Thursday, March 5, 2015

உட்காராதே -"குந்த" பழகிகொள்.. சிந்திக்கவும்...

உட்காராதே -"குந்த" பழகிகொள்.. சிந்திக்கவும்...

இன்று தமிழ்நாட்டில் எழுப்படும் கட்டிடங்களில் "குந்தும் முறை" கழிவறை இருக்கிறதோ இல்லையோ அமர்ந்து அசுத்தபடுத்தும் கழிவறை இல்லாமல் தமிழர்கள் வீடு கட்டுவதில்லை பெரும்பாலும். என்னடா னு கேட்டால் "FASHION " என்கிறார்கள்.

அறிவியல் ரீதியாக நடந்திருக்கும் ஆராய்ய்ச்சி முடிவு சொல்கிறது , மனிதன் தனது கழிவுகள் வெளியேற்றம் செய்யும் பொழுது அவன் அமர்ந்த முறையில் மேற்கத்திய கழிவறைகளில் உட்கார்ந்து போகும் முறை தவறானது மற்று பல நோய்களை ஏற்படுத்த முக்கிய காரணமாக் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


நாம் தான் இந்த சமுகத்தில் உயர்ந்தவன் என்று காட்ட கழிவறைகளை கூட மாற்றி விடுகின்றனர் .அதிலும் சிலர் இந்த மேற்கத்திய கழிவறைகளை எவ்வாறு உபயோகம் செய்வது தெரியாமல் ,கேட்பதற்கு வெட்குண்டு சிலர் கழிவறையில் உட்கார்ந்து போகமால் ,எப்படி நம்ம பாரம்பரிய கழிவுகளை அகற்ற குந்தி போவதுமாதிரி அதன் மேல் உட்கார்ந்து போகின்றனர் . மேற்கத்திய கழிவறை முறைகளை பயன்படுத்தினால் சுகாதாரதிர்க்கு கேடு , அதிலும் அதை தவறாக பயன்படுத்தினால் உயிருக்கு கேடு.


No comments: