Friday, February 20, 2015

யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?



ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.


அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Thamizhargalin Paarambariyam....



5000-6000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழர்கள் எவ்வாறான ஒரு அழகான பெறுமதியான நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வோமா?
அதற்குமுன்னர் ...........
நான் எனது பதிவுகளில் பழங்காலம் தொட்டு தமிழர்கள் பின்பற்றிய மதத்தை "சைவம் "எனறே
விழிக்கிறேன் . "ஹிந்து ""இந்து " என்ற சொல் தமிழர்களுக்குப் பொருத்தமற்றது என்று அறிகிறேன். இரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிந்துகொள்வது நல்லது.

சைவம் உலகிலேயே பழைமையான மதம் என்று அறியப்படுகிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகமான சிந்துவெளி நாகரீகத்தில் (ஹரப்பா , மொஹஞ்சதாரோ போன்ற பகுதிகளில் ) அண்மையில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட்களில் அதற்கான சான்றுகள்
கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையும் முன்பே சைவத்தைப் பின்பற்றிய தமிழர்கள் இந்தியாவின் வடபகுதிகள் எங்கும் வியாபித்திருந்தனர்.

இந்தியாவுக்குள் புகுந்த ஆரியர்கள் எனப்படுபவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் . பல்வேறு கால இடைவெளிகளில் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள். எனினும் தமிழர்களின் வீரம் செறிந்த தாக்குதல்களை முறி யடிப்பதற்க்காக ஒன்றிணைந்து கொண்டு தமிழர்களோடு போரிட்டார்கள்.

நிறத்தால் அவர்கள் ஒரேமாதிரியாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பொது எதிரியாக தமிழர்கள் இருந்தமையால் இலகுவாக அவர்கள் ஒன்றிணைந்து கொண்டார்கள். தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்க்காக தொடர்ச்சியாக ஒன்றிணைந்து செயல்பட்டார்கள்.அந்தகாலப்பகுதிகளில் அவர்களிடம் ஒரு மதமோ இலக்கியமோ இருந்திருக்கவில்லை.அதனால் பிற்காலத்தில் சைவ சமயம் , சமணம், வைணவம் போன்ற மதங்களிலிருந்தும் தமிழ் இலக்கியங்களில் இருந்தும் பல விசயங்களைத்திருடி ,இணைத்து , வர்ணாசிரமக் கொள்கையான சாதீயக் கொள்கையைப்புகுத்தி தமக்கேற்றவாறு தம்மை முன்னிலைப்படுத்தி ஒருகொள்கையை உருவாக்கிக் கொண்டார்கள் .
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் சிந்துவெளி அழைக்கப்பட்டு பின்னர் இந்துவெளி என்று மருவி பின்னர் ஆரியர்களின் மதக்கொள்கை சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் ஹிந்து , ஹிந்துசம் என்று அழைக்கப்பட்டது.
‘இந்து மதம்’ – என்னும் பெயர் கி.பி. 1794க்கு முற்பட்ட இந்திய இலக்கியங்கள் எவற்றிலுமே இல்லாத புதுப்பெயர் ஆகும்.
மனுநூல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வருணாசிரமக் கொள்கையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்குக் கி.பி.1794இல் சர் வில்லியம் சோன்சு (Sir William Jones) என்னும் ஆங்கில நீதிபதி ‘Hinduism’ என்று புதுப்பெயர் கொடுத்தார்.
‘Hinduism’ என்பது இன்று ‘இந்துத்துவம்’ அல்லது ‘இந்துத்துவா’ என்று அழைக்கப்படுகிறது.

சைவ மதத்தை வளர்த்த நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.
வைணவ மதத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.
சைவ மத இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது.
வைணவ மத இலக்கியமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ்மொழியிலேயே இருக்கிறது.
இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் இருநூற்று எண்பது ஆகும். அவற்றுள் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன.
வைணவத் திருப்பதிகள் நூற்று எட்டில் தொண்ணூற்று ஆறு திருப்பதிகள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன.
சைவ மதத்தின் தலைமைக் கோவில் சிதம்பரத்தில் இருக்கிறது.
வைணவர்களின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் இருக்கிறது.
ஆகவே சைவமும் வைணவமும் தமிழர் சமயங்கள் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'இந்துத்துவாவின் பிடியிலிருந்து இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து எடுத்து வெளியிடப்பட்டுள்ளது)

