும். இது சர்க்கரை நோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.






எள்ளு விதைகள்


குளிர்காலங்களில் எள்ளு விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறந்த பலனை பெறலாம். குளிர்காலங்களில் உங்கள் உணவில் வெப்பம் தரும் உணவுகளை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.






ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்


இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும்.


மீன்களில் அதிக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவி புரியும்.


இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும்.






காய்கறிகள்


உங்கள் டயட்டில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த காய்கறிகள் உங்களுக்கு தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவி புரியும்.


அதிக அளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை உட்கொள்ள வேண்டும்.




No comments: