Thursday, March 5, 2015

அறுசுவைகளின் தன்மை....

உட்காராதே -"குந்த" பழகிகொள்.. சிந்திக்கவும்...

உட்காராதே -"குந்த" பழகிகொள்.. சிந்திக்கவும்...

இன்று தமிழ்நாட்டில் எழுப்படும் கட்டிடங்களில் "குந்தும் முறை" கழிவறை இருக்கிறதோ இல்லையோ அமர்ந்து அசுத்தபடுத்தும் கழிவறை இல்லாமல் தமிழர்கள் வீடு கட்டுவதில்லை பெரும்பாலும். என்னடா னு கேட்டால் "FASHION " என்கிறார்கள்.

அறிவியல் ரீதியாக நடந்திருக்கும் ஆராய்ய்ச்சி முடிவு சொல்கிறது , மனிதன் தனது கழிவுகள் வெளியேற்றம் செய்யும் பொழுது அவன் அமர்ந்த முறையில் மேற்கத்திய கழிவறைகளில் உட்கார்ந்து போகும் முறை தவறானது மற்று பல நோய்களை ஏற்படுத்த முக்கிய காரணமாக் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நாம் தான் இந்த சமுகத்தில் உயர்ந்தவன் என்று காட்ட கழிவறைகளை கூட மாற்றி விடுகின்றனர் .அதிலும் சிலர் இந்த மேற்கத்திய கழிவறைகளை எவ்வாறு உபயோகம் செய்வது தெரியாமல் ,கேட்பதற்கு வெட்குண்டு சிலர் கழிவறையில் உட்கார்ந்து போகமால் ,எப்படி நம்ம பாரம்பரிய கழிவுகளை அகற்ற குந்தி போவதுமாதிரி அதன் மேல் உட்கார்ந்து போகின்றனர் . மேற்கத்திய கழிவறை முறைகளை பயன்படுத்தினால் சுகாதாரதிர்க்கு கேடு , அதிலும் அதை தவறாக பயன்படுத்தினால் உயிருக்கு கேடு.

மிக எளிமையாக வாழ்ந்த உலகின் ஏழை ஜனாதிபதி ..

மிக எளிமையாக வாழ்ந்த உலகின் ஏழை ஜனாதிபதிக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பிய உருகுவே மக்கள்