Saivam is the oldest ancient religion of the world.
Ancient Tamil literature gives a detailed description of the Tamil religion.
In our old Tamil literature there is no word called Hindu. The word has been used by the early Persian language. People around Indus river were initially called as Sindu. Over the years, Sindu was pronounced as Hindu and India hence, the word Hindu refers to the land and people of Indus valley. The quote above clearly denotes that the word, Hindu, used by Aaryans(Persians) referred to the land of India and not to any religion.
Approximately 4500 years ago when Aaryans came to India they destroyed the ancient Tamil culture and the cities around Indus valley. They established homa worship and created mantras for it. Vaitheegam or veda culture developed simultaneously. The brahmin priests (Aaryans) who practiced them, became more powerful and classified people into four groups under the varnaasrama system and placed themselves as the highest group. Varnaasrama dharma and homa worship quickly spread to south India from north India.
Kings of south India, invited brahmin priests and homa worship was propagated in the south. Brahmin priests took over the duties of south Indian priests in the inner sanctrum of the temples, initially built by south Tamils. Thus, the varnaasrama dharma became the common dharma in India and became India’s general way of life. As India was earlier referred to as Hindu, the varnaasrama way of life was accepted as Hindu dharma. With the exception of some communities, all the others accepted this dharma which included veda culture, the usage of Sanskrit language and homa worship came under the control of brahmins and were known as Hindu religion (Hinduism)
Some traditional and aagama religions were of the opinion that they preceded vedas and hence, remained as independent religions. Those accepted Saivam did not want to be known as Hindus, as they did not accept the Aryan vedas and did not want to acknowledge the superiority of the brahmins.
Due to the conspiracy of Aaryans, some people were of the opinion that Tamils did not have any religion until recently. The historical data and information gathered from old sangam literature not only refutes this but gives very clear information about Tamil religion. The way of live of Tamils and their worship practices are shown in the priceless book, Tholkapiam and in sangam literature.

source: மகிழ்நிலா ஈழ சாதனா

Konjam siringa....

குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.
ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்!
அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!
கடுப்பான குமார், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்!
மூன்றாம் நாள்… காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.
ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டான்.
இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்? என்றாள் அவள்.
அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!

Konjamaa siringa...



மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது!!
Enna kodumai sir ithu...

Friday, February 13, 2015

How to increase Positivity in your House.

How to increase Positivity in your House.
1) Open all windows in the house and allow fresh air and sunshine to enter the house. Free flowing air and sun are excellent negativity removers. Keeping the windows closed prevents positive energy from coming inside your house and negative energy from going out.
2) Throw out all the clutter out of the house. Clean your house. Dispose of all the old unwanted things lying in the house. Clutter is a negativity magnet. It attracts and accumulates negative energy in the house.
3). Walking barefoot in the house helps all your negative energy to be absorbed by the earth.
Grounding is important to keep the energy balance in our body.
Walking barefoot on grass is also an excellent way to ground yourself.
4) Always leave your footwear at the entrance of the house. Our footwear collects negative energy.
Hence in the olden days, these were kept out of the house. People used to enter the house only after washing feet with water. This action ensures that all the negativity remains outside or are grounded by earth and does not enter the house. Now it has become difficult to keep the footwear outside. So preferably remove them near the entrance door.
5) Go out in the open air. Take walks in the garden or open ground. Being amongst nature re-energizes or charges you fully.
6) Sweeping the floor also ensures that the negative energies are shaken and moved out with the dirt.
7) Rock salt is another negativity remover. Wash or mop your floor with a fistful rock salt in a bucket of water. This ensures that every nook and corner of the house is rid of negative energy.
8) Potted plants or trees around your house or society also ensures more positive energy in the house and area.
9) Bathing or Soaking your legs and hands in rock salt water once in a while removes the negativity attached to your body.
11) Repitition of Prayers, Chants etc increases the positive vibrations in the house.
11) Keep your thoughts, action and speech Positive. Negative thoughts will bring in negative vibes. So avoid all negative thoughts, speech and actions.
12) Keep your house well lit and illuminated. Light removes negativity.
13) Keep faith in God and in yourself.
You are the Creator of your own destiny by the Choices you make.
STAY HAPPY
STAY BLESSED

# SELFRESPECT



# SELFRESPECT
*A little boy went to a telephone booth which was at the cash counter and dialed a number.
The store-owner observed and listened to the conversation:
Boy : “Lady, Can you give me the job of cutting your lawn?
Woman : (at the other end of the phone line)
“I already have someone to cut my lawn.”
Boy : “Lady, I will cut your lawn for half the price than the person who cuts your lawn now.”
Woman : I’m very satisfied with the person who is presently
cutting my lawn.
Boy : (with more perseverance)
“Lady, I’ll even sweep the floor and the stairs of your house for free.
Woman : No, thank you.
With a smile on his face, the little boy replaced the receiver.
The store-owner, who was listening to all this, walked over to the boy.
Store Owner : “Son…I like your attitude; I like that positive spirit and would like to offer you a job.”😀
Boy : “No thanks,
Store Owner : But you were really pleading for one.
Boy : No Sir, I was just checking my performance at the job I already have. I am the one who is working for that lady I was talking to!” *
** This is called self Appraisal”**
Give your best and the world comes to you !!!!! 

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்!

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37
விசயங்கள்!
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக்
கூடாது.
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக
வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப்
பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும்,
மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக
ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும்
பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை,
குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம்
தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப்
பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில்
அழைத்துச் செல்ல வேண்டும்.
15.
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல
வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன்
கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற
வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப்
பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக
இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக்
கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத
போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத்
தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம்
செய்து விட்டால் ‘இது உன் குழந்தை’
என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை,
மனைவியிடமும் காட்ட வேண்டும்.
ஏனென்றால் மனம் சலிக்காமல்
அம்மாவை விட, அக்கா, தங்கையை விட
அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன்
கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம்
சொல்லி விட்டுச் சொல்ல
வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர
வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய
வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத்
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற
தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்
கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
இனிமையான
இல்லறமாக அமைந்திட வாழ்த்துக்கள்.