Friday, January 3, 2014

இயற்கை கொசு விரட்டி....

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?

அப்ப இதை படிங்க..!

கொசு ஒரு பிரச்சனையா?

இது 100% வேலை செய்யும்...!

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!

ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை,கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்...!


Wednesday, January 1, 2014

இயற்கை மருத்துவம் (மாதுளை...)

மாதுளம்பழம்த்தின் மருத்துவ குணங்கள்...!

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. ‎மலச்சிக்கலால்‬ கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.