மாண்ட்டே வீடியோ, மார்ச் 3-
ஜனாதிபதி என்றாலே... நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.
அந்த இன்ப அதிர்ச்சியை தருபவர், உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா (77). ஜனாதிபதிக்கு அரசு வழங்கும் ஆடம்பர மாளிகையை புறக்கணித்துவிட்டு, புழுதி படிந்த சாலையோரம் உள்ள தனது மனைவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இவர் வாழ்ந்து வருகின்றார்.
இவரது வீட்டுக்கு இரண்டே இரண்டு போலீசார்தான் காவல் காக்கின்றனர். வீட்டுக்கு பின்புறம் உள்ள பண்ணையில் மனைவியுடன் சேர்ந்து இவர் மலர் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றார். மாதாந்திர சம்பளத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, உருகுவே குடிமகனின் சராசரி சம்பளமான 775 அமெரிக்க டாலர்களை வைத்தே தனது குடும்ப செலவினங்களை ஜோஸ் முஜிகா சமாளித்து வருகின்றார்.
2010-ம் ஆண்டு தனது சொத்து கணக்கை சமர்ப்பித்த இவர், 1987-ம் ஆண்டில் வாங்கிய 'வோக்ஸ் வேகன் - பீட்டில்' காரை மட்டுமே தனது சொத்தாக காட்டியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 1800 அமெரிக்க டாலர்கள்.
2009-ம் ஆண்டு உருகுவே நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஸ் முஜிகா, 1960-70களில் உருகுவே கொரில்லா புரட்சி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1971-ம் ஆண்டு முதல் 1985 வரை பலமுறை தனிமைச்சிறை உள்பட அடக்குமுறை சட்டங்களின் மூலம் பல்வேறு கடுமையான தண்டனைகளை இவர் அனுபவித்துள்ளார்.
சிறை வாழ்க்கைதான், தன்னை பக்குவப்படுத்தியது என்னும் ஜோஸ் முஜிகா, இரு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னைப் பற்றி கூறியதாவது:-
விசித்திரமான முதியவராக நான் தோன்றலாம். ஆனால், இது எனது விருப்பமான தேர்வு. இதேபோல்தான் என் வாழ்நாளின் பெரும்பகுதியை நான் கழித்துள்ளேன். இருப்பதைக் கொண்டு என்னால் சிறப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மிகவும் ஏழை ஜனாதிபதி என்று என்னை அழைக்கின்றார்கள். ஆனால், என்னைப் பொருத்த வரை நான் ஏழை அல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைகின்றவர்கள்தான் ஏழைகள்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
கடந்த முதல் தேதி (1-3-2015) தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த ஜோஸ் முஜிகா ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறி தனது சொந்த மாளிகைக்கு திரும்பியபோது, ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘எனது பயணம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. ஒவ்வொரு நாளும் சவக்குழிக்கு வெகு நெருக்கமாக நான் சென்று கொண்டிருக்கிறேன். வயதான ஓய்வூதியதாரராக ஒரு மூலையில் அமர்ந்து எனது பதவிக்கால அனுபவங்களைப் பற்றி புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்க விரும்பவில்லை. எனக்கு அசதியாகதான் உள்ளது. எனினும், நான் ஓய்வெடுக்கப் போவதில்லை’ என்று கூறினார்.
உருகுவே நாட்டின் சட்டத்தின்படி, இரண்டாவது முறையாக யாரும் ஜனாதிபதியாக முடியாது. எனவே, 2014-ல் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் ஜோஸ் முஜிகா, ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக காலம் கழிப்பார் என்று நம்பலாம்.

எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.

எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.

PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?

இது உண்மையா என்று தெரிந்தவர்கள் கூறுங்கள் ...
பொய்யெனில், பதிவை நீக்கிடலாம்....

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?
நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.
உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.
இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள்.
உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும்.
இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.
அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.
ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.
னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்.
இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.
அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.
அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது.
இனிமேல், இடி இடித்தால் அர்ஜுனா கோஷம், இடியையும் தாண்டி ஒலிக்கட்டும்! சரியா!
'இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?

நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.

உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள்.

உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும்.

இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.

அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.

ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.

னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்.

இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.

அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.

அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது.

இனிமேல், இடி இடித்தால் அர்ஜுனா கோஷம், இடியையும் தாண்டி ஒலிக்கட்டும்! சரியா!'

Monday, March 2, 2015

கோபம் இருக்கிற இடத்துல தான் குணமும் இருக்கும்

😡“கோபம் இருக்கிற இடத்துல தான் குணமும் இருக்கும்”😌
கோபப்பட்டு கத்திவிட்டு இந்த அஸ்திரத்தை எடுத்துவிட்டு நம்மை சமாதானப்படுத்துபவர்கள் பல..

❓அப்படியென்றால் கோபம் ஒரு மேன்மையான குணமா❓

இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது..

உங்களுக்குக் கோபம் எப்போது வருகிறது? நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால், அல்லது மற்றவர்கள் நீங்கள் நினைத்தது போல் நடக்கவில்லை என்றால் தான் கோபம் வருகிறது.
கண்களை மூடுங்கள். உங்கள் மனதை எதன் மீதாவது சில நிமிடங்களுக்கு தொடர்ந்து நிலைநிறுத்த முடிகிறதா என்று பாருங்கள். முடியவில்லை அல்லவா?
உங்கள் மனமே உங்கள் விருப்பத்தை மீறி எங்கெங்கோ அலைபாயும் போது, சுற்றி உள்ளவர்கள் எப்படி உங்களுக்குக் கட்டுப்படுவார்கள்.